jaga flash news

Friday, 27 September 2013

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்? என்கிற தேடல் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தினம் ஒன்றாக சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என விளம்பரப்படுத்திக் கொள்ள, மக்களின் குழப்பம்இன்னும் அதிகமானதுதான் மிச்சம்.இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், எண்ணெய் நல்லதா, கெட்டதா, அது ஏன் அவசியம் என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் என்பது கொழுப்பு... கொழுப்பு ஏன் தேவை?

உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க, செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்பதற்கு, உள் உறுப்புகளைப்

பாதுகாப்பதற்கு...

புரதத்திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப்பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரியாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய், வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத் தெரிந்து நாம் எடுத்துக்கொள்கிற கொழுப்பு. அரிசி, பருப்பு, முட்டை, மீன், இறைச்சி, எண்ணெய் வித்துகள் போன்ற உணவுகளின் மூலம் உடலுக்குள் சேர்வது கண்ணுக்குத் தெரியாத கொழுப்பு. இது தவிர, சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் என கொழுப்பை இன்னும் 2 வகைகளாகப் பிரிக்கலாம். விலங்குக் கொழுப்பில் சாச்சுரேட்டட் வகை மிக அதிகம். இந்த வகைகொழுப்பு உடல்நலத்துக்கு நல்லதல்ல. ஆனாலும், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ மற்றும் டி-யை நம் உடலுக்கு உறிஞ்சிக் கொடுக்கும் வேலையை இந்த வகைக் கொழுப்புகளே செய்கின்றன. அன்சாச்சுரேட்டட் அல்லது பாலி அன்சாச்சுரேட்டட் வகையை நல்ல கொழுப்பு என்கிறோம். ரத்தக்குழாய்களில் கொழுப்பு படியாமல் செய்வது இதுவே. தாவரக் கொழுப்பு எல்லாமே அன்சாச்சுரேட்டட் வகையறாதான். வனஸ்பதி மட்டும் விதிவிலக்கு. அதனால், அதை அதிகம் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வனஸ்பதி மட்டுமல்ல... அறை வெப்ப நிலையில் கெட்டியாகக் கூடிய எந்த வகை எண்ணெய் வகைகளும் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை.

எந்த எண்ணெயில் என்ன இருக்கிறது?

பாமாயில்

1 கிராம் பாமாயிலில், 800 µg அல்லது mcg பீட்டா கேரட்டின் (வைட்டமின் ஏ) உள்ளது. ஆனாலும், அந்த எண்ணெயில் உள்ளது சாச்சுரேட்டட் கொழுப்பு என்பதால் தொடர்ந்து உபயோகிக்க முடியாது.

சூரியகாந்தி எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகம் என்பதால், இது உபயோகத்துக்கு ஏற்றது.

கடலை எண்ணெய்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு மிதமாக உள்ளது. ஆனாலும், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படியச் செய்வதில் இதற்கும் பங்குண்டு. பாமாயில் அளவுக்குக் கெடுதலானது அல்ல.

தவிட்டு எண்ணெய்
ரைஸ் பிரான் எண்ணெய் எனக் கேள்விப்படுகிறோமே... அதுதான் தவிட்டு எண்ணெய். இதய நோயாளிகளுக்கு மிக நல்லது.

நல்லெண்ணெய்

இதுவும் பாலி அன்சாச்சுரேட்டட் வகையைச் சேர்ந்தது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, நல்ல கொழுப்பாக மாற்றும் தன்மை கொண்டது.

ஆலிவ் ஆயில்

இதய நோயாளிகளுக்கு ஏற்றது. இதை சூடுபடுத்தக் கூடாது. பொரிக்க, வறுக்கப் பயன்படுத்த முடியாது. சாலட்டுக்கு உபயோகிக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

சாச்சுரேட்டட் கொழுப்பு அதிகமுள்ளதால், ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல.

