jaga flash news

Sunday, 4 January 2015

நற் செயல்கள் அமாவாசையில்செய்யலாமா?

நற் செயல்கள் அமாவாசையில்செய்யலாமா?
அமாவாசை நாளில் மதியானது கதிரவனிடம் அத்தமனம் ஆகிறது. இந்த அத்தமனமானது மனித மரணத்துக்கு இணையானது. அத்தமன காலத்தில் மதியும் உயிரற்று, செயலற்று மறைந்து விடுகிறது.
மதியின் மறைவு காலத்தில் நல்ல காரியங்களைச் செய்யலாமா? இது தொடர்பாக எதிர்மறை கருத்துகள் இருந்து வருகிறது.
பொதுவாக அமாவாசையானது நிறைந்த நாள் என்ற கருத்து தமிழகத்தில் காணப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் இது நல்ல நாள் இல்லை ஒதுக்கப்படுகிறது.
இப் புவியின் தாய், தந்தையாக மதியும், கதிரவனும் கருதப்படுகின்றன. மதியை அடிப்படையாகக் கொண்டே அனைத்து நற் செயல்களும் மேற்கொள்ளப்படுகின்றன. உலகின் பார்வைக்கு அது புலப்படாத நாளில் நற் செயல்கள்
செய்யலாகாது என ஜோதிட சாத்திரம் கூறுகிறது.
குரு, சுக்கிர மூட காலம் போலவே மதி மறையும் அமாவாசையும் நல்ல நாளல்ல; உலகத்தின் தாய் மறையும் என்பதால் அது அமங்கல நாள்; சூனிய நாள். அன்று
நற் செயல்களைத் தவிர்க்க வேண்டும். இது கதிரவன்
மறையும் நேரமான சாயுங்காலத்துக்கும் பொருந்தும் எனச் சாத்திரம் கூறுகிறது.
மேலும், பயிர் பச்சைகளுக்கு அதிபதியான மதி, வானத்தில் இடமின்றி புவிக்கு வந்து மரம் செடி கொடிகளில் தங்குவதால் அமாவாசை நாளில் காய், கனிகளைப் பறித்தல், இலை, ஓலைகளை வெட்டுதல், திருத்துதல் கூடாது; அன்றைய நாளில் பறித்த காய், கனிகளையும் உண்ணாது தவிர்க்க வேண்டும். இதை மீறினால் மதியின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளாக நேரிடும் என்றும் சாத்திரம் கூறுகிறது.
அமாவாசை நாளில் மதியும் கதிரவனும் சேர்ந்திருப்பதன் காரணமாக ஈர்ப்பு விசை அதிகரிப்பதால் கடல் அலைகள் ஆர்ப்பரித்து உயர எழும். குழந்தை வேண்டும் என விரும்புபவர்களும்
குழந்தை வரம் வேண்டி ஆலயம் செல்பவர்களும் அன்றையத் தினம் கடலில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் சாத்திரம் கூறுகிறது.
ஆன்மாக்கள் வலிவுடன் திகழும் காலம் அமாவாசை என்பதால் அன்றையத் தினம் அவர்களை நினைப்பதும் சிரார்த்தம் கொடுப்பதும் நல்லதாகும்.

No comments:

Post a Comment