jaga flash news

Wednesday, 6 May 2015

முருகன்:

முருகன்:
இதுவரை நாம் பார்த்து வந்த வரலாறுகளை விட மிக முக்கியமான வரலாறு இவருடையது. இவரை பற்றி இதுவரை அறிந்த விடயத்தில் இருந்து தொடங்குவோம்.
அறுபடை வீடு.
1.திருப்பரங்குன்றம் - சூரபத்மனை போரில் வென்ற பின் இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமிது.
2.திருச்செந்தூர் - அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றி வாகைச் சூடிய திருத்தலமிது.
3.பழநி - மாங்கனிக்காக தமையன் விநாயகரோடு போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணியாக நின்ற திருத்தலமிது.
4.சுவாமிமலை - தன் தந்தை சிவனுக்கே பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன்சுவாமியாக காட்சிதரும் திருத்தலமிது.
5.திருத்தணி - சூரனை வதம் செய்தபின் சினம் தணிந்து, குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமிது.
6.பழமுதிர்சோலை - ஔவைக்கு பழம் உதிர்த்து, வள்ளி தெய்வானையோடு காட்சிதரும் திருத்தலமிது.
மேற்குறிப்பிட்ட வரிசை படியே முதல் வீடு திருபரங்குன்றத்தில் இருந்து ஆறாம் வீடாக பழமுதிர்சோலை வரை இலக்கியங்களில் வரிசை படுத்தப்படுகிறது.
இவ்வரிசையில் எனக்குள் எழுந்த வினாவே என் அனைத்து தேடலக்கும் காரணமானது. அந்த வினா,
தகப்பனான சிவனுக்கு உபதேசம் செய்த சுவாமி மலை முதல் வீடாக இருக்க வேண்டும்.
ஞான பழம் கிடைக்காத கோபத்தில் அமர்ந்த பழனி இரண்டாம் வீடாக வந்திருக்க வேண்டும்.
சூரனை வதம் செய்த திருசெந்தூர் மூன்றாம் வீடாக வந்திருக்க வேண்டும்.
சூர வதம் முடிந்து தெய்வானை திருமணம் நடைபெற்ற திருபரங்குன்றம் நான்காம் வீடாகவும்
வள்ளியை மணம் புரிந்த திருதனிகை ஐந்தாம் வீடாகவும் இருக்க வேண்டும்.
இதில் அவர் உருவான சரவன பொய்கை எங்குள்ளது என்பதிலும் தெளிவில்லை.
இறுதியாக உள்ள பழமுதிர்சோலை மட்டுமே சரியாக ஆறாம் வீடாக வருகிறது. அப்படியானால் படை வீடுகளின் வரிசை தவறா அல்லது சொல்லப்பட்ட கதை தவறா? இந்த கேள்விக்காண விடை தேடலின் விளக்கமே உண்மை வரலாற்று பதிவுகள்.
முன் பதிவுகளில் கூறப்பட்டது போலவே கதைகள் மட்டுமே தவறானவை வழக்கங்கள் உண்மையானது என்ற கருத்துடன் தொடர்வோம்.
1. திருபரங்குன்றம்- திரு+பரன்+ குன்று. இதில் பரன் எனப்படுவது சிவனை மட்டும் குறிப்பதல்ல. சங்க இலக்கியங்களில் வரும் சேயோன் வழிபாடு என்பதும் சிவனை மட்டும் குறிப்பதல்ல. தமிழர் பரம்பரை எனும் விளக்கத்தில் பரன், சேயோன், ஓட்டன் என வரிசை படுத்தப்பட்டுள்ளதை கவனித்தால் முன்னோர்களை வணங்கிய சமூகமே தமிழ் சமூகம் என்பது விளங்குகிறது. பரன் குன்று என்பது மூத்தோர் வாழும் அல்லது வாழ்ந்த குன்று.
தெய்வானை - தெய்வம் + யானை. தெய்வ யானை என்றால் விநாயகர். முருகன் விநாயகரையா திருமணம் செய்யமுடியும்? ஆனாலும் கரம் பிடித்தார் என பல சங்க இலக்கிய குறிப்புகள் உள்ளதே.
