jaga flash news

Wednesday 6 May 2015

விஷ்ணு:

விஷ்ணு:
இதற்கு முன் பதிந்த பதிவுகளில் பெரிய அளவில் முரண்பட்ட கருத்துகளை நான் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இனி வரும் பதிவுகளில் மிகப்பெரும் முரண்பாடுகள் ஏற்படும். காரணம் இதற்கு முன் வந்த பதிவுகளில் வரலாற்றின் அறிவியல் விளக்கங்கள் மட்டுமே விளக்கப்பட்டது. ஆனால் இனி வரும் பதிவுகளில் இதுவரை நாம் நம்பி வந்த நம்பிக்கை வெறும் கதைகளே என்று எடுத்து வழங்கப்பட உள்ளது. நம்பிக்கைகள் கதைகளானால் நம் மனம் சற்றே குழப்பமடையும். ஆனாலும் நானறிந்த உண்மையினை வெளிப்படுத்த வேண்டிய காரணத்தினால் இப்பதிவின் கருப்பொருளுக்கு செல்கிறேன். இந்த பதிவில் வரலாற்று உண்மை மட்டுமே விளக்கப்படும். எதற்காக தற்காலத்தில் பயன்படுத்தப்படும் கதைகள் வந்தது என்பதை அறிய கிமு 5ம் நூற்றாண்டு முதல் கிபி 8ம் நூற்றாண்டு வரையிலான வரலாறு பதியப்படும் வரை காத்திருக்கவேண்டும்.
விஷ்ணுவை பற்றி நாம் அறிய வேண்டுமானால் 23ம் தீர்தந்தங்கரர் பார்சுவநாதர் பற்றிய விபரங்களை நாம் அறிய வேண்டும்.
பார்சுவநாதன் - பார்சகநாதன்.
பார் - நோக்கு, கவனி
சகம் - பிரபஞ்சம், பால்வெளி மண்டலம். (சகமே ஆரியன் உச்சரிப்பில் ஜகம் ஆனது).
நாதன் - தலைவன்.
இதன் விளக்கம் பால்வெளிமண்டலத்தினை உற்று நோக்கிய தலைவன்.(The abserver and researcher of milky way galaxy).
எண்ணாயிரம், சித்தன்னவாசல் மற்றும் பல குடைவரை சிற்பங்களில் இவருடைய சிலை ஐந்து தலை நாகத்துடன் சித்தரிக்கப்படுள்ளது.
ஐந்து தலை நாகம் என்பது நாம் இன்று பயன்படுத்திவரும் பாம்பு பஞ்சாங்கத்திலும் உள்ளது. பஞ்ச அங்கம் பற்றி அனைவரும் அறிந்தது தான். நாள், நற்சித்திரம், திதி, யோகம் மற்றும் கரணம்.
இதில் உள்ள ஒற்றுமை அனைவருக்கும் புரியும் என எண்ணுகிறேன்.
பார்சகநாதர் பால்வெளிமண்டபத்தை ஆராய்ந்து பஞ்சாங்கம் என்ற கணிப்பினை கண்டறிந்துள்ளார். அதனை உணர்த்தவே ஐந்து தலை பாம்புடன் அவர் உருவம் வரையப்பட்டுள்ளது.
இவர் இந்த ஆராய்ச்சியினை முற்றிலும் இரவு நேரத்தில் மட்டுமே செய்திருக்க வேண்டும், ஏனெனில் பகல் நேரத்தில் குன்றில் பாறையின் மீது அமர்ந்தோ படுத்தோ இருக்கமுடியாது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரத்தில் தான் சந்திரனின் சுழற்சி நன்கு புலப்படும்.
திருச்சி திருவரங்க அரங்கநாதர் சிலையும் ஐந்து தலை நாகத்துடன் உள்ளது.பாற்கடலில் பள்ளிகொண்டாத கருதப்படும் விஷ்ணுவும் ஐந்து தலை நாகத்துடனுள்ளார்.
மேலும் விஷ்ணு சிலைகள் மற்ற சிலைகள் போல் நிற்காமல் மலர்ந்து படுத்த நிலையில். இது பார்சகநாதர் இரவில் குன்றின் பாறைகளில் மலர்ந்து படுத்து விண்வெளியை ஆராய்வதையே உணர்துகிறது.
