jaga flash news

Monday 28 October 2024

கோலா....

கோகோ கோலா முதன் முதலில் எதற்காக கண்டுபிடிக்கப்பட்டது... அதன் பெயருக்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? குளிர்பானங்கள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது கோகோ கோலாதான். பல ஸ்பெஷலான சந்தர்ப்பங்களை மேலும் ஸ்பெஷலாக மாற்றுவது இதுதான், குறிப்பாக தியேட்டரில் நண்பர்கள் இல்லாமல் கூட பார்த்து விடலாம், ஆனால் கோகோ கோலா இல்லாமல் படம் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கூட தாகம் ஏற்பட்டால் தண்ணீருக்குப் பதில் கூல்டரிங்க்ஸ் குடிக்கும் பழக்கம் கோடிகணக்கான மக்களுக்கு வந்துள்ளது. அந்த அளவிற்கு சோடா பானங்கள் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டன. உலகளவில் சோடா துறையில் ஆதிக்கம் செலுத்தும் விருப்பமான குளிர்பான பிராண்டுகளில் ஒன்றாக கோகோ கோலா உள்ளது. 
இதன் தனித்துவமான சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆனால் கோகோ கோலா எவ்வளவு பழமையானது அல்லது அதை உருவாக்கியவர் யார் தெரியுமா? அனைத்திற்கும் மேலாக கோகோ கோலா முதலில் குளிர்பானமாகவே கண்டறியப்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? கோகோ கோலா கண்டுபிடிக்கப்பட்ட நோக்கம் கோகோ கோலா முதன்முதலில் உருவாக்கப்பட்டபோது,​​​​தொடக்கத்தில் தலைவலிக்கான தீர்வாககவே இது பயன்படுத்தப்பட்டது நம்மில் பலரும் அறியாதது. இது போதைப் பழக்கத்தைத் தடுக்கும் நோக்கத்தில் ஒரு மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டது, இது ஒரு சிரப்பாக உருவாக்கப்பட்டது. இருப்பினும், மக்கள் அதை சுவையை மிகவும் ரசித்தனர், இதனால் அந்த நிறுவனம் அதை ஒரு குளிர்பானமாக விற்கத் தொடங்கியது.

 கோகோ கோலாவை கண்டுபிடித்தது யார்?

 கோகோ கோலாவை டாக்டர் ஜான் பெம்பர்டன் என்பவர் கண்டுபிடித்தார், 
அவர் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த ஒரு மருந்தை உருவாக்கும் போது இதை உருவாக்கினார். 
கோகோ கோலா மே 8, 1886 அன்று அட்லாண்டாவில் ஜார்ஜியாவின் ஜேக்கப் பார்மசியில் கண்டுபிடிக்கப்பட்டது,

 டாக்டர் பெம்பர்டன் மக்கள் குடிக்க ஒரு சிரப்பைத் தயாரித்தார். 

அவர் அதை அறிமுகப்படுத்தியபோது,​​மக்கள் அதன் சுவையை மிகவும் விரும்பினார்கள், எனவே அந்த நிறுவனம் அதை ஒரு பானமாக விற்க முடிவு செய்தது. "அவர் தன்னுடைய புதிய தயாரிப்பை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அட்லாண்டாவில் உள்ள ஜேக்கப்ஸ் மருந்தகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு, அது மாதிரி எடுக்கப்பட்டு, "Excellent" என்று உச்சரிக்கப்பட்டது மற்றும் ஒரு கிளாஸ் ஐந்து சென்ட்டுக்கு ஒரு சோடா நீரூற்று பானமாக விற்பனைக்கு வைக்கப்பட்டது" என்று கோகோ கோலாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது. கோகோ கோலா பெயர் காரணம் உலகளவில் பில்லியன் கணக்கான பாட்டில்கள் விற்கப்படும் தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது,​​அதன் முதல் ஆண்டில், Coca-Cola தினமும் ஒன்பது பாட்டில்களை மட்டுமே தயாரித்தது. காஃபின் மற்றும் கோகோ இலைகளை உள்ளடக்கியதால் இதற்கு கோகோ கோலா என்று பெயரிடப்பட்டது. கோகோ கோலா எப்படி இந்தியாவிற்கு வந்தது? Coca-Cola 1949 இல் இந்தியாவில் தனது பயணத்தைத் தொடங்கியது, ஆரம்பத்தில் Pure Drinks மூலம் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது. ஆனால் 1977-களில், கோகோ கோலா இந்திய சந்தையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது, இதற்கு காரணம், அந்நியச் செலாவணி விதிமுறைகளின் படி, இந்தியப் பங்குதாரர் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருக்க வேண்டும். பின்னர், பெப்சிகோ இந்தியாவில் நுழைந்தது, மேலும் 1991 க்குப் பிறகு கோகோ கோலா அதன் தயாரிப்புகளை மீண்டும் அறிமுகப்படுத்தி கோலோச்சத் தொடங்கியது.

No comments:

Post a Comment