jaga flash news

Monday, 19 November 2012

ராஜகிரகங்கள் என அழைக்கப்படும் குருவும், சனியும் ஒரே வீட்டில் இருந்தால்?

ஜோதிடத்தைப் பொருத்த வரை சனி, குருவுக்கு மட்டுமே ராஜ கிரகங்கத்திற்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தீர்கள். இதில், ஒருவரது ஜனன ஜாதகத்தில் ஒரே வீட்டில் இந்த 2 கிரகங்களும் இருந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.

குரு, சனி சேர்ந்திருந்தால் அதனை குரு சண்டாள யோகம் என்று கூறுவர். பொதுவாக வேதம், உபநிடங்கள் இதற்கெல்லாம் உரிய கிரகம் குரு. அதேபோல் சனி சத்ரிய கிரகம் என்று கூறுவர். எனவே, குரு-சனி சேர்க்கை பெற்றவர்கள் அனைத்திலும் திறமையானவர்களாகத் திகழ்வர். 

ஆனால் எந்த லக்னத்திற்கு குரு-சனி ஏற்றது என்பதையும் இங்கே கண்டிப்பாக பார்க்க வேண்டும். ஏனென்றால் மேஷ லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் ஒரு பலனையும் அளிக்காது. நல்ல பலனைத் தராது என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் ரிஷப லக்னத்திற்கு இந்த யோகம் இருந்தால் சிறு வயதிலேயே பெற்றோர் உயிரிழப்பது அல்லது தகப்பானருக்கு சில இடர்பாடுகள் ஏற்படுவது.

மிதுன லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் இருந்தால் திருமணத் தடைகள் ஏற்படும். திருமணத்திற்கு பின்னரும் மனைவி தரப்பில் சில சிக்கல்கள் காணப்படும்.

கடகம் மற்றும் சிம்ம லக்னத்திற்கு குரு சண்டாள யோகம் அமைந்தால் உத்தமமான மனைவி, மனைவி அமைந்த பின் யோகப் பலன்கள், வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும்.கன்னி லக்னத்திற்கு உத்தியோகத்தில் பிரச்சனைகள், மண வாழ்க்கையில் பிரச்சனைகளை குரு சண்டாள யோகம் ஏற்படுத்தும். 

துலா லக்னத்திற்கு இந்த யோகம் காணப்பட்டால், ஓரளவு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் விருச்சிக லக்னத்திற்கு குரு-சனி சேர்க்கை நன்மையை அளிக்கும். வேதங்கள், இதிகாசங்களில் ஆர்வம் ஏற்படும். 

தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய லக்னங்களுக்கு குரு-சனி சேர்க்கை மிகப் பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இவர்களுக்கு குரு அல்லது சனி தசை நடக்கும் போது ராஜ யோகத்தின் பலன்களை அனுபவிப்பார்கள்.

பொதுவாக எந்த லக்னத்தில் பிறந்திருந்தாலும் குரு-சனி சேர்க்கை 11வது இடத்தில் அமைந்திருந்தால், அது யோகப் பலன்களை அளிக்கும். அது சர லக்னமாக இருந்தாலும் நல்ல பலன்கள் கிட்டும். இதற்கு காரணம் குரு, சனி இருவருக்குமே 11ஆம் இடம் உகந்தது என்பதே.

கேந்திர வீடுகளில் (குறிப்பாக 4ஆம், 7ஆம் இடத்தில்) குரு-சனி சேர்க்கை இல்லாமல் இருந்தால் நல்லது. 

குரு-சனி சேர்க்கை நன்றாக இல்லாத இடங்களில் காணப்பட்டால் ஈமச் சடங்குகளுக்கு உதவலாம் (ஏனெனில் சனி கர்மத்திற்கு உரிய கிரகம்). நல்ல வேதம் தெரிந்த அந்தணர்களுக்கு உதவலாம். மேலும் குருவும், சனியும் ஆலயத்திற்கு உரிய கிரகங்கள் என்பதால் அவற்றை புதுப்பிக்க, சீரமைக்க உதவலாம்.

3 comments:

  1. கும்பம்,லக்னத்திற்கு குரு-சனி சேர்க்கை 8 ல்

    ReplyDelete
    Replies
    1. என்னென்ன பலன்கள் கிடைக்கும்

      Delete