இரவில் அதிக நேரம் கண் விழிப்பதாலும் அதிக குளிரின் காரணத்தினாலும் இவருக்கு நோய் தாக்குதல்கள் இருந்திருக்க வேண்டும் . அதனால் சிகிச்சை வழங்க எந்தநேரமும் பெண்கள் ( Nurses) இருந்திருக்க வேண்டும். அது அவர் மனைவியாக இருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும் தீர்தங்கரர் வரலாறுகளில் திருமண வாழ்வு பற்றி தெளிவான விளக்கங்களின் படி பார்த்தால் அவர் உடன் இருந்த பெண்கள் அவரது பெண்சீடர்களாகவே இருக்க வேண்டும். அவ்வாறு அவர்களுடய சிகிச்சையின் படி எப்போதும் ஒருவிதமான மூலிகை பத்து ( தற்காலத்தில் நாமம் பூசுவது ) அவரது நெற்றியில் இருந்திருக்க வேண்டும்.
மேலே நான் பல பெண்கள் என கூறியதன் காரணம் திருமூலரால் உருவாக்கப்பட்ட திகம்பரம் நடராச பெருமாள் கோவிலில் உள்ள கோவிந்தராசர் உடன் ஒன்றுக்கும் அதிகமான பெண் சிலைகள் உள்ளது.
திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலில் அரங்கநாதர் சன்னதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்சிலைகள் உள்ளது.
அடுத்து அவர் கையில் இருக்கும் சக்கரம் சூரிய குடும்ப சுற்றுவட்ட பாதையினையும் அதன் இயக்கத்தையும் (சுற்றுவதையும்) உணர்துகின்றது. நடராசர் சிலையில் தீயினை கையில் வைத்திருப்பதும் இதை உணர்தவே.
விஷ்ணு கையில் சங்கும் இருக்கும் , இது பூமி சுற்றுவதால் ஏற்படும் ஒலியினை குறிப்பிடுகிறது. நடராசர் சிலையில் இருக்கும் உடுக்கையும் இதையே உணர்துகிறது. தற்காலத்தில் சிவன் என அறிப்படும் ஆதி நாதர் வாழ்ந்தது மலை பகுதிகளில் எனவே அவருக்கு தோலால் செய்யப்பட்ட இசைகருவியையைம், பார்சகநாதர் வாழ்ந்தது மருதம் மற்றும் நெய்தல் பகுதிகளில் எனவே இவருக்கு கடலில் கிடைக்கும் சங்கு இசைகருவியாகவும் இருப்பதன் காரணம் விளங்குமென நினைக்கிறேன்
அடுத்து சுப்ரபாதம் எனப்படும் திருபள்ளியெழுச்சி பற்றி பார்ப்போம். தற்கால சமகிருத பாடலின் பொருள் அறியாதவர்கள் கீழுள்ள இணைப்பின் வாயிலாக தமிழில் இச்சுப்ரபாதத்தை கேட்டு அதனை விளங்கி கொள்ள வேண்டுகிறேன்.
m.youtube.com/watch?v=suIJauJcYvc
இப்பாடலின் விளக்கம் அதிகாலை புழர்ந்து விட்டது கதிரவன் உதித்துவிட்டது தாங்கள் எழுந்தருளுங்கள் என்றுஉள்ளது.
இரவு நேரத்தில் விண்வெளி ஆராய்ச்சியின் போது தன்னை மறந்து உறங்கிய குருவினை காலையில் எழுப்பவே இப்படி ஒரு துயில் எழுப்பும் தாலாட்டு பார்சகநாதர் சீடர்களால் பாடப்பட்டது. அதை இன்றும் நாம் பாடிவருகிறோம். இதில் கொடுமை இன்றும் அவரை எழுப்பவே பாடி வருவதுதான். இதற்கு திருபள்ளியெழுச்சி என பெயர்வரக் காரணம், பள்ளியறை என்பது படுக்கையறை என்பதை நாம் அறிவோம். இவருடைய படுக்கையில் இருந்து எழுப்பும் காரணத்தினால் இது திருபள்ளியெழுச்சி எனப்படுகிறது. இவ்வகையான திருபள்ளியெழுச்சி பாடல்கள் வேறு எந்த கடவுள் வழி பாடுகளிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியறை எனும் படுக்கை அறையின் பெயரில் எப்படி கல்வி பயிலும் பள்ளிகூடம் வந்திருக்கும். ஆரம்பகாலத்தில் குருவின் இல்லத்தில் தான் கல்வி பயிலும் பழக்கம் இருந்தது அதனால் அவர் படுக்கையறை குறிக்கும் பள்ளியறை பின்னாளில் பள்ளிகூடமாக மாறியிருக்கும் என்பது என் கருத்து.
