jaga flash news

Friday, 23 November 2012

குணங்களுக்கு காரணம் ஜீனா ? வளர்ப்பு சூழலா ?

வீம்புக்காக , ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற வேண்டும் என்ற அக்கறையில் நான் போட்ட பதிவில் சாதியுண்டு, சாதிக்கொரு புத்தியுண்டு என்று குறிப்பிட்டிருந்தேன். அதில் குணங்களுக்கு காரணம் ஜீன் களே என்று ஒரு கருத்து தெரிவித்திருந்தேன்.

குழலி அவர்கள் எங்கே த‌வறான செய்தி பரவிவிடுமோ என்ற பதற்றத்தில் அக்கறையுடன் மறுமொழியிட்டார். வளர்ப்பு சூழலே குணங்களை நிர்ணயிக்கும் என்று கூறியிருந்தார்.அவருக்கு முதற்கண் நன்றி. 

ஃபெர்ணான்டோ அவர்கள் இல்லையில்லை ஜீனிலேயே முடிவு செய்யப்படுகிறது. வளர்ப்பு சூழல் ச்சும்மா நகாசு வேலைதான் செய்யும் என்று மறுமொழியிட்டார். அவரது ஆங்கில மறுமொழியை நான் புரிந்து கொண்ட லட்சணம் இது. ஆனால் என் + குழலியின் கருத்துக்கள் இரண்டுமே சரிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சாலமன் பாப்பைய்யா ஸ்டைலில் சொன்னால் குணங்களுக்கு காரணம் ஜீன்களா ? வளர்ப்பு சூழலா? என்பதே பஞ்சாயத்து.
நான் படித்தறிந்தவற்றை அப்படியே நம்பும் சாதியில்லை. (த பர்ரா மறுபடி சாதி) குடிகாரன் ,கூத்திக்கள்ளன்,கொலைகாரன்,நத்தம், நாடோடி, பொறம்போக்கு, அரை டிக்கட்டு, கால் டிக்கட்டு கூடவும் நமக்கு பேச்சு வார்த்தை உண்டு. ஒரு ஜோதிடனாய், நிருபனாய் வி.ஐ.பிக்களை க்ளோசப்பில் பார்க்கும் வாய்ப்பும் உண்டு . எனவே நான் படித்த‌வற்றை எனக்குள்ள மேற்படி சர்க்கிளில் அப்ளை செய்து மார்க்கு போட்டு அப்புறம்தான் நம்ம டேட்டா பேஸ்ல சேர்ப்பேன். 

தாயை போல் பிள்ளை, நூலைப்போல் சேலை , புலிக்கு பிறந்தது பூனையாகுமா இத்யாதி பழமொழிகளை முன் வைக்க விரும்பவில்லை. காரணம் வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை ரோகி இத்யாதி பழமொழிகளை நீங்கள் முன் வைப்பீர்கள். இங்கு எந்த கருத்துமே 100 சதம் உண்மையுமல்ல/ அவை 100 வருடங்களுக்கு உண்மையாகவே இருக்குமென்ற நம்பிக்கையுமில்லை. 

நான் படித்தது + அனுபவத்தில் அப்ளை செய்து ஒப்புவது:

உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. இவை ஒவ்வொரு ரசாயனத்தை சுரந்து ரத்தத்தில் கலக்கின்றன. 

இவை சுரந்து கலக்கும் ரசாயனங்களுக்கும் கோழைத்தனம், வீரம், சுய நலம், தியாகம் ,காமம், காதல் இத்யாதி குணங்களுக்கும் தொடர்பு உள்ளது. 

உதாரணமாக நாம் ஒரு விசயத்தை ஒரு ஸ்டேஜில் விட்டுவிட்டு அடுத்த விசயத்தை யோசிக்க ஆரம்பித்து விடுகிறோம். ஆனால் சிலர் அதே விசயத்தை வருடக்கணக்கில் யோசித்து பைத்தியமே ஆகிவிடுகின்றனர். 

உ.ம் நம்மை பார்த்து (?) ஒருவன் காறித்துப்புவது . இதற்கு காரணம் குறிப்பிட்ட ரசாயனம் அவன் உடலில் குறைவாய் இருப்பதே. இதை டாக்டர்கள் வெளியிலிருந்து இஞ்செக்ஷன் மூலம் தருகிறார்கள். வியாதி கட்டுப்படுகிறது.

"சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி " மூலம், ரத்தக்கொதிப்பு, இத்யாதி மனிதனின் குணத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுவதை மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த வியாதிகளுக்கு மூலம் (பைல்ஸ் இல்லிங்க) ஜீன் களில் உள்ளது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளுக்கெல்லாம் தலைவன் ஹைப்போதலாமஸ். இதன் கட்டளைப்படி இதர சுரப்பிகள் வேலை செய்கின்றன.(ரசாயனங்களை சுரக்கின்றன) ரசாயனங்களுக்கேற்ற குணம் ஏற்படுகிறது.

