jaga flash news

Monday 12 November 2012

வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு


வாகனயோகம் யாருக்கு ஜோதிடக்குறிப்பு



நான்காம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் லக்கினத்தில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் ஜாதகர் அதிக தனமும் ,வாகனங்களும் உடையவராக இருப்பார் .
குருபாகவானும் நான்காம் இடத்தில் அமர அல்லது நான்காம் பாவத்தை பார்க்க நல்ல சுகமும் வாகன யோகமும் உண்டாகும் .
சுக்கிரன் நான்காம் அதிபதி ஆகி பதினொன்றில் அமர்ந்தால் அதிகமான வாகனயோகம் உள்ளவர் ஆவார் .
நான்காம் அதிபர் சந்திரனோடு சேர்ந்து இருந்தால் அநேக வாகனங்கள் உண்டு.
சுக்கிரன் சந்திரனோடு சேர்ந்து இருந்தாலும் அல்லது சுக்கிரன் சந்திரனுக்கு 5, 9ல் அமர்ந்து இருந்தாலும் கண்டிப்பாக நான்கு சக்கர வாகன யோகம் உண்டு.
கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு புதன் சுக்கிரன் சேர்ந்து நான்காம் பாவத்தில் இருந்தால் புதன் திசையில் சுக்கிர புத்தி நடக்கும் போது வாகனயோகம் உண்டாகும் .
நான்காம் பாவாதிபதியும் ஒன்பதாம் பாவதிபதியும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் எப்போதும் வாகன‌ யோகம இருக்கும்.
நாலாம் பாவாதிபதியும் பதினொன்றாம் பாவாதிபதியும் பரிவர்த்தனை பெற நல்ல வாகனங்கள் அமையும்.
நாலாம் பாவாதிபதியும் ஐந்தாம் பாவாதிபதியும் பரிவர்த்தனைபெற்றால் வாகனயோகம் உண்டு .
நாலாம் பாவாதிபதியும் இலக்கினாதிபதியும் பரிவர்த்தனை பெற்றால் ஜாதகர் வாகனம் மூலம் வருமானம் பெறுவார்.
குரு சுக்கிரன் சனி நான்காம் இடத்தில் அல்லது கேந்திரகோணம் அடைந்து இருந்தாலும் வாகனயோகம் உண்டு .
நான்காம் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருந்தால் வாகன யோகம் உண்டு.
சுக்கிரன் செவ்வாய் ஜாதகத்தில் கெடாமல் இருந்தால் வாகன யோகம்உண்டு.

3 comments: