jaga flash news

Friday, 14 July 2017

*வாழ்க்கை*

*வாழ்க்கை*
தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர், தனது நண்பனும் பகைவனும் என்ற பத்து பேர், தனது தொழிலில் ஒரு பத்து பேர், தனது வீதியில் ஒரு பத்து பேர், தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!
இந்த நூறு பேரின் நடுவில் தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும், பாசமாக, நட்பாக, அன்பாக, வீரனாக, நல்லவனாக காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த கேடுகெட்ட சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.
எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டு பார்த்து அதைவிட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போதுதான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.
அவன் அப்படி, இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.
இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனை பாதிக்கின்றன. இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.
என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!
எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!
அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது, எங்கள் ஊரில் யாருக்கும் தெரியாது!!
இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!
நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!
ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டுகொள்ள வேண்டும்????
யார் இவர்கள்????
என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார்????
நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!
அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
அதுவும் வெகு தொலைவில் இல்லை!
சர்வமும் ஒருநாள் அழியும்!
மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது!
கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்.
வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!
தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.
நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதேபோல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப்போவதில்லை. இது தான் வாழ்க்கை.
*"பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்"*
*வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்*

4 comments:

 1. எவ்வளவு நீங்கள் அறிவுரை சொன்னாலும், சிலருக்கு பிழைப்பே, இதுதானே சார். இந்த இயந்திர உலகத்திலே, உழைக்கிறார்களோ இல்லையோ, இதை ஒரு தலையாயக் கடமையாக எண்ணி செயல்படுகிற பேடிகள் ஒரு நாளும் திருந்த மாட்டார்கள் வெ.சாமி அவர்களே!

  ReplyDelete
 2. வாழ்க்கை வாழ்வதற்கே. துன்பத்தைக் கண்டு பயப்படுகிறவன் கோழை. வாழ்வும், தாழ்வும், ஏற்றமும், இறக்கமும் இருப்பதுவே வாழ்க்கை. உலகம் ஆயிரம் பேசும். வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும். நாகரிகமில்லா ஜென்மங்கள். மற்றவர்களுக்காக நாம் வாழ வேண்டாம். நாம், நமக்காக வாழ்ந்தால் போதும். இறை நம்பிக்கையோடு,எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும், நமக்கு வெற்றியைத் தரும்.

  ReplyDelete
 3. வேடிக்கையான கதை ஒன்று. *வாழ்க்கை*

  விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறான்.பேதைகள் தண்டிக்கப்படுகிறார்கள்.

  வேடன் ஒருவன் விரித்த வலையில் ஒரு முயல் குடும்பம் சிக்கிவிட்டது. அப்பா, அம்மா also 5 குட்டி முயல்கள். அப்பாவையும், அம்மாவையும், அப்போதே எடுத்துச்சென்று, சமைத்து தின்று விட்
  டான். குட்டி முயல்களை கொஞ்சம் பெரிதாகவிட்டு, சமைக்க முடிவெடுத்து,
  ஒரு கூட்டுக்குள் அடைத்து வைத்து, காட்டிலும், ஊரிலும் கிடைக்கும் புஷ்டியான கீரைகள், மற்றும் கிழங்கு வகைகளில் அவற்றை போஷித்தான். ஒவ்வொரு நாளும் சுவையான உணவு வகைகளை உண்டு, முயல்குட்டிகள் பெருத்து வளர்ந்தன. அதில் ஒரு குட்டிக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதைத் தன் சகோதரர்களிடம் பகிர்ந்துகொண்டது.

  நம் பெற்றோரை எங்கோ கொண்டுபோன அதே மனிதன் தான் நமக்கு இன்று உணவு கொடுத்து வருகிறான். அவர்களை இவன் என்ன செய்தானென்பது நமக்கு தெரியாது. நமக்கு வேண்டிய உணவு வகைகளெல்லாம் காட்டிலேயே கிடைக்கும்போது, இவன் நம்மை அடைத்து வைத்து உணவு தரவேண்டிய அவசியம் என்ன? எனக்கென்னவோ இதற்குப் பின்னால் பெரிய சூழ்ச்சி இருப்பதாகவே தோன்றுகிறது. நாம் சமயம் கிடைக்கும் போது இங்கிருந்து தப்பி ஓடிவிடுவது தான் நல்லது என்றது. இதைக்கேட்ட மற்றமுயல்கள் ஆத்திரமடைந்தன. உழைப்பில்லாமல் வேளாவேளைக்கு கிடைக்கும் அருமையான உணவை அவை இழக்க விரும்பவில்லை.மற்ற முயல்களின்
  சார்பில் ஒரு முயல் கேட்டது.. சந்தோஷ மான வாழ்வைக் கெடுத்துக்கொள்ளும் இந்த புத்தி உனக்கு எப்படி வந்தது. நல்ல சாப்பாடும், தங்கும் இடமும் கிடைக்கும் போது மற்ற சிந்தனைகள் நமக்கு எதற்கு? இருக்கிறவரைக்கும் சந்தோஷமா சாப்பிட் டோமா, தூங்கினோமான்னு இல்லாம எதுக்காக இந்த தேவையில்லாத எண்ணமெல்லாம்? உனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலைன்னா, நீ எங்காவது போய்த் தொலை. இங்கேயிருந்து எங்களைக் குழப்பிக் கொண்டே இருந் தீன்னா, நாங்களே உன்னைக் கொன்னுடுவோம்..சொன்னதுடன் அந்த முயலின் முதுகில் அழுத்தமாய் ஒரு கடி கடித்தது. வலியில் துடித்துப்போன அந்த முயல் அழுதுகொண்டே ஒரு ஓரமாய் பதுங்கிக் கொண்டது. நல்லது சொன்னாலும், பதிலுக்குத் தீமை செய்யும் மூர்க்கர்களிடம் வேறு எப்படித்தான் நடந்து கொள்வது.

  ReplyDelete
 4. அங்கிருந்து தப்பிச்செல்ல, வழிதேடியது.
  முயல்தேடிய சந்தர்ப்பம் ஒருநாள் வாய்த் தது. கூண்டை சுத்தம் செய்வதற்காக வேட்டைக்காரன் முல்களை உயரம் குறைந்த ஒரு கூடைக்குள் விட்டுவிட்டுக் கூண்டை சுத்தப்படுத்த ஆரம்பித்தான். முயல்"கடைசி முறையாகத் தன் சகோதரர்களிடம், இதுதான் கடைசி வாய்ப்பு. வாங்க தப்பிச்சு ஓடிடுவோம் என்றது. உன்ன என்ன பண்றேன் பாரு, எல்லா முயல்களும் வெறியோடு அதன்மேல் பாய்ந்தன. அதற்குமேல் தாமதிக்காமல் அது வெளியே குதித்து காட்டுக்குள் ஓடி மறைந்தது. மற்ற முயல்களின் சந்தோஷம் மூன்றுநாட்கள் கூட நீடிக்கவில்லை.

  முயல்கள் நன்கு வளர்ந்து கொழுத்து விட்டதைப் பார்த்த வேட்டைக்காரன் அவற்றையும் பிடித்துக்கொண்டுபோய் அறுத்து, விற்றுவிட்டான்.

  சகோதரன், எச்சரித்ததன் அர்த்தம் புரியும்போது, பாவம் அவை துடிதுடித்து உயிரைவிட்டன.

  ReplyDelete