குருகுல கல்வியின் ஆரம்ப நாளில் செய்யப்படும் தீட்சை என்பதை இன்றும் பூனூல் கல்யாணம் என்றல்லவா கூறுகின்றோம். ஆக கல்வி கற்க குருவிடம் முதல் உபதேசம் பெற்று தெய்வ யானை (விநாயகர்) வடிவில் உள்ள யோக மார்கத்தை மணதில் இருத்துதலே கரம் பிடித்தார் என்று எடுத்துக்கொள்ளலாமல்லவா.
குருகுலத்தில் ப்ரணவ தத்துவம் கற்றறியாத பேரமணருடன் ஏற்பட்ட கருத்து மோதலில் அவரை சிறைபிடித்தார். இதுவே ப்ரம்மாவை சிறைபிடித்தார் என கூறப்பட்டது. மேலும் குருவாக தகுதி இல்லாதவரே குருவாக உள்ளர் என்பதால் ஆதிநாதரையே மானசீக குருவாக ஏற்று ஆயா கலைகள் அனைத்தையும் சுயமாக கற்றறிந்தார். தான் கற்றறிந்த கலைகளை இவரை போல் உள்ளவர்களுடன் பகிர்ந்தும் கொண்டார். இதுவே இவர் உருவாக்கிய முதல் படை (போர்வீரர்களுக்கான) வீடு.
2. திருசெந்தூர் - இவர் பாண்டிய நாட்டின் மிக முக்கிய பொருப்பிலிருந்த ஒருவரின் மகனாகவோ அல்லது இளவரசனாக இருந்திருக்க வேண்டும். கல்வியில் மட்டுமல்லாது தற்காப்பு கலைகளிலும் சிறந்தவராக இருந்த காரணத்தினால், கடற்கொள்ளையர்களால் சிறைபிடுக்கப்பட்ட சயந்தன் (அரச பொருப்பில் இருந்தவரா அல்லது வணிகரா என்பது பற்றி தெளிவில்லை) என்பவரை மீட்பதற்காக திருச்செந்தூரில் வீரபாகு என்ற சேனாதிபதியுடன் இணைந்து சூரனை வென்று அங்கேயே தங்கி அவ்விட வாழ் மக்களுக்கு தற்காப்பு கலையினை படிபித்த இரண்டாம் படைவீடு.
3. பழனி -ஆவினன்குடி என்பதே சரியான பெயர். ஆ இனன் குடி. இதில் ஆ = பசு, இனன்= இனம் சாரந்தவன் ( உறவினன் = உறவு+இனன்), குடி = வாழுமிடம். பசு இனம் வாழும் பகுதி அல்லது பசு வளர்ப்போர் வாழும் பகுதி.
குருகுல கல்வி எனும் பெயரில் ஒரு இடத்தில் அமர்ந்து (விநாயகரை போல்) உலக நடப்புகளை அறிவதை மனிதரோடு மனிதராய் வாழ்ந்துணர்வதே சிறந்தது என எண்ணம் கொண்டு சன்யாசம் பெற்று வந்த இடம் ஆவினன்குடி. ஏதுமறியா வீனர்கள் குருவாக அமைந்ததால் பிரிந்துகிடந்த சித்தர்கள் மீண்டும் இணைந்த இடம் ஆவினன்குடி. இங்கு சில காலம் தங்கி தான் கற்றதை பிறர்க்கு படிபித்த படை வீடு. தண்டை (சிலம்பம்) வைத்து களரி கலையினை (சிலம்ப சண்டை) உருவாக்கி தண்டாயுதபானி ஆன மூன்றாம் படைவீடு.
4. சுவாமிமலை - ஆவினன் குடியில் இருந்து சோழ தேசம் வநதவரை சோழ மன்னன் சோதனை செய்ய ப்ரணவ தத்துவம் விளக்கபட்டது. நாடாலும் அரசனிடமும் அவருக்கு வழிகாட்டும் அமைச்சர்களுகளிடமும் கேட்பவன் சீடன் ஒதுபவன் ஆசான் என கூறி காலசுலர்சியின் காரணமாக மருவியிருந்த வழக்கங்களை மக்களுக்கு விளக்கிளார். ஆதிநாதர் வகுத்த பண்பாட்டை அவரை விட தெளிவாகவும் விரிவாகவும் சோழ மக்களுக்கு எடுத்துரைத்த காரணத்தினால் தகப்பன்சுவாமி ( ஆதிநாதரின் உருவமாக) என பெயர் பெற்றார். இச்சோழ தேச மக்களுக்கு தற்காப்பு கலையினை கற்றுத்தந்த இடமானசுவாமி மலை நான்காம் படை வீடு.
5. திருத்தனிகை - ஆரிய ஊடுருவள் தெற்கை விட வடக்கிலே அதிகமிருந்த காரணத்தினால் தற்கால ஆந்திரா பகுதியில் வாழ்ந்த வடுக மன்னர்ளும் ஆரிய ப்ராமணர்களின் கை பொம்மையாகவே செயல்பட்டனர். வடுகர்களின் மூலமாக சோழ தேசத்தினை அடிமைபடுத்தும் எண்ணம் கொண்டு போர் தொடுத்தனர் ஆரியர்கள். இதனையறிந்த மருகன் சோழ தேச வடக்கு எல்லையினை காக்க படை நடத்திய இடம் தனிகைமலை.
வள்ளி என்பது பெண் அல்ல எதிர்பவரை புறமுதுகிட்ட ஓட செய்யும் வீரனுக்க அணிவிக்கப்படும் அணிகலன் என தொல்காப்பிய குறிப்பு உணர்த்துகிறது. தனிகைமலை சிற்றரசன் (குறவர் வம்சத்தவன்) இவருது வீரம் கண்டு இவருக்குஅளித்த பரிசே வள்ளி. மேலும் வள்ளியம் என்றால் முக்தியடைதல் என்றொரு பொருளும் வழங்கப்படுகிறது. எவ்விளக்கமாயினும் வள்ளி என்பது பெண்ணல்ல. வடுகர்களை புற முதுகிட செய்த ஐந்தாம் படை வீடு.
6. பழமுதிர்ச்சோலை - ஔவையார் தன்னை அனைத்துமறிந்த மகாயோகி என கருதிய நேரத்தில் ஒரு ஆவின சிறுவனின் சுட்ட பழமா சுடாத பழமா கேள்வியினால், கற்றது கல்லளவு கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்த இடம். சிறுவனாக வந்தது மருகனே என எண்ணி ஔவை உருவாக்கிய ஆறாம் படைவீடு.
மருகன் வாழ்ந்த காலம் பார்சுவநாதர் காலத்திற்கும் இரண்டாம் கடல் சீற்றத்திற்கும் சமகாலமாகவோ அல்லது சில வருடங்களுக்கு முன்பாகவோ இருக்கலாம். தீர்த்தங்கரர் பதவியை ஏற்க மறுத்து அவ்வகையிலான தலைமை தேவையில்லாதது எனவும் ஆதிநாதரின் கருத்துக்களை அவருக்கு பின் வந்தவர்கள் சுயநலனுக்காக திரித்து கூறுவதாகவும் கருதினார் மருகன். (இதன் விளக்கம் அடுத்த பதிவில்). மருகனின் வருகையினால் தீர்த்தங்கரர் நியமனம் நிறைவுற்றது. இதனால் வடநாட்டு மக்களால் மகாவீரர் 24ம் தீர்த்தங்கரராக பின்னால் அறிவிக்கப்பட்டார்.
கடல் சீற்றத்தின் பிறகு குறைந்த மக்கள் தொகையினை அதிகரிக்கவே உயிர் உருவாக காரணமான விந்தணுவின் வடிவில் (எவ்வாறு விந்தணுவின் வடிவம் கண்டறிந்தார்???) வேல் எனும் ஆயுதத்ததை வடிவமைத்திருக்க வேண்டும். உயிர் உருவாக காரணமான அணுவின் வடிவிலேயே உயிர் பறிக்கும் ஆயுதம் ஏந்தியதின் காரணத்தினையும் அறிய முடியவில்லை.
