jaga flash news

Thursday, 15 November 2012

பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது?


சென்னை ரயில்களில் வந்த அப்பெட்டிகளைப் பார்த்தபோது, அதிகா ரிகள் அதிர்ந்துபோனார்கள்  முடை நாற்றம் எடுக்க. அழுகிய நிலையில் இருந்தது இறைச்சி. அடுத்தடுத்த நாட்களில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த சரக்கு ரயில் பெட்டிக ளைச் சோதித்த போது மேலும் பல பெட்டிகள் சிக்கின. இப்படிக் கைப்ப ற்றப்பட்ட இறைச்சியின் மொத்த அளவு எவ்வளவு தெரியுமா? ஒன்ற ரை டன். எங்கிருந்து வருகிறது இந் த இறைச்சி என்பதுகுறித்து அதிகாரிகளுக்கு இதுவரை துல்லியமா கத் தெரியவில்லை. ஆனால்,அது எங்கே போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து இருக்கிறது… உங்களு டைய வயிறு!
ஆமாம். தமிழகத்தில் ஆட்டி றைச்சியின் விலை 400 ரூபா யைத் தாண்டிவிட்டது. வெளி மாநிலங்களில் இருந்து அது 200 ரூபாய்க்குள் கிடைத்தா ல் லாபம்தானே? இந்த லாப வெறிதான் சாலையோர உணவகங்களில் இருந்து பெரிய உணவு நிறுவனங்கள் வரை இது போன்ற சட்டத்துக்குப்புற ம்பான, சுகாதாரமற்ற இறைச்சியை வாங்க வைக்கிறது.
இறைச்சி சாப்பிடும்போது நம்மை நாமே எப்படி பாதுகாத்துக் கொள் வது  ?
 
‘பொதுவாக, ஆட்டுத்தொட்டியில் வெட்டப்படும் இறைச்சியை நான் கு மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் பதப்படு த்தாமல் வைத்திருந்தால், இறை ச்சி அழுக ஆரம்பித்துவிடும். குளிர் பதனப் பெட்டிகளில் மைனஸ் 15 முதல் மைனஸ் 18 டிகிரி செல்ஷி யஸ் அளவுக்கு இறைச்சியை ஒரு வாரம் வரை வைத்துப் பயன்படுத் தலாம். பொதுவாக, ஆடுமாடு உடலில் கிளாடீரியம், ஸ்டப்லாகாக ஸ் , எக்கினோ காகஸ், ஈகோலி, ஆஸ்காரிஸ் போன்ற ஏராளமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. ஆடு மாடு இறந்ததும் இவை அதிக அளவில் பல்கிப் பெருகி அதைச் சிதைக்க ஆரம்பிக்கின்றன. இத னால், இறைச்சி அழுக ஆரம்பிக் கிறது. மேலும், பூஞ்சைத் தொற்று ம் ஏற்படலாம். எனவே, கால்நடை களை வெட்டிய அடுத்த சில மணி நேரங்களில் சமைத்துச் சாப்பிடுவதுதான் நோய்க் கிருமிகளைத் தவிர்க்க ஒரே வழி. கெட்டுப்போன இறைச்சியில் உள்ள கிருமிகள் மனித உடலுக்குள் செல்லும்போ து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத் தும். ரத்தக்குழாய்கள் வழியே செ ன்று மூளையைப் பாதிக்கும். ஹைடாடிட் என்ற ஒட்டுண்ணியா னது கல்லீரலுக்குச் சென்று அங்கு கட்டியை உருவாக்கும். நுரையீர லை அடையும் கிருமிகள் சுவாசப் பிரச் னை, இடைவிடாத இருமல், சளி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும். தசைகளில் தங்கும் கிருமிகள் தீராத வலியை ஏற்படுத்தும். இது தவிர, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவையும் ஏற்படலாம்.பாதுகாப்பு இல்லாத இறைச்சியை ஈக்கள் மொய்க்கும்போது காலரா போன்ற நோய்கள் ஏற்படும்
 
பாதுகாப்பான இறைச்சியை எப்படிப் பார்த்து வாங்குவது?
 
1.நீங்கள்செல்லும் இறைச்சிக் கடை தினந்தோறும் திறக்கக் கூடிய தா?
2. அந்தக் கடைக்கு அரசு உரிமம் உள்ளதா?
3. கடையில் சுத்தமான சூழல் உள்ளதா?
4. இறைச்சி பக்கத்தில் நிற்கும்போது மொஞ்சை (கவுச்சி) வாடை அடிக்கக் கூடாது.
5. இறைச்சி நிறம் மிகவும் சிவப் பாகவோ, மிக அதிகம் வெளுத் துப் போயோ இருக்கக் கூடாது. இறைச்சி இளஞ்சிவப்பு நிறத்தி ல் இருக்க வேண்டும்.
6. கறியைத்தொட்டுப் பார்த்தால் ஜில் என இருக்கக் கூடாது. அப் படி ‘ஜில்’ என இருந்தால் அது குளிர்பதனப் பெட்டியில் வைத்த முந்தைய நாள் இறைச்சியாக இரு க்கலாம்.

1 comment: