*சிறிதளவு ஏலக்காய் உணவில் சேர்ப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் - இயற்கை மருத்துவம்*
ஏலக்காய் இனிப்பு மற்றும் பிரியாணி போன்ற உணவுகளில் வாசனை மற்றும் ருசிக்காக பயன்படுத்தும் பொருளாக மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால், ஏலக்காய் சளி, இருமலில் இருந்து பல உடல்நல குறைபாடுகளுக்கு அருமருந்து என்பது வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். ஏலக்காயின் தாக்கம் ஏறத்தாழ ஹைடோஸ் போல மிகவும் வீரியம் உடையது, எனவே, இதை சிறிதளவு தான் சேர்க்க வேண்டும். அதிகமாக ஏலக்காய் சேர்ப்பது நன்மைக்கு பதிலாக தீமை விளைவிக்க கூடும்
வாய் துர்நாற்றம்:-
வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்.
பசி:-
பசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்
இது பலரும் அறியாத இதன் நன்மை ஆகும். பாலை சுட வைத்து, அத்துடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால் இருபாலருக்கும் கருவள குறைபாடுகள் நீங்கும் எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூள் பயன்படுத்தினால் போதுமானது.
சளி:-
நெஞ்சில் கபம், சளி கட்டி மூச்சு விட சிரமப்படுபவர்கள், இருமல், வயிற்றுவலி இருப்பவர்களுக்கும் ஏலக்காய் நல்ல அருமருந்தாக பலனளிக்கிறது.
No comments:
Post a Comment