கடுகு எண்ணெய்

ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகமுள்ளது. ஆன்ட்டி பாக்டீரியல் தன்மையும் கொண்டது. இதயத்துக்கு நல்லது. கடுமையான வாசம் காரணமாக, நம்மூர் மக்களுக்கு இந்த எண்ணெய் பிடிப்பதில்லை. வட இந்திய மக்கள், கடுகு எண்ணெயை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு நாளைக்கு எவ்வளவு எண்ணெய்?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30 சதவிகிதம் கொழுப்பு இருக்கலாம். அந்த 30 சதவிகிதமும் நல்ல கொழுப்பிலிருந்து கிடைப்பதாக இருக்க வேண்டும். அதாவது உணவிலிருந்து கிடைக்கும் கொழுப்பாக இருப்பது நல்லது. மற்றபடி எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் நேரடிக் கொழுப்பு 15 முதல் 20 சதவிகிதத்தை மிஞ்சாமலிருப்பதுதான் சரி.

உபயோகித்த எண்ணெயா..? உஷார்!

பொரிக்கவோ, வறுக்கவோ ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கக்கூடாது. அப்படிப் பயன்படுத்துவதால், ‘டிரான்ஸ்ஃபேட்டி ஆசிட்’ அதிகமாகி, அது ரத்தக்குழாய்களில் கொழுப்பாகப் படியும். புற்றுநோய்க்குக்கூட காரணமாகலாம் என்கிறார்கள். அதனால், கொதிக்க வைத்த எண்ணெயை, அதற்கடுத்த 2 நாள்களுக்குள் தாளிப்பதற்கு மட்டும் பயன்படுத்தித் தீர்க்கலாம் அல்லது கொட்டி விடலாம். பொரிப்பதற்கு எப்போதும் குறைவான எண்ணெயே உபயோகிக்கவும். இந்த விஷயத்தில் மிச்சம் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு, ஆரோக்கியக் கேட்டை விலைக்கு வாங்க வேண்டாம்!

எப்படி உபயோகிக்க வேண்டும்?

நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் - இந்த 3 எண்ணெய் களையும் சம அளவில் கலந்து உபயோகிக்கலாம் அல்லது 2 மாதங்களுக்கு ஒரு எண்ணெய் என மாற்றி மாற்றி உபயோகிக்கலாம். ஒரே எண்ணெயை வருடக்கணக்கில் உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

கிழங்கு சமைப்பதென்றால், லிட்டர் லிட்டராக எண்ணெயைக் கொட்டி வறுத்தும் பொரித்தும்தான் செய்ய வேண்டும் என்றில்லை. உருளைக்கிழங்கு,சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என எல்லாவற்றையும் மசியலாகச் செய்து சாப்பிடலாம். நான்ஸ்டிக் கடாயில் செய்தால் எண்ணெய் செலவு குறையும். லேசாக தண்ணீர் தெளித்துச் செய்தாலும் அதிக எண்ணெய் குடிக்காது.

எந்தக் காய்கறியை சமைத்தாலும், முதலில் ஆவியில் வேக வைத்து விட்டு, பிறகு தாளிப்பதற்கு
மட்டும் எண்ணெய் உபயோகிக்கலாம்.

தோசை ஊற்றும் போது அந்தக் காலத்தில் செய்தது போல கல்லை, துணியால் துடைத்து விட்டு செய்தால் எண்ணெய் செலவு குறையும்.தோசை ஊற்றியதும், அதை மூடி வைத்து வேக விட்டாலும் எண்ணெய் அதிகம் தேவைப்படாது.

தாலி கட்டுவது ஏன்...?

தாலி கட்டுவது ஏன்...?

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பதுபகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''

என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்

ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.
295

மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 .............

ஒரு நாளில் ஓடக்கூடிய மூச்சுக்களின் எண்ணிக்கை 21,600 என்று பார்த்தோம். சிதம்பரத்தில் உள்ள ஆனந்தமய கோசத்தில் தான், நடராஜர் நடனமிடும் சிற்சபை எனும் பொன்னம்பலம் அமைந்துள்ளது.இந்த சிற்சபைபை உடற்கூறு கணிதத்தின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றது. சிதம்பரத்தில் உள்ள பொன்னம்பலத்தில் 64 கை மரங்கள் உள்ளன. இந்த 64ம் 64வகையான கலைகளாகும். பொன்னம்பலத்தின் 21600 தங்க ஓடுகள் உள்ளன. இவை ஒரு மனிதனின் ஒரு நாளுக்கான சராசரி மூச்சுக் காற்றுக்கான எண்ணிக்கை. 5 வெள்ளிப் படிகள் உள்ளன. இவை ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தினையும் (பஞ்ச பூதங்களையும்) குறிப்பன.இதையே விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல மதி என்றால் சந்திரன் 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஆண் vs பெண் ஈர்ப்பு?