அடுத்து வைகுண்ட ஏகாதசி:
ஏகாதசி என்படுவது பதினோராம் நாள் என்பதை குறிக்கும், அதாவது அமாவாசையில் இருந்து பதினோராம் நாள் மற்றும் பௌர்ணமியில் இருந்து பதினோராம் நாள். இது அனைத்து மாதங்களிலும் இரண்டு முறை வரும். வானவியல் விஞ்ஞானியான பார்சகநாதர் மார்கழி மாதத்தில் மட்டும் சூரிய உதயம் வரை வானம் மேகங்கள் இல்லாமல்தெளிவாக இருப்பதனையும் தைமாத பிறப்பிற்கு பின்பு (உண்மையில் தை முதல் மார்கழி வரை நாம் பயன்படுத்தும் பெயர்கள் அனைத்தும் அன்று வேறு பெயர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது குழப்பத்தை தவிர்க்க இன்றைய பெயர்களை அப்படியே பயன்படுத்தியுள்ளேன்.) தை மாதத்திற்குபிறகு சூரியனின் உதயம் தென்கிழக்கில் இருந்து வடகிழக்கு நோக்கி திசை மாறுவதையும் உணர்ந்தார். (கண்ணன் பாரத போருக்கு பிறகு இந்த சூரியனின் திசை மாறுதல் நிகழும் காலத்திலேயே பழைமை வாதிகள் இறந்து புது இளவரசன் உத்திரைக்கு பிறந்ததால் இந்த சூரியனின் திசை மாறுதலை அபிமன்யு மனைவி பெயரான உத்திரையின் பெயர் கொண்டு உத்ரா அயனம் என கூறினார். இதுவே இன்றும் பயன்படுத்தப்படுகிறது.)
இந்த சூரிய திசை மாறுதலுக்கு முன்பே சில நல்ல அறிகுறிகளையும் உணர்ந்துள்ளார் பார்சக நாதர். அதாவது இன்று நாம் ப்ரம்ம முகூர்த்தம் எனும் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சூரிய உதயத்தின் முன்பாகவே ப்ராண சக்திகள் உய்தெழும் என்று அறிந்துள்ளோம். அதுபோலவே சூரிய திசை மாறுதலுக்கு முன்பாகவே நச்சு சக்கிகள் குறைந்து ப்ராண சக்திகள் உய்தெழும் ப்ரம்ம மாதமாக மார்கழி மாதத்தினை உணர்ந்து, மார்கழி மாத அமாவாசை நாளில் இருந்து வளர்பிறை முழுவதுமாகவும் தேய்பிறையில் 6 நாட்களுமாக 20 நாட்கள் அதிகாலை நேரத்தில் கண்விழித்து இயற்கையின் நல்ல அதிர்வுகளை பெற முடியும் என்பதற்காக மார்கழி வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் இருபது நாட்கள் தொடர்ந்து வழிபட முடியாத காரணத்தினால் 11ம் நாள் ஏகாதசி முதல் பௌர்ணமி நாளான திருவாதிரை நற்சித்திரம் வரை 4 நாட்களாக குறைக்கப்பட்டது. இன்று அதுவும் இல்லை என்பது வேறு விடயம். அதனால்தான் இன்றும் மார்கழி மாத ஏகாதசி அன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாப்படுகிறது.
அடுத்து அவருடைய வாகனமாக கருடனை அறிவதன் காரணம்:
எந்த நேரமும் வானத்தின் அசைவுகளையும் அதில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்கும் காரணத்தினால் அதனை உணர்த்தும் விதமாக கருடனை அவரது வாகனமாக்கினர் நம் முன்னோர்.
பெயர் விளக்கம்:
நாராயணம் - நாராயணன் - நரன்+ அயனம். அதாவது நரன் என்றழைக்கப்படும் மனிதனின் அயனத்தை கண்டுணர ஏதுவான தனிமனித சாதக கணக்கீடுகளை கண்டுணர்ந்ததன் காரணமாக நாரயணன் எனும் பெயர் வந்திருக்கும்.
கோவிந்தன் - கோ + விந்தன்.
கோ - அரசன்.
விந்தன் - மேய்பவன், வளர்பவன், காப்பாற்றுபவன்.
இதில் இருந்து விளங்குவது அரசனை ஆட்டுவிப்பவன் என பொருள் கொள்ளலாம். முன் பிதிவுகளில் அரசனை வழிநடத்துவது பேரமணர் என்றே பார்தோம். பார்சக நாதரும் ஒரு பேரமணரே ஆகவே இப்பெயர் வந்தது என்றொறு கருத்தும்
கோவிந்தன் - கோவித்தன். வித்தைகளுக்கெல்லாம் அரசன் எனும் கருத்தும் கருதப்படுகிறது.
விஷ்ணு எனும் பெயர் நெடுங்காளங்களுக்கு பிறகு வழக்கத்திற்கு வந்தது. மும்மூர்திகளில் இவரையே நடுநிலையில் வைத்து காக்கும் கடவுளாக கதை கட்டிய போது உருவானது.
தனிமனித அயனத்தை முறை படுத்தி இருந்ததால் இவரை குடும்ப தலைவன் என உணர வீட்டினன் என அழைத்தனர்.
