ஜோசியம், ஜாதகம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய நாடே நம்முடையது. இதில் சிலவற்றை மூட நம்பிக்கைகளாக கருதினாலும் கூட, அதன் மீது பலரும் அதிகளவிலான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். அனைத்து விதமான புது முயற்சிகளும், நாள் நட்சத்திரம் பார்க்கும் கூட்டமும் இங்கே அதிகம். குழந்தை பிறந்தவுடன், அது பிறந்த தேதி, நாள், நட்சத்திரத்தைப் பொறுத்து தானே குழந்தைக்கு பலரும் பெயரே தேர்ந்தெடுக்கின்றனர்.
உங்கள் பெயருக்கு பின்னால் இருக்கும் இரகசியம் :
ஜாதகத்தை பொறுத்து தான் பல பெயர்கள் வைக்கப்படுகிறது. ஜாதகத்தின் படி பெயர் வைக்காதவர்கள் அதனால் சில தாக்கங்களை அனுபவிக்கக்கூடும். அதற்கு காரணம் பிற ஜாதகத்துக்குறிய பெயர்களை அல்லவா அவர்கள் கொண்டுள்ளனர்.
சில நேரங்களில் இப்படி வேறு ஜாதகத்திற்கு உண்டான பெயரை வைப்பதால் பெரியளவில் எந்த ஒரு தாக்கமும் இருப்பதில்லை. ஆனால், சில நேரங்களில் தான் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதற்கு காரணம் ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. அதேப்போல் ஒன்பது கிரகங்களும் நட்சத்திரக் கூட்டமும் நம் வாழ்க்கையின் மீது தாக்கங்களைக் கொண்டுள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, 12 ராசிகள் உள்ளன. ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து தான் அவருடைய ராசி அமையும். பல நூற்றாண்டு காலமாக ராசியை பொறுத்து தான் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு எழுத்துக்கள் உள்ளது. பிறந்த நேரத்தின் போது, நிலா எந்த ராசியில் உள்ளதோ, அதுவே குழந்தையின் ராசியாகிவிடும்.
மேஷம் :
சூ, சே, சோ, லா, லீ, லூ, லே, லோ, ஆ
செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது மேஷம். ஆற்றல் திறன் மற்றும் சுறுசுறுப்பு நிறைந்தவர்களாக இருப்பவர்களே மேஷ ராசிக்காரர்கள். மக்களை தங்களின் வசீகரம் மற்றும் கவர்ச்சியால் ஆளக்கூடிய புகழ்பெற்ற தலைவர்களாக இருப்பார்கள் இவர்கள். புதிய தளத்தில் காலூன்ற தயங்க மாட்டார்கள். பயமரியாதவர்கள் இவர்கள்.
ரிஷபம் :
ஈ, உ, ஏ, ஓ, வா, வீ, வூ, வே, வோ
சுக்ரன் கிரகத்தால் ஆளப்படுகிறது ரிஷபம். உடல் ரீதியான சுகம் மற்றும் பொருட்களை எண்ணுபவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். சொகுசை விரும்பும் அவர்கள், இதமான விஷயங்களால் சூழப்பட்டிருக்க விரும்புவார்கள்.
மிதுனம் :
கா, கீ, கூ, க, ட, ச, கே, கோ, ஹ
புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது மிதுனம். மிதுன ராசிக்காரர்கள் பேச ஆசைப்படுபவர்கள். மிதுன ராசிக்காரர்களின் உரையாடலுக்கு அவர்களின் மனதே பெரிய பின்புலமாக இருக்கும். உறவுகளை வளர்ப்பதில் இவர்கள் மிகுந்த சுவாரசியத்தை கொண்டிருப்பார்கள்.
கடகம் :
ஹி, ஹூ, ஹே, ஹோ, டா, டீ, டூ, டே, டோ
நிலாவினால் ஆளப்படுகிறது கடகம். கடக்க ராசிக்காரர்கள் வீடு மற்றும் குடும்ப சொகுசின் மீது பேரின்பத்தை பெறுவார்கள். தாய்க்குரிய அன்புடன் இருக்கும் இவர்கள் பிறரின் மீது பேரன்பை செலுத்துவார்கள்.
