jaga flash news

Friday, 28 August 2015

வரலட்சுமி விரதம்

 வரலட்சுமி விரதம்....ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தவர்கள்,பகை,நீசம்,பாவ கிரக சம்பந்தம் உடைய ஜாதகம் பெற்ற பெண்கள் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாக செய்ய வேண்டிய பூஜை.வரலட்சுமி விரதம் எனப்படும் சுமங்கலி பூஜையானது வீடில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்
பூஜை முறை மாலை சுக்கிர ஓரையில் வாழை இலையில் கலசம் வைத்து அதில் பச்சரிசி நிரப்பி அச்சு வெல்லம் இரண்டு காதோலை கருகமணி ,தங்கம் வெள்ளி காசுகள் இருப்பின் அதனுள் போடவும் மாவிலை கொத்து வைத்து தேங்காய் மஞ்சள் தடவி வைக்கவும் குங்குமம் வைக்கவும் .
இருபுறமும் குத்து விளக்கு ஏற்றவும்.ஐந்து அல்லது ஒன்பது வித பலகாரங்கள் செய்யவும் பால்பாயசம் உட்பட.5அல்லது 9 சுமங்கலி பெண்களை அழைத்து லட்சுமி அஷ்டோத்திரம் 108 போற்றி பாடல் படித்து வழிபடவும் .அவர்களுக்கு வெற்றிலை பூ பழம் மஞ்சள் குங்குமம் தாலி கயிறு ஜாக்கெட் பித் கொடுத்து 11 ரூபாய் வைத்து வழியனுப்பவும்

No comments:

Post a Comment