வீட்டினன் - விட்டினன் - விட்டுனு - விஷ்ணு என மருவியது.
பெருமாள் - பெருமாண் - பெரும் + ஆண் = பெரிய மனிதன் எனவும் குடும்ப தலைவன் எனவும் கருதலாம்.
அப்படியனால் சனிகிழமை பெருமாளுக்கு விரதம் இருப்பதன் காரணம்?
வாரத்தின் ஏழு நாட்களில் சனி கிழமையில் மட்டும் உடலுக்கு கெடுதல் புரியும் அதிர்வுகள் அதிகரிப்பதின் அறிவியல் விளக்கம் நாம் அறிந்ததே. இதனை கருத்தில் கொண்டு பார்சக நாதரால் உருவாக்கப்பட்ட மருத்துவ முறைகளில் சனி எள் நெய் தேய்த்து நீராடுவது வழக்கமானது. அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதாத்தில் சூரியனின் தாக்கம் புவியின் மீது மிகவும் குறைந்திருக்கும் இதனால் தான் அம்மாதத்தில் சனி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
இதில் இருந்து தென்னகத்தில் வழிபடும் நாரயணனுக்கும் வட நாட்டில் வணங்கப்படும் கண்ணனுக்கும் தொடர்பு இல்லை என்பது தெளிவாகிறது.
மேலும் சில தகவல்கள் தென்னகத்தில் விஷ்ணு கோவில்கள் என்ற பெயரில் தனி கோவில் கிடையாது. கண்ணன் மற்றும் ராமர் கோவில்களும் கிடையாது. வட நாட்டிலும் அனந்த சயன (மலர்ந்து படுத்த) நிலையில் விஷ்ணு வழிபாடு இல்லை.
கண்ணன் கைகளில் உள்ள சங்கு போரின் போது பயன்படுத்தப்பட்டது. நாராயணன் கையில் உள்ளது ஒலியினை உணர உருவகப்படுத்தப்பட்டது. கண்ணன் கைகளில் உள்ள சக்கரம் வளரி எனப்படும் ஆயுதம் ஆனால் நாராயணன் கைகளில் உள்ளது சூரிய குடும்ப சுழற்சியின் வரைபடம்.
தீப அவளி - தீப வரிசை எனும் வழக்கம் எப்போதும் இரவு நேரத்தில் அனைத்து பகுதி மக்களாலும் வைக்கப்பட்டது. இது பிற்காலத்தில் தீபாவளியாக மாறிவிட்டது.
ஐப்பசி மாதத்தில் சூரியனின் தாக்கம் பூமியில் முற்றிலுமாக இருக்காது (சோதிடத்தில் சூரியன் நீசம் ஆகும் மாதம்). ஆன்ம சக்கிக்கு காரணமான சூரியனின் நீசமான அதே நேரத்தில் மனவலிமைக்கு உருதுனை செய்யும் சந்திரனும் வலிமை இல்லாத நாள் அமாவாசை. எனவே ஐப்பசி அமாவாசை முதல் கார்த்திகை பௌர்ணமி ( தீப திருநாள்) வரை தவறாது தீப அவளி அனைவர் இல்லத்திலும் இருக்க வேண்டும் என உருவாக்கப்பட்டதே இந்த திருநாள்.
(இன்றைக்கு மனித இனத்திற்கு கெடுதலான வெடி மருந்துகளையும் மது மாமிச விசங்களையும் கொண்டு கொண்டாடும் விழா வாக வணிக நோக்கில் கறி (ரி) நாளாக மாற்றப்பட்டுவிட்டது என்பது வேதனைக்குறிய விடையம்).
இதற்குக்கும் கண்ணனுக்கும் தொடர்பு இருப்பதாக இருந்தால் அது பின்வருமாறு தான் இருந்திருக்க வேண்டும் என்பது என் கருத்து.
ஆதியில் மனிதன் நெருப்பை கண்டுபிடித்த போது கையில் கிடைத்த மரம் சருகு போன்ற வற்றை எரித்திருக்க வேண்டும். அல்லது தீ ப்பந்தமாக பயன்படுத்தியிருக்க வேண்டும். கண்ணன் காலத்தில் எள் நெய்யை பயன்படுத்தி தீப அவளிகளின் மூலமாக இருட்டை விரட்டியதால், கண்ணன் நரகாசூரனை விரட்டியதாக பின்னாலில் கதை வளர்ந்திருக்கும்.
இப்படி இன்னும் சொல்லி கொண்டே போகலாம். இதிலிருந்து நாம் விளங்கி கொண்டது விஷ்ணு வேறு கண்ணன் வேறு ராமர் வேறு. மூவருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை மூவரும் மனிதர்கள்

No comments:

Post a Comment