jaga flash news

Wednesday 5 August 2015

ஜீவன் முக்தர்கள்.

இறைவன் யாருக்கும் என்றைக்கும் சிறு துன்பத்தையும் கொடுப்பதில்லை. நம் துன்பங்களுக்கு நாமே காரணம். நம் மனமே, நம் ஆசைகளே, நம் சிந்தையே காரணம். 
இன்றைய சூழலின் உணவிற்கும், உடைக்கும், வசிப்பிடதிர்க்கும் யாருக்கும் எந்த துன்பமும் இல்லை. அதாவது நான் கூற விழைவது, உயிரை காப்பாற்றிக்கொள்ள கஞ்சியோ கூழோ எதோ ஒரு உணவு. மானத்தை மறைக்க எதோ ஒரு கந்தை. மழைக்கும் காற்றிற்கும் ஒதுங்க எதோ ஒரு மறைவு. இந்த மூன்றிற்கும் யாருக்காவது நீங்கள் பார்த்து ஏதாவது குறை உள்ளதா? கட்டாயம் இல்லை.
ஆனால் இதற்கும் மேல் நாம் ஆசைப் படும்போது தான் நம்மை துன்பம் என்னும் பேய் சூழ்கிறது.
குடிசையில் இருப்பவன் மச்சு வீட்டிற்கும், மச்சுவீடில் இருப்பவன் மாடிவீடிர்க்கும், மாடி வீட்டில் இருப்பவன் மாளிகைக்கும் ஆசைப்பட்டு, ஏங்கும்போதுதான் அவன் துன்பத்தை அனுபவிக்கிறான்.
கூழை கையில் வைத்துக்கொண்டு சுடுசோறு சாப்பிட ஆசைப்படும் போதுதான் நம்மை வறுமை துரத்துகிறது.
மானத்தை மறைக்கும் கந்தையை உடலில் சுற்றிய பிறகும் பகட்டான ஆடைக்கு ஏங்கும்போதுதான் நாம் ஏழை என்று நம்மை நாமே துன்பத்தில் தள்ளிக்கொல்கிறோம்.
நம்மிடம் இருப்பதில் நாம் பூரண திருப்தியுடன் இருந்தால் நம்மைவிட கோடீஸ்வரர் இப்பிரபஞ்சத்தில் யார் இருக்கமுடியும்?
மனநிம்மதியுடனும், சஞ்சலம் அற்ற சித்தத்துடனும் விலகுபவனுக்கு யார் ஒப்பாவர்?
மன அமைதி, மன நிறைவு என்பது வெளிப்பொருட்களில் இருந்து வருவது அல்ல. எது உள்ளதோ, எது நடக்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொளும்போதுதான் அமைதி என்னும் அமிர்தம் நம்மை அரவணைக்கிறது.
உங்களிடம் எது உள்ளதோ அதில் திருப்தி அடையுங்கள். இல்லாததைப்பற்றி நினைத்து ஏங்காதீர்கள்.
எது நம்மிடம் வருகிறதோ வரட்டும். அதை பூரணமாக அனுபவிப்போம்.
எது நம்மைவிட்டு செல்கிறதோ செல்லட்டும், மனப்பூர்வமாக அதற்க்கு விடைகொடுப்போம்.
மன அமைதியே முக்தி. அதுவே மோக்ஷம். நீங்கள் எந்த சூழலிலும் மன சஞ்சலத்திற்கு ஆளாகாமல் இருந்தால் நீங்கள் ஜீவன் முக்தர்கள். சூழலை மாற்ற எத்தனிக்கும்போதுதான் மனம் சஞ்சலம் அடைகிறது. எதுநடக்கிறதோ அதை மாற்றவோ, எதிர்க்கவோ நினைக்காமல் அந்நிகழ்வை பூரணமாக ஏற்றுக்கொள்ளும்போது மனம் அமைதியாகிறது.

No comments:

Post a Comment