மேற்சொன்ன நாளமில்லா சுரப்பிகளை,அவற்றின் சுரப்புகளை யெல்லாம் கட்டுப்படுத்தும் தலைவனான ஹைப்போதலாமசை கட்டுப்படுத்துவது எது தெரியுமா? நமது எண்ணம் . 

இதைத்தான் நமது முன்னோர் எண்ணம் போல் மனம், மனம் போல் வாழ்வு என்று கூறியுள்ளனர் போலும். நீங்கள் கூறும் வளர்ப்பு சூழல் மேற்படி குழந்தையின் (விதையொத்த) அடிப்படை எண்ணத்தை மாற்றியதென்றால் ஜீன் எல்லாம் உடலை பாதிப்பதோடு நின்று விடும். காந்தி தாத்தா கூட " ஃபைண்ட் எ வில். வில் ஃபைண்ட்ஸ் தி வே என்றார். 

வானத்தில் பறப்பதற்கு முன் விமானம் ரைட் சகோதரர்களின் எண்ணத்தில் தான் பறந்தது. அந்த எண்ணம் வலுவானதாக இருக்கவே ஆகாயத்திலும் பறக்க முடிந்தது. 

தாங்கள் கூறிய கருத்தாகட்டும், எனது பதிவிலான கருத்துகள் ஆகட்டும்,
ஜோ அமலன் ஃபெர்ணான்டோ அவர்கள் தம் மறுமொழியில் கூறியுள்ள கருத்துக்கள் ஆகட்டும் சரியானவையே . ஆனால் இவை உண்மையாவதை சாதாரணர்கள் வாழ்வில் ம‌ட்டுமே நாம் காணமுடியும்.

வாழ்வை வெறுமனே ஜீன் கள், வளர்ப்பு சூழல் மட்டுமல்ல பல்வேறு அம்சங்கள் நிர்ணயிக்கின்றன.

ஆனால் 00.01 சதவீதம் மனிதர்கள் வாழ்வில் பார்க்கும்போது இந்த கருத்துக்கள்/விதிகள் எல்லாம் நான்கு கால்களையும் தூக்கிவிடுகின்றன. இதற்கு காரணம் நாளமில்லா சுரப்பிகளை கட்டுப்படுத்தும் ஹைப்போதலாமசை கட்டுப்படுத்தக்கூடிய விதை கருத்து அவர்களில் புதைந்திருந்ததாக இருக்கலாம். வெளியிலிருந்து விதைக்க பட்டதாய் இருக்கலாம். அது செழித்து வளர ஆகாய வெளியின் அகண்ட பாத்திரத்து அமுதம் உதவியிருக்கலாம்.

மற்றபடி 99.09 சதவீதம் கேஸ்களில் நாம் மூவர் கூறிய கருத்துக்கள் 100 சதம் கரெக்டுதான். 

2 comments:

  1. Very fine. இதுதான் உ்ண்மை. நாளமில்லாச் சுரப்பிகளின் குறைபாடு, also ஜீன், நம்மிடம் உள்ள நட்பு வட்டாரங்கள், நமக்கு நேர்ந்த அனுபவங்கள், நமக்கு சம்பவித்த , நாம் சந்தித்த அனுபவங்கள், கவலைகள், கஷ்டங்கள், அனைத்திலிருந்தும் தான், ஒரு மனிதன் உருவாகுகிறான். எது எப்படி இருந்தாலும், தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும், தாயை தண்ணீர் கரையில் பார்த்தால், மகளை வீட்டிலேயா போய் பார்க்கவேண்டும், என்ற பழமொழிகள் இருந்தாலும், நமக்கு கிடைத்தவற்றை வைத்து, நம்மை, குடும்ப சூழலுக்கு ஏற்றவாறு, உருவகப்படுத்திக்கொண்டால், அங்கு, சாதியோ, மதமோ, பழக்க வழக்கங்களோ, அனைத்தும் பெரிதாகப்படாது. அங்கு, ஒரு கூட்டுக் குடும்பமாக, என் கணவர் R மனைவி, நம் குழந்தை, நம் குடும்பம், நம் வீட்டு பழக்க வழக்கம் (என் வீடு என்று அல்ல) என்று உருமாறி விடுகின்றன. அந்த குடும்பத்தில், சாதியும்,மதமும், தாண்டவமாடாது. பண்டமெண்டல், சரியாக இருந்தால், அனைத்துமே அடிபட்டுவிடும்.

    ReplyDelete
  2. அய்யா! அதற்காக எல்லாருக்கும் நாளமில்லா சுரப்பி, சரிவர சுரக்கவில்லை என ஒட்டுமொத்தமாக நினைத்துவிடல் ஆகாது.

    ReplyDelete