jaga flash news

Friday, 28 August 2015

கடக லக்கினம்

பிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும்  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

கடக லக்கினம் :


கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் ராசியான கடகத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களே! தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 2,6,8,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், 2ம் பாவகமான சிம்மத்தில் அமர்ந்து இருக்கும் குரு பகவான் கடக இலக்கின அன்பர்களுக்கு கை நிறைவான வருமான வாய்ப்புகளையும், இனிமையான  பேச்சு திறனையும் வாரி வழங்குவார், குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் வந்த போதிலும் இறுதியில் நன்மையே விளையும், திருமண வாய்ப்புகள் கைகூடி வரும், இது வரை திருமணம் ஆக அன்பர்களுக்கு நல்ல வரணும் வதுவும் அமையும், கலை துறையிலும், மருத்துவ துறையிலும் உள்ள அன்பர்களுக்கு  எதிர் பாராத வெற்றிகளும் லாபங்களும் வந்து குவியும், ஆய்வுகள் மூலம் தொழில் நுட்பம் சாந்த விஷயங்களில் பல புதுமை படைப்புகளை இளைய சமுதாயத்தை சார்ந்த கடக இலக்கின அன்பர்கள்  கண்டறிந்து சாதனை செய்வார்கள், கல்வியில் புகழ் பெறுவார்கள், தன்னிறைவான பொருளாதார வசதி வாய்ப்புகளை பெரும் யோக காலமாக கடக இலக்கின அன்பர்களுக்கு இந்த குறு பெயர்ச்சி அமையும்.


2ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, 6ம் பாவக வழியில் இருந்து குறுகிய கால வெற்றிகளை தங்கு தடை இன்றி வாரி வழங்குவார், எதிரிகள் மூலம் லாபமும், எதிரிகளின் செயல்கள் கடக இலக்கின அன்பர்களுக்கு சாதகமாக அமைந்து நன்மையை செய்யும், உடல் ரீதியான குறிப்பாக வயிறு சார்ந்த தொல்லைகள் அதிக அளவில் வரும்  என்பதால் உணவு பழக்க வழக்கத்தில் மிகுந்த கட்டுபாடும், சுகாதாரத்தையும் கடைபிடிப்பது நலம் தரும், தீய பழக்க வழக்கங்களில் இருந்து விடுபட இது ஒரு சரியான நேரமாக கடக இலக்கின அன்பர்கள் கருதலாம், தன்னை விட வயதில் அதிகம் உள்ள பெரிய மனிதர்களிடம் மிகுந்த மரியாதையுடனும், பணிவுடன் நடந்துகொள்வது கடக இலக்கின அன்பர்களுக்கு மிகுந்த நன்மையை தரும், தொழில் ரீதியாக சிறு சிறு அதிர்ஷ்டங்கள் தொடர்ந்து கிடைத்த வண்ணமே இருக்கும், தேர்வு மற்றும் வழக்குகளில் வெற்றியும், சொத்து சுக சேர்க்கையும் உண்டாகும்.

2ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, புதையல் யோகம் கிட்டும், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை தங்கு தடையின்றி தரும், திடீர் விபத்துகளையும், தன்னம்பிக்கை குறையும் விதத்திலான சூழ்நிலைகள் உருவாகும், வாழ்க்கை துணை வழியில் இருந்து பொருளாதார இழப்புகளை கடக இலக்கின அன்பர்கள் தவிர்க்க இயலாது, இன்சூரன்ஸ் போனஸ் போன்றவற்றில் இருந்து நல்ல லாபமும் பொருளாதார உதவியும் கிடைக்கும், பயணங்களில் அதிக கவனமுடன் இருப்பது கடக இலக்கின அன்பர்களுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும், பொது காரியங்கள் மற்றும் ஜாமீன் தருவதை தவிர்ப்பது அதிக நலன் தரும், பாதுகாப்பற்ற பயணங்களினால் விபத்தும் உடல் நல குறைவும் உண்டாகும் என்பதால், வாகனங்களை பாதுகாப்புடன் இயக்குவது சகல நிலைகளில் இருந்தும் நன்மை தரும், முன் பின் அறிமுகம் அற்ற நபர்களினால் அதிக தொல்லைகளுக்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், கடக லக்கினத்தை சார்ந்த பெண்கள் அதிக கவனமுடன் இருப்பது நல்லது.

2ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்தை வசீகரிப்பது கடக லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, தொழில் ரீதியான வெற்றிகளை வாரி வழங்கும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனி வரும் ஒரு வருடம் அதிரடியான வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும், சுய முன்னேற்ற சிந்தனைகள் மிக பெரிய வெற்றிகளை வாரி வழங்கும், தீர்கமான செயல் திறன் மூலம் லாபம் பெரும் யோக காலம் இது, புகழ் மிக்க பொறுப்புகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும், புதிய பதவிகள் அல்லது பதவி உயர்வு என கடக இலக்கின அன்பகளுக்கு தகுதிக்கு உகந்த பொறுப்புகள் தேடி வரும், உடலும் மனமும் ஒருங்கே செயல்பட்டு சரியான ஒத்துளைப்பை வழங்கும், இதன் மூலம் கடக இலக்கின அன்பர்களின் லட்சியங்கள் நிறைவேறும், விளையாட்டு துறையில் உள்ள அன்பர்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும், நினைக்கும் எண்ணங்கள் யாவும் பலிதம் பெரும்.  ஜீவன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் நன்மைகளையும், லாபங்களையும் அபரிவிதமாக கடக இலக்கின அன்பர்களுக்கு இந்த குரு மாற்றம் வாரி வழங்கும் என்பதால் கடக்க லக்கினத்தார் 100% விகித மகிழ்ச்சியை பெறலாம்.

குறிப்பு : 

கடக இலக்கின  அன்பர்களே ! தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட 
2,6,8,10 ம்  பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும்  திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 2,6,8,10ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.
  

இந்த குரு மாற்றத்தின் மூலாம் 50% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது கடக லக்கினமே இரண்டாம் இடத்தை பெறுகிறது

No comments:

Post a Comment