பெரும்பாலும் ஆண் பெண்ணிடம் ஈர்க்கப்படுகிறான். அதுபோல் பெண்ணும் ஆணிடம் ஈர்க்கப்படிகிறாள். இது இயற்கை நடத்தும் சூட்சும விளையாட்டு.

உலகலாவிய உந்துதலில் வாழும்வரை அது சரியே.

ஆன்மீகம், ஆன்மா என்ற இன்னொரு உலகமும் நம்முள்ளேயும் வெளியேயும் இருக்கிறது. நாம் அறிவோம்.

அவ்வுலகில் ஆண், பெண் என்ற பேதமில்லை. வெறும் ஆன்மா மட்டுமே. தத்துவார்த்தமாய் அதுவும் சரியே.

நடுவில் கொஞ்சம் கவனமாக விழிப்புணர்வாய் ஆண் - பெண் வாழ்க்கையை நகர்த்துவோரே விசனப்படாமல் வாழ்வை வெல்கிறார்கள்.

உலகியல் வாழ்வில் சிக்குண்டு வாழ்வை வெறுக்கும் ஆண், பெண் ஒரு புரியாதப் புதிர் என்பான். அவள் ஒரு மாயை நம்பாதே என்று அனுபவச் சான்றிதல் வேறு கொடுப்பான். இன்னும் கொஞ்சம் சினம் கூடினால், பெண்ணா ? பிசாசா ? என்று கேள்வியாய் குழம்பிப் போவான்.

உங்களுக்கு ஓர் உண்மை தெரியுமா?

பெண்ணை ஓர் ஆன்மாவாகப் பார்க்கப் பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான். மாயையாக மாறவே மாட்டாள். உடலளவிலும் மனத்தலளவிலும் மட்டுமே பார்ப்பவனுக்கு அவள் எந்நாளும் மாயைதான் சக்தியாக மாறவேமாட்டாள்.

ஒரு பெண், பணிவிலும் பரவசத்திலும் (பரம்பொருளின் வசம், என்றுணர்க) இருக்கும்வரை அவள், சக்தியின் வடிவம். அவள் மாயையாக மாற மாட்டாள். ஒரு பெண், பயத்திலும் பலவீனத்திலும் இருக்கும்போதுதான் மாயையாக 'விசுவரூபம்' எடுக்கிறாள்.

ஒரு காலத்தில் பெண்ணை மாயையாகப் பார்த்து மருண்டவர்தான், பட்டினத்தடிகளார்.

பிற்காலத்தில் தெளிவு பெறும்போது அதே பட்டினத்தடிகளார் 'வாலை' எனப்பெறும் சக்தியாகப் போற்றிப் பாடுகிறார்.

"மூலத்து உதித்தெழுந்த
முக்கோண சக்கரத்துள்
வாலைதனை போற்றாமல்
மதிமறந்தேன் பூரணமே"

உண்மை ஞானம் தெளிந்தவர் யார்??

"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!

- பட்டினத்தார்

பொழிப்பு:


பேய்போல் திரிந்து : பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,

பிணம்போல் கிடந்து : உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,

இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி : யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,

நன்மங்கையரைத் தாய்போல் கருதி : நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,

தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லி : அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,

சேய்போல் இருப்பர்கண்டீர் : குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,

உண்மை ஞானம் தெளிந்தவரே : அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர் (சித்தன்) என்கிறார் பட்டினத்தார்.

ஆண் சொத்து...

ஒரு ஆண் முதுமையில் இழக்க கூடாத சொத்து...

மனைவி மட்டுமே...!

