jaga flash news

Friday, 28 August 2015

மகர லக்கினம்

பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

மகர லக்கினம் :

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் ராசியான மகர ராசியை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 8ல் அமர்ந்த குரு பகவான் தங்களுக்கு, அவசர கதியில் செய்யும் காரியங்களில் தடைகளையும் தாமதங்களையும் தருவார், சுய கட்டுபாடு மற்றும் தன்னம்பிக்கை இழக்கும் சூழ்நிலைகளை தரக்கூடும், பதட்டத்தில் செய்யும் காரியங்கள் மிகப்பெரிய இழப்புகளை ஏற்ப்படுத்தும், வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது அதிக கவனமுடன் இருப்பது நலம் தரும், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் சூழ்நிலையை தரும், வெளிநாடுகளில் இருந்து நல்ல வருமான வாய்ப்பை பெற்று தருவார், அதிக அளவில் முதலீடு செய்யும் பொழுது மிகுந்த கவனம் தேவை, வாழ்க்கை துணை மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் வழியில் இருந்து சிறு சிறு வீண் விரையங்கள் ஏற்ப்பட வாய்ப்பு உண்டு, மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருப்பது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் மிகுந்த நன்மையை தரும், வெளிவட்டார பழக்க வழக்கங்கள் அதிகரிக்கும், வேற்று மதத்தினர் மற்றும் வேற்று மொழி பேசும் அன்பர்கள் வழியில் இருந்து யோக வாழ்க்கை உண்டாகும், தொழில் அமைப்பில் இருந்து எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாக அதிக வாய்ப்பு உண்டு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, புதிய சொத்துகள் மற்றும் புதிய பொருட்கள் வாங்க சந்தர்ப்பங்கள் அதிக அளவில் ஏற்ப்படும்.

10ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக விரைய ஸ்தானமான 12ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, பெரிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் வந்த போதிலும் மிகுந்த எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சந்திக்கும் சூழ்நிலையை தரும், தேவையில்லாத அவப்பெயர் ஜாதகரை தேடி வரக்கூடும் என்பதால், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது நல்லது, தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரிய மனிதர்களின் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்வதும், பணிவு காட்டுவதும் முன்னேற்றத்தை தரும், மேலும் பெரியோர்களின் ஆலோசனை படி ஜீவன வாழ்க்கை மேற்கொள்வதும், காரியங்கள் ஆற்றுவதும் சீரான வளர்ச்சியை தரும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்கள் எதிர்பால் அமைப்பினரிடம் அதிக கவனமும் எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது வீண் அவ பெயரை தவிர்க்க உதவும், முன்னோர்களின் ஆசியை நாடுவது காரியங்களில் ஏற்ப்படும் தடைகளை தகர்த்தெறியும், ஆன்மீக பெரியோர்களின் ஆசிர்வாதமும், புனித திருத்தலங்களின் வழிபாடும் தங்களின் வாழ்க்கையில் சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வாரி வழங்கும்.

10ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, கை நிறைவான வருமான வாய்ப்பை வாரி வழங்கும், இதுவரை வாரா நிலுவை தொகைகள் திடீரென கைக்கு வந்து சேரரும், நிலபுலன்கள், சொத்துகளை விற்று அதிக லாபம் பார்க்கும் யோகம் உண்டாகும், முதலீடு செய்த இடங்களில் இருந்து அதிக படியான வருமானங்கள் வந்து சேரும், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும், சுப நிகழ்சிகள் தங்குதடையின்றி நடைபெறும், பிரிவு நிலையில் இருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள், குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும், முற்போக்கு சிந்தனையுடன் சகல காரியங்களிலும் வெற்றியை பெரும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சி அமையும், மனதில் நினைத்த எண்ணங்கள் யாவும் நடைபெறும், நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், பொழுதுபோக்கு கேளிக்கை அம்சங்களில் அதிக ஈடுபாடு, பல இடங்களில் இருந்து வரும் ஆதரவு , உறவுகளின் ஒத்துழைப்பு, கூட்டு முயற்ச்சியின் மூலம் தொழில் வெற்றி மற்றும் விருத்தி பெரும் யோகம், நல்ல வேலையாட்கள் மூலம் அபரிவிதமான் தொழில் வளர்ச்சி மற்றும் தன்னிறைவான வருமானம் என 2ம் பாவக வழியில் இருந்து அறிவு சார்ந்த வெற்றிகளை குவிக்கும் யோகம் உண்டாகும்.

10ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக சுக ஸ்தானமான 4ம் பாவகத்தை வசீகரிப்பது மகர லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதிய சொகுசு வண்டி வாகனம் மற்றும் புதிய வசதி மிக்க வீடு வாங்கும் யோகத்தை தரும், தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றமும், வருமான வாய்ப்புகளும் உண்டாகும், கனரக தொழில் மற்றும் உலோகம் சார்ந்த தொழில்களில் உள்ள அன்பர்களுக்கு அபரிவிதமான முன்னேற்றம் உண்டாகும், பொது வாழ்க்கையில் உள்ள அன்பர்களுக்கு திடீர் பதவிகள் தேடிவரும், அரசு துறையில் குறிப்பாக கல்வி,மருத்துவம்,நிர்வாகம் சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு, எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் வருமான வாய்ப்புகளும் வந்து குவியும், பயணங்களின் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், சுகபோக வாழ்க்கைக்கு உண்டான வசதி வாய்ப்புகள் அனைத்தும் இந்த குரு பெயர்ச்சியின் மூலம் தாங்கள் தடையின்றி பெறும் யோகம் உண்டாகும், கனிம பொருட்கள் ரசாயன பொருட்கள் மூலம் நல்ல லாபமும் முன்னேற்றமும் உண்டாகும், இதுவரை போராடிய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், பல தொழில் செய்யும் வாய்ப்புகள் வந்து சேரரும், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் உள்ள அன்பர்களுக்கு எதிர்பாராத தன சேர்க்கையும் முன்னேற்றமும் உண்டாகும்.

குறிப்பு : 

மகர லக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 8,12,2,4ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 90% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது மகர லக்கினமே மூன்றாவது இடத்தை பெறுகிறது

No comments:

Post a Comment