jaga flash news

Thursday, 4 September 2025

திருமணத்தில் பந்தக்கால் ஊன்ற இதுதான் காரணம்


கல்யாண வீடுகளில் முகூர்த்தக்கால் நடுவது ஏன் தெரியுமா? திருமணத்தில் பந்தக்கால் ஊன்ற இதுதான் காரணம்

பெரியோர்களால் சுற்றம் சூழ நடத்தப்படும் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம் என்பதை குறிப்பதற்காகவே, திருமணத்திற்கு முன்பு பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் ஊன்றப்படும் வழக்கம் நம்முடைய வழக்கத்தில் இருந்து வருகிறது. இப்படி முகூர்த்த கால் நடப்பட்ட பிறகு துக்க நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள கூடாது என்ற கட்டுப்பாடும் நடைமுறையில் இன்றுவரை உள்ளது. திருமண வைபவங்களில் இந்த முகூர்த்தக்கால் ஊன்றப்பட என்ன காரணம்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.


அன்றைய அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் திருமணம் செய்யும்போது அரசனுக்கும் அழைப்பிதழ் அனுப்புவார்கள். அப்படி அழைப்பு தந்த அனைவரின் திருமணத்துக்கும் அரசரால் சென்றுவர இயலாது.



ஆணைக்கோல் ஆசீர்வாதம்
அதனால் தன்னுடைய சார்பாக அவர் ஆணைப்படி ஆணைக்கோலை அனுப்பி வைப்பார். அரசரின் ஆணைக்கோல் வந்துவிட்டால் அரசனால் அந்தத் திருமணம் அங்கீகரிக்கப்பட்டதாக நினைத்து அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள்.. அரசு ஆணைக்கோல் என்பதே பின்னாளில் மருவி, அரசாணைக்கோல் ஆகிவிட்டது..


பொதுவாக, வீடுகளில் திருமணம் என்றாலே, முகூர்த்த நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு வீட்டின் ஈசான்ய மூலையில் பந்தக்கால் நடுவார்கள்.. இந்த பந்தக்கால் நடுவதற்கு மூங்கில் மரம், துளிர்விடும் பலா மரம், கல்யாண முருங்கை போன்றவைகளில் ஏதாவது ஒன்று பயன்படுத்துவார்கள்.

பச்சை மூங்கில்
இதற்கு காரணம், மூங்கில் அல்லது துளிர்விடும் பலா மரம் செழித்து வளர்வது போல, மணமக்களும் தங்கள் வாழ்க்கையில் செழித்து வளர வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.. பெரும்பாலும் பச்சை மூங்கிலை வெட்டி முகூர்த்தக்கால் நடப்படுகிறது. ஏனென்றால், மூங்கிலைப் போல் வம்சம் விருத்தி அடைய வேண்டும் எனவும், இரு பக்கம் வாழை மரம் கட்டுவார்கள். வாழையடி வாழையாக குடும்பம் வளரவேண்டும் என்பதற்காகவும் இம்முறை கடைப்பிடிக்கப்படுகிறது.



அதேபோல, சிவனுக்குரிய திசையாக ஈசானிய மூலை கருதப்படுவதால், சிவனின் அருளுடன் திருமணம் நடந்து முடிக்கவே வடகிழக்கு மூலையில் பந்தக்கால் நட்டு வைக்கப்படுகிறது.

முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
திருமணம் மட்டுமல்லாமல், சுப நிகழ்ச்சிகள், கோவில்களில் திருவிழாக்கள் துவங்குவதற்கு முன்பும் பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றன..

அப்படி பந்தக்கால் வைக்கும்போது, மேற்கண்ட மரத்திலுள்ள ஒரு கிளையை வெட்டி அதிலுள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டிவிட வேண்டும்.. பிறகு, மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் வைத்து, ஒரு வெள்ளை துணியில் செப்புக்காசை முடிந்து நடவேண்டும்..


மஞ்சள் பிள்ளையார்
பந்தக்கால் நடும் குழியில் பூக்கள் சாத்தி, தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். பிறகு, அந்த குழிக்குள் நவதானியங்களையும், பாலையும் ஊற்றுவார்கள்.. பிறகு, மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு மற்றும் பழம் வைத்து தேங்காய் உடைத்துத் தீபம் காட்டி பிறகு பந்தக்காலை நிலத்தில் ஊன்றுவார்கள்..

பந்தக்கால் நட்ட பிறகும்கூட, பந்தல் போடும் வேலையும் தொடர்ந்து செய்வார்கள்.. பிறகு உறவினர்களுடன் சேர்ந்து இருவீட்டாரும் அவரவர் வீட்டில் விருந்து சாப்பிடுவார்கள்.. ஆனால், முகூர்த்தக்கால் ஊன்றிய பின் இருவீட்டாரும் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவிதமான துக்க நிகழ்ச்சிகளிலும் பங்குபெறுதல் கூடாது என்பார்கள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகள்
இது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வழிபட்டு தொடங்குவதாக தாத்பர்யமாகும். அதாவது முகூர்த்த காலின் அடிப்பாகத்தில் பிரம்மாவையும், நடு பாகத்தில் விஷ்ணுவையும், உச்சியில் பரமேஸ்வரனையும் தியானித்து, ஆவாஹணம் செய்து அந்த விழா நடந்தேறும் வரை இவர்கள்தான் துணையிருந்து காத்தருள வேண்டும் என்ற பிரார்த்தனையை முன்வைத்துத்தான் முகூர்த்தக்கால் என்பது நடப்படுகிறது.



4 comments:

  1. மிக அருமை அய்யா வெ.சாமி அவர்களே ! அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.

    ReplyDelete
  2. Mon. 8, Sep. 2025 at 10.53 pm.

    இப்பேரண்டத்தில் ஈரேழு (2 × 7 = 14) பதினான்கு லோகங்கள் உள்ளன. அவை மேலுலகம் + கீழுலகம் ஆகும்.

    *மேலுலகம் 7 :*
    1. பூலோகம்
    2. புவர்லோகம்
    3. சுவர் லோகம்
    4. மஹர்லோகம்
    5. ஜனலோகம்
    6. தபலோகம்
    7. சத்திய லோகம்
    என்பன.

    *கீழுலகம் −7 :*
    1.அதல
    2. சுதல
    3. நிதல
    4. கபஸ்தல
    5. மஹாதல
    6. ஶ்ரீ தல
    7. பாதாளம்
    என்பன.
    Jansikannan60@gmail.com

    ReplyDelete
  3. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். சரஷ்வதி & ஆயுத பூசை நல்வாழ்த்துகள் அடியேனை ஆசீர்வதியுங்கள் அய்யா.

    ReplyDelete
  4. Ayya V.Samy avarkalukku Namaskaram. I want to Swarachakra in tamil ayya. Aanmega message type panna athuvey thothuvaga erukkum ayya. Help me ayya.

    ReplyDelete