jaga flash news

Sunday, 29 March 2015

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை -

ஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை -
ஆகாச கருடன் என்ற இம்மூலிகைக்கு மாபெரும் சக்தி இருக்கின்றது."சாகா மூலி" என்ற பெயரும் இதற்கு உண்டு.ஆம் இம் மூலிகைக் கிழங்கு சாகாது .இக் கிழங்கை ஒரு கயிற்றில் கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் ஈர்த்து வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது.முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும்.
பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் பாம்பு வகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் ஓடி ஒளிந்து கொள்ளும்.அதே போல் இக் கிழங்கின் வாசனை அறிந்தாலும் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும்,ஓடி விடும்.
இம் மூலிகைக் கிழங்கிற்கு சில அமானுஷ்ய சக்திகள் உண்டு.அதாவது வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி,தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி,சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.இதனால் வீட்டில் உள்ளவர் கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்து காக்கப் படுவர்.

1 comment:

  1. இந்த கிழங்கு ஆகாச கருடன் கிழங்கு தேவைக்கு அழைக்க WHATSAPP 9994050807

    ReplyDelete