நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளையே சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு நோயின்றி நூறாண்டு வாழ்ந்தனர். ஒவ்வொருவீட்டிலும் சமையல் அறையிலுள்ள அஞ்சறைப் பெட்டியில் அற்புத மருந்துகள் இடம்பெற்றிருக்கும்.
உணவோடு சேர்ந்து நம் உடலைக் காக்கும் அற்புத கூட்டணிதான் இந்த அஞ்சறைப் பெட்டி பொக்கிஷங்கள்.
இந்த அஞ்சறை பெட்டியில் உள்ள அற்புதமான அரு மருந்து மற்றும் உணவுப் பொருட்களில் நாம் அதிகம் பயன்படுத்துவது கடுகு. கடுகை மூன்று வகைகளாக கூறுவர். நாய்கடுகு, மலைக்கடுகு, சிறு கடுகு என்று.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி. கடுகு அந்தளவிற்கு முன்னோர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இதன் பயன்களும் ஏராளம்.
நீரழிவு நோயை கட்டுப்படுத்த…
கடுகு, ஆவாரை விதை, மரமஞ்சள், கருவேலம் பிசின் ஆகியவற்றை எடுத்து சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
வீட்டில் அம்மி இருந்தால் அதில் இவற்றை வைத்து இடித்து பொடியாக்க வேண்டும்.
இதனை நீர்விட்டு பிசைந்து சூரணமாக்கி வைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த சூரணத்தை 1-2 கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
வீட்டில் அம்மி இருந்தால் அதில் இவற்றை வைத்து இடித்து பொடியாக்க வேண்டும்.
இதனை நீர்விட்டு பிசைந்து சூரணமாக்கி வைத்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் இந்த சூரணத்தை 1-2 கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
சிறுநீர் பெருக்கி
கடுகை அரைத்து தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.
கடுகு எண்ணெய்
கடுகிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை வட இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். கொழுப்பு சத்து அதிகமில்லாத இந்த எண்ணெய் இதய நோயை தடுக்கும்.
விக்கல் நீங்க
வெந்நீர் – 130 மி.லி. எடுத்து அதில் கடுகுத்தூள் – 8 கிராம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் நீங்கும்.
மேலும் பல பயன்கள்
விஷம், பூச்சி மருந்து, தூக்க மாத்திரை போன்றவற்றை சாப்பிட்டவர்களுக்கு, 2 கிராம் கடுகு நீர் விட்டு அைத்து நீரில் கலக்கி உட்கொள்ளக் கொடுத்தால் உடனடியாக வாந்தி எடுக்க விஷம் வெளியேறும்…
தேனில் கடுகை அரைத்து உட்கொள்ளக் கொடுக்க இருமல், கபம், ஆஸ்துமா குணமாக்கும்.
கடுகை தூள் செய்து வெந்நீரீல் ஊற வைத்து வடித்து கொடுக்க விக்கலை குணப்படுத்தும்
கடுகை அரைத்து பற்றிட ரத்தக்கட்டு, மூட்டு வலி தணியும்
கை, கால்கள் சில்லிட்டு விரைத்துக் காணப்பட்டால் கடுகை அரைத்து துணியில் தடவி கை, கால்களில் சுற்றி வைக்க வெப்பத்தை உண்டாக்கும் உடனடியாக விரைப்பு சீராகும்.
கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டிக் காதில் சில சொட்டுகள் இட தலைவலிக்கு நிவாரணம் கிட்டும்…
No comments:
Post a Comment