ஈமச் சடங்குகள் ...............

ஈமச் சடங்குகள் எல்லாம் பொருள் செரிந்தவையாகும். இறந்த தந்தைக்கு முன் மகன் தோளில் நீர் சுமந்த குடத்தை வைத்துக்கொள்வான். நாவிதனார் தண்ணீர் குடத்துடன் மூன்று முறை சுற்ற செய்து மூன்று ஓட்டை இட்டு, 'அப்படியே உடைத்து திரும்பி பார்க்காமல் போ' என்பார்.

தண்ணீர் குடம் என்பது சாரீரம். அதி நிறைந்த தண்ணீர் ஜீவான்மா. முதலில் இட்ட ஓட்டை தனெஷனை (பணத்தாசை), இரண்டவது இட்ட ஓட்டை தாரெஷனை (மனைவி மேல் வைத்த ஆசை) , மூன்றாவது இட்ட ஓட்டை மக்கள் மேல் வைத்த ஆசை. இந்த மூன்று ஆசைகளாகிய ஓட்டைகளின் வழி சரிரதிலிருந்த ஆத்ம சைதன்யமாகிய உயிர் சிந்திவிட்டது. இந்த ஆசாபாசத்தை திரும்பி பாராமல் நீ அறநெறியில் செல்வாயாக என்ற குறிப்பை நவிதனார் காட்டுகிறார்.

நம் முன்னோர்கள் செய்த சடங்குகள் அர்த்தமற்றவை என்று தல்லாமல் நுனித்து உணர்வது மதிடமை ஆகும்.

இந்த ஆன்மாக்களுக்கு செய்யும் வழிபாடுகள் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிகடனாகும்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
கைம்புலத்தார் ரோம்பல் தலை - திருக்குறள், (அறத்துப்பால்-43)

Sunday, 22 September 2013

தாராபலன் பார்த்தல்....3,5,7, வது நட்சத்திரங்கள் மரண தாரை எனப்படும்...

ராமர் பின்பற்றிய ஜோதிடம்;

ஒருவர் பிறந்த நட்சத்திரமும் அதிலிருந்து எண்ணி வரும் 3,5,7, வது நட்சத்திரங்கள் மரண தாரை எனப்படும்..இந்த எண்ணிக்கையில் வரும் நட்சத்திர நாளில் செய்யும் காரியங்கள் தோல்வியை தரும்...பிறந்த நட்சத்திரத்திலிருந்து எண்ணி வரும் 2,4,6,8,9 வது நட்சத்திர நாளில் செய்யும் காரியங்கள் .வெற்றியை தரும்.திருமணமாக இருந்தாலும் ,தொழில் ஆரம்பிப்பதாக இருந்தாலும் இந்த கணக்கு அவசியம்..ராமனே போருக்கு போகும் முன் தன் பிறந்த நட்சத்திரமான புனர்பூசம் ல் இருந்து 6 வது நட்சத்திரமான உத்திரம் வரும் நாளில்தான் ராவணன் மீது போர் தொடுத்தாராம்..இதன் பெயர் தாராபலன் பார்த்தல்..எனப்படும்.

ஒரு ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் அதாவது ஒரே கட்டத்தில் இருந்தால் அவர் அமாவாசையில் பிறந்தவர்..சூரியனுக்கு ஏழாவது கட்டத்தில் சந்திரன் இருப்பின் பெள்ர்ணமியில் பிறந்தவர்..சூரியனில் இருந்து 7வது கட்டத்துக்குள் எங்கு சந்திரன் இருந்தாலும் வளர்பிறையில் பிறந்தவர்..7 கட்டத்துக்கு மேல் எங்கு சந்திரன் இருந்தாலும் தேய்பிறையில் பிறந்தவர்..ஒரு ஜாதக கட்டத்தை வைத்து இவற்றை துல்லியமாக சொல்லமுடியும்எனும்போது ,அதனால் உண்டாகும் பலன்களும் தெளிவாக சொல்ல முடியும்...

