jaga flash news

Saturday, 31 January 2015

தர்மம்



ஒரு விறகு வெட்டி இருந்தார் …!
ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவரது கோடரி காணாமல் போய்விட்டது…!
கடவுளே என்று உரத்து கத்தி …என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினார்…!
கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..!
அவரது சக்தியால்
* தங்க உலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார் விறகு வெட்டி இல்லை சாமி -என்றார்
* வெள்ளிஉலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார் விறகு வெட்டி இல்லை சாமி -என்றார்
* அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார் ஆமா சாமி ..என்றார்..
கடவுள் இவரது பண்பை அவதானித்து அவரிடம்
நீ உண்மையை கூறியதால் மூன்று கோடரியையும் கொடுத்தார் …
நடந்ததை தன் மனைவியிடம் கூற பேராசை பிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம் கூட்டிச்செல்ல மன்றாடினாள்..
அவரும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது திடீர் என மனைவி காட்டு வழியில் காணாமல் போய்விட்டாள்…!
கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினார் …!
கடவுள் வந்து நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால்
* சமந்தாவை வரவழைத்து இதுவா உன் மனைவி என்று கேட்டார் …? அவர் ஆமாசாமி என்றார்
கடவுள் திகைத்துவிட்டார் …என்னப்பா ..?உன் நேர்மை எங்கே ..? பொய்சொல்லிட்டியே …?
இல்ல சாமி நீங்கள் …..!
* முதல் சமந்தாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்..நான் இல்லை என்பேன் …
அடுத்து தமண்னாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்.. நான் இல்லை என்பேன்
என் உண்மை மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்....நான் ஆம் என்பேன்
நீ உண்மை பேசியதால் மூன்றுபேரையும் வைத்திரு என்பீர்கள் நானோ விறகு வெட்டி எப்படி சாமி… அதனால் தான்..என்றார்

No comments:

Post a Comment