jaga flash news

Tuesday, 8 October 2013

கிரகங்கள் வலிமை..........

சில கிரகங்கள் நம் ஜாதகத்தில் வலிமை குறைவாக இருக்கும்..பிறக்கும்போது வானில் இருக்கும் கிரகங்களின் ஒளி அளவு நம் உடலுக்கு எவ்வளவு கிடைத்ததோ அதை பொறுத்துதான் அதன் காரகத்துவமும் நமக்கு வலிமையாக அமையும் உதாரணமாக புதன் கெட்டுப்போச்சுன்னா அறிவு கெட்டுப்போகுது...செவ்வாய் கெட்டுப்போனால் உடல்பலம் கெட்டுப்போகுது..சந்திரன் கெட்டுப்போனா தன்னையும் குழப்பிக்கிட்டு அடுத்தவனையும் குழப்பிடுவான்..நிம்மதி இருக்காது எப்போதும் புலம்பலதான் இதுக்காகவே நம் முன்னோர்கள் கிரக வலிமை பெறுவதற்காக சில ஐடியாக்களை சொல்லி இருக்காங்க..சித்தர்களும் அதை வழிமொழிஞ்சு, மறைமொழியா அதை சொல்லிட்டும் போயிருக்காங்க..மூலிகைகள் மூலமாகவும்,கிரகங்களுக்கு ஏற்ற கோயில்களுக்கு செல்வதன் மூலமாகவும் அதை சரி செய்துகொள்ளலாம்!!
உடல் உழைப்பை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும்..தெய்வ அனுகூலத்தை,அதிர்ஷ்டத்தை குறிக்கும் கிரகம் குருவாகும்..பூமியில் ஜீவராசிகள் உற்பத்தி ஆக காரணம் சூரியனும்,குருவும் ஆகும்.குரு கிரகத்தில் இருந்து வரும் மஞ்சள் கதிர்களும் சூரியனில் இருந்து வெளிப்படும் சிவப்பு கதிர்களும் இணைந்து உயிர்கள் உற்பத்தி ஆகின்றன..சுக்கிரன் தன காரகன் எனப்படும் அதாவது பணத்துக்கு அவர் அதிபதி..அவர் கெட்டிருக்கும்போது கடன் வாங்கும் சூழல் உண்டாகிறது.ஒரு தொழிலை நீங்க திறம்பட நடத்த வேண்டுமெனில் உடல் உழைப்பை தரும் செவ்வாய் பலம் பெற்றால் மட்டும் போதாது தொழிலுக்கு அதிபதி சனியும் நன்றாக இருக்க வேண்டும்.உணவு பொருட்களை குறிக்கும் கிரகம் சந்திரன்,தாயையும்,மாமியாரையும்குறிக்கும் கிரகமும் சந்திரன்.

No comments:

Post a Comment