மற்ற கிரகங்களையும் இவ்வாறு குழந்தை பிறக்கும்போது இந்த நிலையில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இப்படி இருந்தது என பல ஆயிரம் வருடங்களாக கணித்து சொல்லி வருகின்றனர் ஜோதிடர்கள்..பிறக்கும்போது கிரகங்கள் வானில் உலவும் இடம்தான் கட்டத்தில் அமைக்கிறோம்..அதன்மூலம் அடுத்தடுத்த ஆண்டுகளில் கிரகங்களின் நகர்வை கொண்டு அவனுக்கு உண்டாகும் நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து சொல்கிறோம்...!!


கும்பம் ராசியில் சூரியன் வரும்போது அதாவது மாசி மாதத்தில் வளர்பிறையில் உங்கள் குலதெய்வத்தை வணங்குங்கள்..! நல்ல ஆசிர்வாதமும், அதிக சக்தியும், மனதிடமும் கிடைக்கும்...!!!
அவன் எனக்கு எதிரி அவன் வீட்டில் பச்சத்தண்ணீர் கூட வாங்கி குடிக்க மாட்டேன் என கிராமப்பகுதிகளில் சொல்வது சாதாரணம்..ஒரு வீட்டில் இருக்கும் மனிதர்களின் மின்காந்த அலைகள் அவ்வீட்டில் உள்ள நீரிலும் பதிவாகி இருக்கும்..அந்நீரை குடிக்கும் மனிதர்களின் உடம்பிலும் பரவிவிடும்..என நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர்.கெட்ட எண்ணம் உடையவர்கள்,சமூக விரோதிகள்,வாஸ்து தோசம் உள்ள வீட்டிலும் அன்னம், தன்ணீர் புழங்ககூடாது..என்பது தமிழர்கள் பழக்கம்..சான்றோர்கள்,மகான்கள்,ஊருக்காக நாட்டுக்காக உழைக்கும் நல்லோர்களிடம் தண்ணீர் வாங்கி குடித்தாலும் அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும்..நல்லது நடக்கும்..


Saturday, 21 September 2013

அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் திருமண வயது வித்தியாசம்!

அறிவியல் மற்றும் ஆன்மீகம் கூறும் திருமண வயது வித்தியாசம்!
Temple images
காலத்தே பயிர் செய் என்பது போல, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையையும் முன்னோர் வகுத்துள்ளனர். அந்தக் காலத்தில் பால்ய விவாகம் இருந்தது. இதை ஏன் அனுமதித்தார்கள் என்றால், குழந்தைகள் ஒழுக்கக்குறைவான பாதைக்கு சென்று விடக்கூடாது என்பதால் தான். காலத்தே கல்யாணம் செய்யாததால் தான் வழுக்கி விழுந்தவள், தடுக்கி விழுந்தவள்... என்ற சொற்களெல்லாம் நம் காதில் விழும் நிலை இருக்கிறது என்கிறார் காஞ்சி மகாபெரியவர்.திருமணத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வயது ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18. பட்டப்படிப்பு முடிக்கும் பெண்ணுக்கு கூட 20 வயது நிறைவடைந்து விடுகிறது. மேற்கல்வி கற்றால் 24 வரை எட்டி விடுகிறார்கள். எப்படியிருப்பினும், திருமணம் முடிப்பவர்கள் ஏறத்தாழ சமவயது உடையவர்களாக இருப்பது நல்லது.
இதிகாச காலத்தில் கூட ஆறு வயதுக்கு மேல் வித்தியாசம் காட்டப்படவில்லை. ராமனுக்கு திருமணம் நடந்த போது அவரது வயது 12. சீதாவின் வயது 6 என்கிறது வால்மீகி ராமாயணம். ஆணுக்கு 26 வயதுக்குள்ளும், பெண்க்கு 24 வயதுக்குள்ளும் திருமணம் முடித்து விடுவது நல்லது. உதாரணமாக, ஒருவருக்கு 30 வயதில் திருமணம் நடக்கிறது என்றால், அவரது 31 வயதில் குழந்தை பிறக்கலாம். அந்தக் குழந்தைக்கு 24 வயது ஆகும்போதே, அவர் 55வயதை எட்டி விடுவார். அந்தக் குழந்தைக்கு திருமணம் செய்து வைப்பதற்குள் போதும் போதும் என எண்ணம் வந்துவிடும். தாமதமாக குழந்தை பிறந்தால் கேட்கவே வேண்டாம்.நாம் வாழ்க்கையை அனுபவிக்க பிறந்தவர்கள். நடக்க வேண்டிய நேரத்தில் அது அது நடந்தால் தான், வாழ்க்கையே அர்த்தமுள்ளதாகும்.

