jaga flash news

Thursday, 15 November 2012

சிக்கனமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிக்க முடியுமா?’


சிக்கனமாக ஒரு கல்யாணத்தை நடத்தி முடிக்க முடியுமா?’ என்கிற கவலைதான் பலரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது!
பெற்றோர் தங்கள் பிள்ளைக்கு நகை, சீர், ஆடைகள் என அத்த னையும் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தாலும், மேடை அலங் காரம் முதல் பந்திக்கான மெனு வரை ‘திருமணச்செலவுகள்’ என் ற விஷயம் பயமுறுத்துவதாக வே இருக்கும்.

”அஞ்சு லட்சம் ஒதுக்கியிருக்கேன்”.பத்துமானு தெரியல! என்று பதறாமல், திருமண தினத்து க்கான ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டுச் செய்தால், பணத்தை மிச்சப்படுத்தலாம் தாரா ளமாக”…
 
முதல் வேலை… மண்டபம் புக்கிங்!  
 
பொதுவா ஒரு சுமாரான நகரத் துல, 8 ஆயிரம் ரூபாய் வாடகை யில இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் மண்டபம்கிடைக்கு ம். மாநக ராட்சிகள்ல வாடகை அதிகமா இருக்கும். கல்யாணத் துக்கு எத்தனை பேரை அழைக் கப்போறோம், அதுக்கேத்த மா திரி பார்க்கிங் வசதி இருக்குமா, சொந்தபந்தங்கள் வந்துபோக வசதியா இருக்குமா, அவசரத்து க்கு நம்ம வீட்டுக்கு வந்து போக பக்கமா இருக்குமாங்கிறது மா திரியான விஷயங்களை யோசி ச்சு அதுக்கேத்த மாதிரியான மண்டபத்தைப் பிடிக்கணும். 
 
அழைப்பிதழ்… அழகு!  
 
ஒரு பத்திரிகை 50 காசுல இருந்து 1,000 ரூபாய் வரைக் கும்கூட இருக்கு. வெள்ளி, தங்க ஜரிகை போட்ட பத்திரி கைகள்தான் இவ்வளவு காஸ் ட்லியா இருக்கும். நம்ம வசதி க்கு ஏத்த மாதிரி பத்திரிகை களை தேர்ந்தெடுத்துக்கலாம் . பிரின்டிங் செலவு தனி. 2 ஆயிரம் ரூபாய் ரேஞ்சுக்கு 500 பத்திரிகைகள் வாங்கினா நல்ல ராயலா இருக்கும். பகட்டா இரு க்கிறதைவிட, சிம்பிள் அண்ட் நீட்டா இருக்கிற பத்திரிகைகளா செல க்ட் செய்றது நலம்!
 
டெக்கரேஷன் உங்கள் சாய்ஸ்! 
 
கல்யாணத்துல ஒரு ஸ்பீக்கர் செட், வெல்கம் போர்டு வைக் கிறதுக்கு 1,500 ரூபாய் செல வாகும். மண்டபம் முழுக்க சீரியல், பந்தல்னு அமர்க்கள ப்படுத்துனா 2லட்சரூபாய் கூ ட செலவு பண்ணலாம். பேக் டிராப், நேம் போர்டு மட் டும் வெச்சு டிஸ்கோ டெக்க ரேஷ ன் பண்றதுக்கு 2,500 ரூபாய் செலவாகும். இதையே இன்னும் ராயலா பண்ண னும்னா 25 ஆயிரம் ரூபாய்க்கு கூட பண்ணலாம். பூ மணவறை அமைக்கணு ம்னா 10 ஆயிரம் ரூபாய்ல இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரை ஆகும். ஒவ் வொரு டிஸைனுக்கும் ஒவ்வொரு தொகை நிர்ணயம் பண்ணி ருப் பாங்க.
 
மாலைகள் பலவிதம்! 
 
கைச்செண்டோட, 800ரூபாய்ல இரு ந்து மாலை செட் கிடைக்குது. இதுல ரோஜா இதழ் மாலை, சம்பங்கி மூ ணடுக்கு மாலை, மண மக்கள் பேர் போட்ட மாலைனு நிறைய டிசைன்கள் போட்டுத் தருவாங்க. ஒரு செட் 50 ஆயிரம் ரூபாய் வரைகூட இருக்கு. இதுல தலைப் பூ, உதிரிப் பூ, 10 முழம் மல்லிகையும் அடக்கம். ரோஜா இதழ் மாலை தான் இப் போ எல்லாரும் விரும்புறாங்க!
 
மங்கல இசை! 
 
