jaga flash news

Tuesday 9 October 2012

"வாழ்த்த வயதில்லை! வணங்குகிறோம்!!"


உயிருடன் இருக்கும் ஒருவரை, நீ செத்துத் தொலை எனச் சொல்வதற்கு ஈடான சொற்றொடரே இது!!

உன்னை வாழ்த்துமளவுக்கு உனக்கு இனிமேல் ஆயுள்(வயது) இல்லை. ஆகவே மறைந்த ஒருவரை நினைந்து வணங்குதல் போல் நின்னையும் வணங்குகிறோம் என்பதே இது. அதாவது "நீ சாவு" என்பதாகும்.

உயரிய வயது மற்றும் இடத்தில் இருப்பவருக்கு பணிவைக் காண்பிப்பது தமிழ் மரபுதான். அதை வெளிப்படுத்த, "தங்களை வாழ்த்தி வணங்குகிறோம்!" எனச் சொல்வதே சரியானது.

No comments:

Post a Comment