jaga flash news

Sunday 4 January 2015

அமாவாசை! அமங்கலமா ?மங்கலமா?

அமாவாசை! அமங்கலமா ?மங்கலமா?
இந்தக் கேள்விக்கு இரண்டு விதமான பதிலும் மக்களிடம் காணப்படுகிறது. இது அவரவர் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கத்தைச் சார்ந்தது. ஆனால் சோதிட சாத்திரம் என்ன சொல்லிறது?
ஒவ்வொரு மாதமும் மதியாகிய சந்திரன, கதிரவனாகிய சூரியனைக் கடந்து செல்கிறது. கதிரவனுக்கு 12 டிகிரியில் நெருங்கும் போது மதி அத்தமனம் அடைகிறது. அதன் பின் கதிரவனிலிருந்து 12 டிகிரியைக் கடந்து அல்லது விலகிச் செல்லும் போது மதி உதயமாகிறது.
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் நிகழும் மதியின் 24 டிகிரி சஞ்சாரத்தில்தான் அமாவாசை திதி உதயமாகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த அமாவாசை திதி ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரப் பாதத்தில் ஏற்படுகிறது என்பதை ஜோதிட முன்னோர்கள் கண்டறிந்து கூறிச் சென்றுள்ளதுதான்
அமாவாசை திதி உதயமாகும் அந்த நட்சத்திரங்கள் 12 ராசியிலும் இடம் பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக அந்த நட்சத்திரங்களின் நான்காம் பாதத்தில் மதி நுழையும் போதுதான் அமாவாசை திதி உதயாகிறது என்பது வியப்புக்குரியது. இதிலிருந்து அமாவாசை உதயத்துக்கும் நட்சத்திரங்களின் நான்காம் பாதத்துக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது என்பது புலனாகிறது.
மேஷத்தில் அசுவினி (12-14 பாகை), ரிஷபம் (ரோகிணி (21-23 பா.), மிதுனம் (ஆதிரை 17-19பா) , கர்க்கடகம் (பூசம் 15-17 பா ), சிம்மம் (மகம்12-14 பா ), கன்னி (உத்திரம் 8-10 பா ), துலாம் (சுவாதி18-20பா),
விருச்சிகம் (அனுஷம் 15-17. பா), தநுசு (மூலம் 12-14 பா), மகரம் (உத்திராடம் 8-10பா), கும்பம் (அவிட்டம் 5-7 பா), மீனம் உத்திரட்டாதி 15-17 பா).

No comments:

Post a Comment