jaga flash news

Saturday 29 April 2017

சுதர்சன சக்கரம்

சுதர்சன சக்கரம் - சக்கரத்தாழ்வார்
🌼 விஷ்ணு பகவானின் முதன்மையான ஆயுதங்களுள் ஒருவர் சக்கரத்தாழ்வார்
🌼 சுதர்சன சக்கரம் 108 வெட்டும் நுனிகளை கொண்டது ஏவியபின்னும் கூட பகவான் கட்டுபாட்டிலேயே இருக்கும் சுதர்சனம் செல்லும் பாதையே தனியானது ஆகும் இதனால் எந்த இடத்திற்கும் எளிதில் செல்லும் திறன் கொண்டதாகும் சுதர்சனம்
🌼 நிற்காமல் சுழழும் சுதர்சனத்தில் அமைந்துள்ள 9 முக்கோணங்கள் நவகிரகங்களை குறிக்கின்றன
🌼 பகவானே தான் செல்ல தாமதமானால் என் செய்வது என சுதர்சனத்தை அனுப்புகிறார் கஜேந்திர மோட்சத்தில்
🌼 இந்திரனின் வஜ்ரத்தையும் தூளாக்கும் வல்லமை படைத்தது
🌼 சக்கரத்தாழ்வாரான சுதர்சனத்தை பற்றி மூன்று கதைகள் கூறப்படுகின்றன
🌻 ---- பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவனின் சக்திகளை கொண்டு தேவகுரு வியாழ பகவான் சுதர்சன சக்கரத்தை செய்கிறார் பிறகு " துஷ்ட நிக்ரஹத்திற்கு " பொறுப்பேற்றவரான விஷ்ணு பகவானிடத்தில் இந்த சக்கரத்தை அளிக்கிறார்
🌻 ---- ஈசனின் வேர்வைத்துளியில் தோன்றியவனான ஜலந்திரன் ஆணவத்தால் ஈசனையே வெல்ல செல்லும்போது ஈசன் தன் காலால் வரைந்த சக்கரத்தை முதலில் தூக்கினால் பின் யுத்தத்திற்கு வருவதாக கூற அவ்வாறே செய்த அவன் அச்சக்கரத்தால் கொல்லப்படுகிறான் ஆனால் அவனின் ஆத்மாவும் ருத்ர சக்தியும் அச்சக்ரத்தில் கலக்கின்றன இதை பெருமாள் 1008 தாமரை மலர்கள் கொண்டு பூஜித்து பெற்று அசுரர்களை அழிக்கிறார்
🌻 ---- சூரியனின் அதீத சக்தியால் அவரை காணகூட இயலாமல் தவிக்கிறார் அவரின் மனைவி சந்தியா இதனால் சந்தியா தேவியின் தந்தையான தேவசிற்பி விஷ்வகர்மா சூரியனின் சக்தியை பிரித்து ஈசனுக்காக திரிசூலமும், விஷ்ணுவிற்காக சக்கரமும் செய்து கொடுக்கிறார்
🌼 ஆனால் வைணவத்தின் படி பெருமாளே சுதர்சனமாகவும் இருக்கிறார்
🌼 16 கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வார்
🌻 -- வலக்கையில் சக்கரம், மால், குந்தம், தண்டம், அங்குசம், சதாமுகாக்னி,மிஸ்கிரிசம், வேல் ஆகியவைகளும்
🌻 -- இடக்கையில் சங்கு, வாள், பாசம், கலப்பை, வஜ்ராயுதம், கதை, உலக்கை, திரிசூலம் ஆகியவைகளும்
🌼 இதனால் இவர் ஆயுதப்புருஷர் என்றும் அழைக்கப்படுகிறார் அதாவது ஆயுதங்களுக்கெல்லாம் புருஷர் (ரிக் வேதத்தில்)
🌼 பெருமாளின் ஒவ்வொரு அவதாரத்திலும் சக்கரத்தாழ்வாரும் உடன் அவதரித்துள்ளார்
🌻-- மச்ச அவதாரத்தில் மீனாக அவதரித்த பகவானின் பல்லாகவும்
🌻 -- கூர்ம அவதாரத்தில் மந்தர மலையை சுதர்சனம் கொண்டே பெயர்த்து எடுக்கின்றனர் மேலும் ராகுவின் தலை வெட்டப்பட்டது கூட சுதர்சனத்தை கொண்டது
🌻 -- வராக அவதாரத்தில் சுவேத வராகத்தின் கொம்பாகவும்
🌻 -- நரசிம்மவதாரத்தில் நரசிம்மரின் நகமாகவும்
🌻 -- வாமன அவதாரத்தில் சுக்ராச்சாரியரின் கண்ணை குத்திய தர்ப்பையாகவும்
🌻 -- பரசுராமவதாரத்தில் பரசுராமரால் வீழ்த்தப்பட்ட தத்தாத்ரேயரின் பக்தனும் ஆயிரம் கரங்கள் கொண்டு 85,000 வருடங்கள் நீதி தவறாது ஆட்சி செய்தவனுமான கார்த்தவீரியனாகவும் (பார்க்கவ ராமரின் பரசு என்று சிலர் கூறினாலும் பரசு ஈசனுடையது ஆகும் ஈசனின் தனிப்பட்ட ஆயுதங்களில் ஒன்று)
🌻 -- ராமவதாரத்தில் ராமரின் பாதுகையை ஏந்தி அப்பாதுகை மூலம் அரசாண்ட பரதனாகவும்
🌻 -- கிருஷ்ணவதாரத்தில் சுதர்சனமாகவே கிருஷ்ண பகவானின் கையிலும்
🌼 என அனைத்து அவதாரங்களிலும் சக்கரத்தாழ்வார் உடன் இருந்தவர்
🌼 கிரகங்கள் மற்றும் பில்லி சூனியங்களால் வரும் இன்னல்களை கூட போக்க வல்லது சுதர்சன வழிபாடு
🌼 பக்தர்களை காக்கும் பொறுப்பு சக்ரத்தாழ்வாருடையதே
🌼 பக்த அம்பரிஷன் மீது துர்வாசர் ஏவிய பூதத்தை அறுத்தெரிந்த சுதர்சனம் துர்வாசரை விடாமல் துரத்தியது
🌼 பிரம்மா, சிவன் ஏன் விஷ்ணுவும் கூட கைவிரிக்கின்றனர் இறுதியாக அம்பரிஷனிடமே சென்று தஞ்சமடைகிறார்
🌼 ஐந்து வயது சிறுமி பெருமாளின் மீது கொண்ட பக்தியால் அவளுக்கு பெரும் மழையில் குடையாக இருந்து உள்ளார்
🌼 நரசிம்மரின் பின்பக்கம் சக்கரத்தாழ்வாரும், சக்கரத்தாழ்வாரின் பின்பக்கம் நரசிம்மரும் இருக்கும் சிலைகளே அதிகம்
👑 இதற்கான காரணம் பற்றி என்னால் அவ்வளவு தேடியும் அறியமுடியவில்லை ஆனால் ஒரு பெரியோரின் வாக்குபடி நரசிம்மரின் சக்தியை கொண்டே சுதர்சனத்திற்கு சக்தியானது கிட்டுகிறது அவரின் உக்கிரம் மூலம் வரும் சக்தியை சக்கரத்தாழ்வார் இழுத்துவிடுவார்
👑 இத்தகைய பெருமையுடைய சக்கரத்தாழ்வாரை பூஜித்து நாமும் பேறு பெருவோமாக....

No comments:

Post a Comment