மகர லக்னம் சனி - கேது சேர்க்கை
மயிர் நீத்தால் உயிர் நீங்கும் தன்மானச் சிங்கங்கள்
தலையை அடகு வைத்தாவது சொன்ன சொல்லை நிறைவேற்றுவார்கள்.
எண்ணெயில் போட்ட வடை மாதிரி கொதிப்பார்கள்.
குடும்பத்தோடு சட்டென்று ஒட்டாத ஒரு குணம் இருக்கும்.
அதிகாரம், பணிவு, கற்றுக்கொடுத்தல் என்ற மூன்று குணங்களும் சமமாக இருக்கும்.
எந்த கருத்தைச் சொன்னாலும் அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று பார்ப்பார்கள்.
பிரபலமானவரோடு தன்னை இணைத்துப் பேசுவதில் மிகுந்த விருப்பமிருக்கும். எனக்கும், அவருக்கும் ஒரே நட்சத்திரம்... என்று ஒப்பிட்டுக் கொண்டு பெருமைப்படுவார்கள்.
வார்த்தைகளை விட காட்சிகளாக விஷயங்களை நினைவிற்குள் கொண்டு வந்து நிறுத்துவார்கள்.
மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால்,
மகர லக்னத்திலேயே அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும், கேதுவும் சேர்க்கை பெற்றிருந்தால் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாததுபோல இருப்பார்கள்.
தலைமைப் பொறுப்பு கைக்கு வந்தாலும், அதை ஏற்றுக்கொண்டு மற்றவர்களை வழிநடத்த யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.
சிறந்த ஆன்மிகவாதிகளாகவும் அலங்காரமான பேச்சு மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
பணத்தின் பின்னால் ஓட மாட்டார்கள். அதனாலேயே பணவரவும் குறைவாகத்தான் இருக்கும்.
தொழில் அதிபர்களாகவும், சமூக சீர்திருத்த சிந்தனையாளர்களாகவும் விளங்குவார்கள்.
No comments:
Post a Comment