jaga flash news

Friday, 27 September 2013

உண்மை ஞானம் தெளிந்தவர் யார்??

"பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்
சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!

- பட்டினத்தார்

பொழிப்பு:


பேய்போல் திரிந்து : பிறர் கர்மத்தை போக்கும் பொருட்டு இரவு பகலாக திரிந்து,

பிணம்போல் கிடந்து : உறங்கினாலும் யோக நிலையில் இருந்தாலும் பிணம் போல் அசைவற்று,

இட்ட பிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி : யாராவது இடும் பிச்சையை நாய் போல் உண்டு,

நன்மங்கையரைத் தாய்போல் கருதி : நல்ல மங்கையரை தனது தாய் போல் நினைத்து,

தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லி : அடிமைபோல் அனைவருக்கும் தாழ்வாய் இருந்து,

சேய்போல் இருப்பர்கண்டீர் : குழந்தைபோல் இருப்பவர்களை கண்டீர்கள் என்றால்,

உண்மை ஞானம் தெளிந்தவரே : அவர்தான் உண்மையாக ஞானம் அடைந்து தெளிந்தவர் (சித்தன்) என்கிறார் பட்டினத்தார்.

No comments:

Post a Comment