Thursday, 19 September 2013

தலைமுறைக்கே லாபம் அளிக்கும் மகாளய பட்சம்!

தலைமுறைக்கே லாபம் அளிக்கும் மகாளய பட்சம்!
Temple images
மகாளய பட்சம்-விளக்கம்:

மகாளயம் என்றால் கூட்டமாக வருதல்.  மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். பட்சம் என்றால் 15 நாட்கள். மறைந்த  முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம். இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.

மகாளய பட்ச காலத்தில் என்ன செய்வது?

மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும். அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும். நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாறைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படியானால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

தலைமுறைக்கே லாபம்

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.

முதல்நாள்    பிரதமை       பணம் சேரும்
2ம் நாள்         துவிதியை    ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள்         திரிதியை      நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள்         சதுர்த்தி          பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள்         பஞ்சமி           வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள்         சஷ்டி              புகழ் கிடைத்தல்
7ம்நாள்          சப்தமி             சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள்         அஷ்டமி         சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள்           நவமி              சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற, மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள்        தசமி              நீண்டநாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள்         ஏகாதசி         படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள்        துவாதசி       தங்கநகை சேர்தல்
13ம்நாள்        திரயோதசி    பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள்         சதுர்த்தசி      பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
15ம் நாள்        மகாளய        முன் சொன்ன அத்தனை பலன்களும் அமாவாசை    நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான்.

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும்

எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை
அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

மைத்ர முகூர்த்த நேரம்..........

கொல்லாமல் கொல்வது என்பது கூட தவறு. புதை குழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்வது என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆம் , கடன் பட்டார் நிலமை அதுதான்.
தைரியமாக கடன் வாங்க ஆரம்பித்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடனைத் தீர்க்க வழியின்றி திணறுவது , அனேகமாக நம்மில் பலருக்கும் இருக்கும் நிலைதான்.

என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் , கடன் தீரவே இல்லை என்று தவிப்பவர்களுக்கு - கீழ்க்கண்ட இந்த நேரக் குறிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

நீங்கள் வாங்கிய கடனின் அசலில் , ஒரு குறிப்பிட்ட தொகை - அது ஒரு ஐநூறோ , ஆயிரமோ இந்த நேரத்தில் திருப்பி விடுங்கள்.

உங்கள் தீராத கடன் முழுவதும் விரைவில் தீரும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாக உணர முடியும்...!

நம் பழைய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். புது வாசகர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக, புது வருட மைத்ர முகூர்த்த பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்......!

பற்றிக்கொள்ளுங்கள்..!

வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்..!
======================================================================

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;
27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை;

8.5.2013 புதன் விடிகாலை 5.51 முதல் 6.21 வரை;

9.5.2013 வியாழன் விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;

25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை;

21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை;

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;

20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;

29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;

15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;

25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;

21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;

22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)

9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;

19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;

4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;

15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;

30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;

13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;

14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;

30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;

9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;

6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;

22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;


5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;

21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;

1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;

12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;

இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.



Wednesday, 18 September 2013

மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.

கொல்லாமல் கொல்வது என்பது கூட தவறு. புதை குழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அமிழ்வது என்பது வேண்டுமானால் சரியாக இருக்கும். ஆம் , கடன் பட்டார் நிலமை அதுதான்.
தைரியமாக கடன் வாங்க ஆரம்பித்தவர்கள் , கொஞ்சம் கொஞ்சமாக அந்த கடனைத் தீர்க்க வழியின்றி திணறுவது , அனேகமாக நம்மில் பலருக்கும் இருக்கும் நிலைதான்.

