jaga flash news

Sunday, 29 March 2015

மூட்டு வலி

விருந்தும் மருந்தும் மூன்று நாட்களுக்கு தான்.
பூமியின் மண்ணினுடைய பாலில் இருந்து எடுக்கப்பட்டு கட்டுவது இந்த கரையான் புற்று. இது பாம்பு புற்று இல்லை. பாம்பு புற்று கட்டாது.இந்த புற்றின் உயிர்ப்பு தன்மை அறிய இதன் மீது ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் எந்த இடத்தில தாய் கரையான் அந்த இடத்தில இருந்து புற்று மீண்டும் உடனே கட்ட தொடங்கி விடும்.
இந்த கரையான்கள் அழிந்து போனால் தான் அதில் பாம்பு வந்து விடும்.
சரி நாம விடயத்திற்கு வருவோம்.
ஒரு கைப்பிடி அளவு புற்று மண். ஒரு கைப்பிடி அளவு கல்லுப்பு இரண்டு பல்லு பூண்டு.
அவ்வளவு தான் இந்த மூன்றையும் நன்றாக அரைக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அரைகிறோமோ அவ்வளவு நுட்பமாக உடலில் பாயும்.
நன்றாக அரைத்து ஒரு சட்டியிலிட்டு காய்ச்ச வேண்டும். நன்றாக பசை போன்ற பதம் வந்த உடன் இறக்கிவிடவேண்டும். இப்பொழுது மருந்து தயார்.
நாம கீழே விழுந்த உடன் அடிப்பட்ட இடம் வீக்கம் ஏற்படும். வீக்கம் உள்ள இடத்தில இந்த மருந்தை போட்டால் கெட்டியாக பிடித்துக்கொள்ளும். விடாது. எப்பொழுது வலி விடுகிறதோ அப்பொழுதுதான் இந்த பசை விடும்.
மூன்று நாள் போதும்.
மூட்டு வலி உள்ளவர்களும் போடலாம்.
வயதான காலத்தில் காலில் குத்தல் இருக்கிறதென்றும் சொல்வார்கள். அவர்கள் போட்டால் குத்தல் உடனே அடங்கி விடும்.
தாங்கமுடியாத வலி உள்ளவர்கள் மூட்டு வலி உள்ளவர்கள் இதை காலை ஒரு முறை போட்டு மாலை கழுவி விட்டு சிறிது இடைவெளி விட்டு போட நல்ல பலன் தெரியும்.
குறிப்பு : வெதுவெதுப்பான நீரில் காலை கழுவிவிட்டு இந்த பசையை இளம் சூட்டில் வலி உள்ள இடத்தில பத்து போடவும்

No comments:

Post a Comment