ஒருநாள் பாஞ்சாலி மலர்மாலை தொடுப்பதற்காக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்ட அந்நாட்டின் அரசியார் சுதோசனாவின் அண்ணனான கீசகன் அவளைக் கவர முயல்கிறான். எனினும், பாஞ்சாலி அவனிடம் இருந்து விலகிச் சென்று விடுகிறாள். கீசகன் தன் தங்கையான அரசியாரிடம் தனக்கு பாஞ்சாலி வேண்டும் என்று அடம் பிடிக்கிறான்.
வேறு வழியறியாத விராடநாட்டு அரசியார் பாஞ்சாலியை கீசகன் மாளிகைக்குச் சென்று மதுபானம் எடுத்துவர ஆணையிட்டாள். பாஞ்சாலி அங்கு சென்றபோது கீசகன் அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பிய பாஞ்சாலி, அந்நாட்டு அரசவை சமையற்கூடத்தில் வல்லாளன் எனும் பெயரில் பணிபுரியும் பீமனை ரகசியமாகச் சந்தித்து விவரத்தைக் கூறி கீசகனைக் கொல்லும்படி கேட்டுக் கொண்டாள்.
வல்லாளனாக இருந்த பீமன் வகுத்த திட்டப்படி, பாஞ்சாலி கீசகனிடம் சென்று அடுத்தநாள் இரவு அரசவையில் உள்ள நாட்டியச்சாலையில் தன்னைச் சந்திக்கச் சொன்னாள். நாட்டியசாலையில் பெண் வேடமணிந்து கட்டிலில் உறங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த பீமனை, பாஞ்சாலி என எண்ணி கீசகன் காமவெறியுடன் அணுக, பெண் வேடமணிந்திருந்த பீமன் கீசகனுடன் போரிட்டுக் கொன்று பாஞ்சாலியை மீட்கிறான்
No comments:
Post a Comment