வேளாண்மை எனும் சொல் இதிலிருந்து வந்ததே. நிலத்தை உழுது விதைப்பவன் உழவன். பெண்ணை உழுது விதையை விதைப்பவன் ஆண்மகன். விதைப்பது என்பது ஆண்மகன் கடமை விளைச்சல் தருவது பெண்களின் கடமை (பூமா தேவி பெண்தானே). அதனால் தான் வெல்+ஆன்மை = வெல்லாண்மை மருவி வேளாண்மை என்றாகிவிட்டது. இதில் வெல் என்பது வெற்றி என்பதன் வினைச்சொல். ஆயிரக்கணக்கான விதைகள் விதைக்கப்பட்டாலும் கருவை கிழித்து வெல்லும் வித்துவின் வெற்றி. உழவை தவிர எந்த தொழிலும் ஆண்மை அடையாளம் பெறவில்லை (மருந்தாண்மை, தட்சாண்மை , குயவாண்மை என்றில்லாமல் இருப்பதன் காரணம் இதனால் தானே.)
இவர் மயில் வாகனன் எனவும் சேவல் கொடியுடையோன் எனவும் அழைக்கப்படுவதன் காரணம் இவருடைய அழகு. மான் மற்றும் புறா கூட அழகுதான் ஏன் மயிலை உருவகபடுத்தினர்???
மயில் மற்றும் சேவல் சண்டையிடும் போது நேரில் காணுங்கள் அப்போது புரியும் காரணம்.
யாமிருக்க பயமேன் என்று வேறு எந்த கடவுள் வழிபாட்டிலும் இல்லாத ஒன்று எதனால் இவர் வழிபாட்டில் மட்டும் உள்ளது. பயம் போக்கும் கடவுளாக இவரை மட்டும் முன்னோர்கள் ஏன் வழிபட வேண்டும். இவரே தற்காப்பு கலைகளை முறைபடுத்தி அட்டமா சித்திகள் எனப்படும் எட்டு விதமான சித்திகளை உருவாக்கினார். இவரை தஞ்சமடைபவர்களின் பயத்தை வேரறுத்த காரணத்தினால் யாமிருக்க பயமேன் என இவர் வழிபாடுகளில் பயன்படுத்தபடுகிறது.
இவரை தமிழரை (கேரளமும்) தவிர மற்ற மாநிலத்தவர் வழிபடாததன் காரணம், வடுகர்களை (தற்கால ஆந்திரா மற்றும் கர்னாடகா) இவர் போர்களத்தில் எதிர்த்ததின் காரணத்தினால் தான்.
இவரை தமிழ்கடவுள் என்பதன் காரணம் தமிழரை தவிர எவறும் வழிபடாததால் மட்டுமல்ல தமிழ் மொழியினை சீரமைத்த காரணத்தினாலும்தான். மேலும் இவர் வழிவந்தவர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆங்காங்கே தங்கி மக்களுக்கு போதித்துள்ளனர். அப்படி உருவான வாக்கியம் தான் குன்று இருக்குமிடமெல்லாம் குமரனிருக்குமிடம். இப்படி உருவான கோவில்கள்தான் சிவன் மலை, சென்னிமலை, மருதமலை, அழகர்மலை பழநி மலை இன்னும் பல.
இவருடய கருத்துகள் பல தேசங்களுக்கும் வணிக மக்கள் மூலமாக பரவியுள்ளது. இன்றும் கூட மயில் வரையப்பட்ட விளக்கினை குல தெய்வ வழிபாடாக கொண்ட அரேபிய பழங்குடியின மக்கள் உள்ளனர். இவருடைய பஞ்சாமருத ப்ரசாதத்தில் அரேபிய பழமான பேரீச்சம் (ஈச்சம்) பழம் சேர்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment