jaga flash news

Monday 12 October 2015

திசாசந்திப்பும் ( ஏக திசை ) திருமண பொருத்தமும் !

திருமண பொருத்தம் காண வரும் பெற்றோர்கள் தற்பொழுது திசா சந்திப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டா ? இதனால் திருமணதிற்கு பிறகு தம்பதியருக்குள் பிரச்சனைகள் வருமா ? ஒரே நேரத்தில் தம்பதியர் இருவரும் ஒரு திசை நடைமுறையில் இருந்தால் திருமண வாழ்க்கையில் இன்னல்கள் வரும் என்று கூறுகின்றனர் எனவே தம்பதியரின் ஜாதகத்தில் திசாசந்திப்பு உள்ளத என்பதை சொல்லுங்கள் என்ற ஒரு கேள்வியை முன் வைக்கின்றனர், திருமண பொருத்ததில் ஏக திசை சந்திப்புக்கு முக்கியதுவம் தருவது அவசியம் என அனைத்து ஜோதிடர்களும் அறிவுறுத்துகின்றனர், அதாவது திருமணம் செய்வதற்கு முன் வது,வரனின் ஜாதகத்தில் இருவருக்கும் ஒரே திசை நடைபெற்றால் ஜாதக பொருத்தம் கிடையாது, திருமணம் செய்தால் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையிலும், தொடர்ந்தும் வரும் பொழுது நன்மை நடைபெறாது என்பது பல ஜோதிடர்களின் வாதமாக இருக்கிறது, சமீப காலங்களில் இது அதிக அளவில் மிகைபடுத்தபட்டு, பொதுமக்களிடம் சென்று இருக்கிறது, திசாசந்திப்பு ( ஏக திசை ) பற்றியும் அதன் உண்மை நிலையை பற்றியும் சற்று இந்த பதிவில் சிந்திப்போம் அன்பர்களே!

தம்பதியர் இருவருக்கும் ஒரே திசை நடைமுறையில் இருந்தால் நன்மையை தாராது, இன்னல்களை தரும் என்ற வாதமே தவறானதாக கருதுகிறது, பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் நடைபெறும் திசை எவ்வித பலன்களை  ( எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற அடிப்படை விஷயம் ) வழங்குகிறது என்பது தெரியாத பொழுதே இந்த குழப்பம் ஏற்ப்பட வாய்ப்புண்டு அன்பர்களே !

பொருத்தம் காண வரும் ஆண் பெண் இருவரது ஜாதகத்திலும் ஒரே திசை நடைமுறையில் இருந்தாலும், ஆணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது, பெண்ணுக்கு நடைபெறும் திசை எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறது என்ற தெளிவு பெறுவது மிக மிக அவசியமாகிறது, இருவருக்கும் நடைபெறும் திசை வலிமை பெற்ற பாவக பலனை நடத்தினால், தம்பதியர் இருவருக்கும் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மைகளே நடைபெறும், ஒரு வேலை பாதிக்கபட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே அவயோக பலன்கள் நடைமுறைக்கு வரும், பொதுவாக இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவது இன்னல்களையே தரும் என்று முடிவு செய்வதும், பொருத்தம் இல்லை என முடிவு செய்வதும் ஜாதக கணிதம் பற்றிய தெளிவும், ஜோதிட ஞானமும் அற்றவர்கள் செய்யும் காரியமாகவே படுகிறது.

No comments:

Post a Comment