என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் , கடன் தீரவே இல்லை என்று தவிப்பவர்களுக்கு - கீழ்க்கண்ட இந்த நேரக் குறிப்பு பெரும் உதவியாக இருக்கும்.

நீங்கள் வாங்கிய கடனின் அசலில் , ஒரு குறிப்பிட்ட தொகை - அது ஒரு ஐநூறோ , ஆயிரமோ இந்த நேரத்தில் திருப்பி விடுங்கள்.

உங்கள் தீராத கடன் முழுவதும் விரைவில் தீரும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாக உணர முடியும்...!

நம் பழைய வாசகர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். புது வாசகர்களும் தெரிந்துகொள்ளும் விதமாக, புது வருட மைத்ர முகூர்த்த பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்......!

பற்றிக்கொள்ளுங்கள்..!

வாழ்க அறமுடன்..! வளர்க அருளுடன்..!
======================================================================

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;
27.4.2013 சனி இரவு 7.05 முதல் 9.05 வரை;

8.5.2013 புதன் விடிகாலை 5.51 முதல் 6.21 வரை;

9.5.2013 வியாழன் விடிகாலை 4.25 முதல் 6.25 வரை;

25.5.2013 சனி மாலை 6.44 முதல் 8.44 வரை;

21.6.2013 வெள்ளி மதியம் 4.21 முதல் 6.21 வரை;

18.7.2013 வியாழன் மதியம் 3.30 முதல் 4.00 வரை;

20.7.2013 சனி காலை 6.12 முதல் 8.12 வரை;மதியம் 12.12 முதல் 2.12 வரை;மாலை 6.12 முதல் இரவு 8.12 வரை;

29.7.2013 திங்கள் இரவு 11.44 முதல் நள்ளிரவு 1.44 வரை;

15.8.2013 வியாழன் மதியம் 12.12 முதல் 2.12 வரை;

25.8.2013 ஞாயிறு இரவு 10.36 முதல் 12.36 வரை;

11.9.2013 புதன் காலை 10.20 முதல் 12.20 வரை;

21.9.2013 சனி இரவு 8.16 முதல் 10.16 வரை;

22.9.2013 ஞாயிறு இரவு 8.20 முதல் 8.27 வரை;(ஏழே நிமிடங்கள் தான்!)

9.10.2013 புதன் காலை 8.36 முதல் 10.36 வரை;

19.10.2013 சனி மாலை 6 முதல் 8 வரை;

4.11.2013 திங்கள் காலை 7.08 முதல் 9.08 வரை;

15.11.2013 வெள்ளி மாலை 4.04 முதல் 6.04 வரை;

30.11.2013 சனி காலை 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;இரவு 9 முதல் 11 வரை;

13.12.2013 வெள்ளி மதியம் 2.34 முதல் 4.34 வரை;

14.12.2013 சனி காலை மற்றும் இரவு 9 முதல் 11 வரை;மதியம் 3 முதல் 5 வரை;

30.12.2013 திங்கள் காலை 4.34 முதல் 6.34 வரை;

9.1.2014 வியாழன் மதியம் 12.20 முதல் 2.18 வரை;

6.2.2014 வியாழன் காலை 10.32 முதல் 12.32 வரை;

22.2.2014 சனி இரவு 12.40 முதல் 2.40 வரை;


5.3.2014 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை;

21.3.2014 வெள்ளி இரவு 10.24 முதல் 12.24 வரை;

1.4.2014 செவ்வாய் காலை 6.44 முதல் 8.44 வரை;

12.4.2014 சனி காலை மற்றும் மாலை 6.08 முதல் 8.08 வரை;
மதியம் 12.08 முதல் 2.08 வரை;

இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்.
நன்றி : திரு. வீரமுனி (ஆன்மீகக் கடல்) 
குறிப்பு : ஏற்கனவே இந்த நேரத்தை பயன்படுத்தி நன்மை அடைந்தவர்கள் , தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டால், நமது புது வாசகர்களுக்கு அது நம்பிக்கையும் உத்வேகமும் அளிக்கும்..!