மங்கல இசைக்கு ஓரளவுக்கு நல்ல மியூசிக் செட்கா£ரங்க 5 ஆயிரம் ரூபாய்க்கு கிடைப்பாங்க. பெரிய வித் வான்களைக் கூப்பிட்டா லட்சக்கண க்குல சம்பளம் கேப்பாங்க. இப்போல் லாம் நிறைய இடங்கள்ல டேப் ரிக்கா ர்டர்லயே நாதஸ்வரத்தைப் போட்டு முடிச்சு டுறாங்க. நம்ம வசதி யைப் பொறுத்து பேண்டு வாத்தியம் மத்த விஷயங்களை முடிவு பண்ணிக்கலாம். பார்வை யற்றோர், மாற்று த்திறனாளிகள் ஆர்கெ ஸ்ட்ராபோல ஏற்பாடு பண்ணினா, அவங்க ளுக்கு வாய்ப்புக் கொடுத்த சந்தோ ஷம் கிடைக்கும்!
பளபள போட்டோ – வீடியோ! 
போட்டோ ஆல்பத்துல ஸ்லிப் இன் ஆல்பம், ஆட்டோ ஸ்டிக் ஆல்பம், டிஜிட்டல் ஆல்பம், பக்கெட் ஆல்ப ம், சூட்கேஸ் ஆல்பம், மெட்டாலிக் ஆல்பம்…னு பல ரகங்கள் பல சை ஸ்கள்ல இருக்கு. ஒரு ரோலுக்கு, அதாவது 36 படங்களுக்கு குறை ந்தபட்சம் 600 ரூபாய்ல இருந்து 4 ஆயிரம் ரூபாய் வரைக்கும்செலவு பண்ணி போட்டோ எடுக்கலாம். அதேமாதிரி வீடி யோவுல சிங்கிள் கேமரா, டபுள் கேமரா, ஸ் பாட் மிக்ஸிங், இண்டோர் மிக்ஸிங், டி. வி ரிலேனு செலவுகளைக்கூட்டிக்கிட்டே போ கலாம். குறைஞ்சபட்சமா 5 ஆயிரம் ரூபாய் செலவுல ஒரு கல்யாணத்துக்கு வீடியோ எடுத்துடமுடியும். அதிகபட்சமா கிரேன்லாம் வெச்சு சூட்டிங் செஞ்சா 5லட்ச ரூபாய்கூட வீடியோவுக்கு செலவு பண்ணலாம்!
சமையல்… சிக்கனம்!  
திக செலவு பிடிக்கிற விஷ யம் சமையல்தான். ஆள் வெச் சு சமைச்சு சாமான் வாங்கிக் கொடுத்து கூலி கொடுத்து சமைக்கிறது பெரிய வேலை. அதுக்கு அவங்க கூடவே கண் காணிக்க நம்ம தரப்புல ஒரு ஆள் இருக்கணும். திடீர் திடீர் னு ஏதாவது வேணும்னு கேப் பாங்க. ரெடிமேட் சமையலுக்கு ஆர்டர் பண்ணிட்டா இந்த பிரச்னை இருக்காது. நைட் 200 பேர், காலையில 300 பேர், மதியம் 100 பேர் னு மொத்தம் 600 பேருக்கான சாப்பாட்டை சிம்பிளா, டேஸ்டா 50 ஆயிரம் ரூபாய்க்கு ரெடி பண்ணிடலாம். இட்லி, பொங்கல், கேச ரி, சாப்பாடு, 2 பொரியல், பாயசம்னு அசத்திடலாம.

1 comment:

  1. சிக்கனமாக ஒரு கல்யாணத்தை அழகாக நடத்தலாம் என்பதை நானும் ஒரு திருமண வீட்டில் கண்டேன். நெல்லை சாலைக்குமரன் ஆலயத்தில் தாலிகட்டு. அனைவரும் வந்திருந்தனர். அங்கே குமரன் முன்பு ஜோராக மணமக்கள் தாலி கட்டினர். அட்சதை தூவி ஐயர் ஆசீர்வதித்தார். அந்த இடத்திலே வந்திருந்த நபர்கள், விபூதி பூசி மொய் செய்துவிட்டார்கள். சாப்பாடு அப்படியே மணமக்களுடன் எதிர்த்தாற்போல் உள்ள ஒரு மெஸ்ஸில் டோக்கன் வாங்கி, எத்தனைபேர் சாப்பிட வந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே சாப்பாடு. இதைப் பார்த்துவிட்டு, சே அவர் கஷ்டப்பட்டு ஒரு திருமணத்தை நடத்திவிட்டார்."பரவாயில்லை, நாம் மொய் செய்துவிட்டு போவோம். வீட்டில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று வந்தவர்கள் அனைவருமே, சந்தோஷமாக மொய் செய்துவிட்டு சென்றார்கள். அங்கு சாப்பாடு பெண்வீட்டாரி்ல்,மாப்பிள்ளை வீட்டாரில் மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே.

    ஆனால் அவர் கஷ்டப்பட்டவரில்லை. நன்றாக பணவசதி உள்ளவர் தான். கடன்வாங்கி திருமணம் செய்ய விரும்பவில்லை. என் கையில் இருப்பதைவைத்தே திருமணம் நடத்துகிறேன். நான் அனைவருக்கும் மொய் செய்திருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் மொய் செய்துவிட்டுப் போங்கள். அத்தனை பேருக்கும் சாப்பாடு போட எனக்கு வசதியில்லை. அடுத்த பெண்ணும் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள், என்றாரே பார்க்கலாம். இதுதான் உண்மை. கடனை வாங்கி திருமணம் செய்து, மீண்டும், பிள்ளைகளுக்கு செய்யக்கூடிய கட்டுகள், என்று வாங்கிய கடனை செலுத்தமுடியாமல், கடன்காரன் வீட்டுவாசலில் நிற்க, திருமணம் செய்தும் சந்தோஷமான சூழ்நிலை உருவாகாமல், கடன், கடன் என்றே நிம்மதியை தொலைத்து விடுகிறார்கள். எனக்கு என்னவோ, அவர் செய்த திருமணம், என் மனதுக்கு சரி என்று தோன்றியது. தம்பதியர்கள் சிம்பிளாக முடித்தாலும், நன்றாகவே, சந்தோஷமாக இல்லறத்தை நடத்துகிறார்கள்.

    ReplyDelete