jaga flash news

Saturday 22 August 2020

நஞ்சறுப்பான் மூலிகை – மருத்துவ பயன்கள்

நஞ்சறுப்பான் மூலிகை – மருத்துவ பயன்கள்

நஞ்சறுப்பான் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து வெந்நீரில் 3 வேளைக்கு சாப்பிட வியர்வை பெருகும். சளியைப் போக்கும். சீதக்கழிச்சல், நீர்த்தக்கழிச்சல் குணமாகும்.

நஞ்சறுப்பான் இலைச்சூரணம் 150 மில்லியளவு எடுத்து தேனில் கலந்து இரண்டு வேளை கொடுத்துவர குழந்தைகளுக்குக் காணும் கக்குவான் இருமல் குணமாகும்.

நஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.

நஞ்சறுப்பான் இலையை அரைத்து எலுமிச்சம்பழம் அளவு சாப்பிடக்கொடுத்து, கடிவாயிலும் வைத்துக்கட்ட வாந்தியாகி எந்தவிதமான நஞ்சும் முறியும் (மயக்க நிலையில் இருந்தால் நஞ்சறுப்பான் வேர்ப்பொடியை கொடுக்கலாம்.)

நஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.

நஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்.

நஞ்சறுப்பான் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி,வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாள்,இருவேளை குடித்து வந்தால் சளி,ஆஸ்துமா குறையும்.

ஆஸ்துமா கட்டுபட நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ¼ முதல் ½ கிராம் அளவு தினமும் 3 வேளைகள் தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.


No comments:

Post a Comment