சிம்மம் :
மா, மீ, மூ, மே, மோ, டா, டீ, டூ, டே
சூரியனால் ஆளப்படுகிறது சிம்மம். பிறரை ஈர்ப்பதே சிம்ம ராசிக்காரர்களின் முதல் வேலை. மிகப்பெரிய லட்சியவாதிகள் இவர்கள். படைப்புத் திறனும் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
கன்னி :
டோ, பா, பீ, பூ, ஷ, ந, ண, ட, பே, போ
புதன் கிரகத்தால் ஆளப்படுகிறது கன்னி. கன்னி ராசிக்காரர்கள் நகைச்சுவைக்கு பெயர் பெற்றவர்கள். பிறரை சிரிக்க வைப்பதில் கில்லாடியாகும் இவர்கள். கஷ்ட்பட்டு, சீரான மற்றும் திறம்பட முறையில் வேலை செய்வதால், அவர்கள் நல்லதொரு பணியில் இருப்பார்கள்.
துலாம் :
ரா, ரீ, ரூ, ரே, ரோ, தா, தீ, தூ, தே
சுக்ரன் கிரகத்தால் ஆளப்படுகிறது துலாம். மிகவும் குவியத்துடனும், கவத்துடனும் இருப்பார்கள் துலாம் ராசிக்கார்கள். தங்களின் காதலன் அல்லது காதலியோடு இருக்கும் போது எப்போதுமே முழுமையாக உணர்வார்கள்.
விருச்சிகம் :
தோ, நா, நீ, நூ, நே, நோ, யா, யீ, யூ
செவ்வாய் மற்றும் ப்ளூட்டோ கிரகங்களால் ஆளப்படுகிறது விருச்சிகம். தேவையில்லாமலோ அல்லது அர்த்தமில்லாமலோ இவர்கள் பேச மாட்டார்கள். அதிமுக்கிய கேள்விகளை நறுக்கென கேட்பதே இவர்களின் குணம். இவர்கள் மிகுந்த ஆர்வம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
தனுசு :
யே, யோ, பா, பீ, பூ, தா, டா, பே
குரு கிரகத்தால் ஆளப்படுகிறது தனுசு. தனுசு ராசிக்காரர்கள் உண்மை விளிம்பிகளாக இருப்பார்கள். மேலும் தத்துவம் மற்றும் மதத்தின் மீது ஈடுபாட்டுடன் இருப்பார்கள்.
மகரம் :
போ, ஜா, ஜீ, கீ, கூ, கே, கோ, கா
சனி கிரகத்தால் ஆளப்படுகிறது மகரம். கஷ்ட்பட்டு, திறம்பட, ஒருங்கிணைந்து வேலை செய்யும் மகர ராசிக்காரர்கள் அதிக அதிர்வுகளை ஏற்படுத்த மாட்டார்கள். இவர்கள் மிகவும் பொறுமைசாலிகளும் கூட.
கும்பம் :
கூ, கே, கோ, சா, சீ, சூ, சே, சோ, தா
சனி மற்றும் யுரேனஸ் கிரகங்களால் ஆளப்படுகிறது கும்பம். மனிதாபிமானம் மற்றும் கொடை தன்மை கொண்டவர்களான கும்ப ராசிக்காரர்கள் இந்த உலகத்தை சிறந்த இடமாக மாறுவதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பார்கள்.
மீனம் :
தீ, தூ, த, ச, ஞ, தே, தோ, சா, சீ
குரு மற்றும் நெப்டியூன் கிரகங்களால் ஆளப்படுகிறது மீனம். பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டுள்ள மீனா ராசிக்காரர்கள் சுயநலம் இல்லாதவர்களாக இருப்பார்கள்
No comments:
Post a Comment