வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என மொத்தம் 4 திசைகள் உள்ளது உங்களுக்கு தெரியும்.
நான்கு மூலை
ஜல மூலை - வடகிழக்கு
அக்னி மூலை - தென்கிழக்கு மூலை
வாயு மூலை - வட மேற்கு மூலை
கன்னி மூலை (குபேர மூலை) - தென் மேற்கு மூலை
இந்த நான்கு மூலைகளில் ஜல மூலை இழுத்திருந்தால் தாராளமாக வாங்கலாம்.
கன்னி மூலை, அக்னி மூலை, வாயு மூலை இழுத்து கோணலாக இருந்தால் அந்த இடத்தை வாங்கமால் தவிர்க்கலாம்.
உங்கள் வீட்டில் பீரோ எந்த இடத்தில், எந்த திசை நோக்கி வைத்தால் செல்வம் பெருகும்?
அரை அடி,ஒரு அடி இழுத்து இருந்தால் வாங்கலாம். அதற்கு மேல் இருந்தால் வாங்க வேண்டாம்.
ஏன் வாங்கக் கூடாது என்றால் நாம் வீடு கட்டும் போது செவ்வகமாக தான் கட்டுவோம். அப்போது அந்த கோணலான இடம் வீணாக வாய்ப்புள்ளது.
ரோடு குத்தல் என்றால் என்ன?
நாம் பொதுவாக திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என நான்காக பிரிக்கிறோம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு திசையையும் இரண்டாக பிரித்து திசைகளை எட்டாக பிரிக்கிறோம்.
வடக்கு ஈசானியம், வடக்கு வாயவியம்
தெற்கு ஆக்கினேயம், தெற்கு நைருதி
கிழக்கு ஈசானியம். கிழக்கு ஆக்கினேயம்
மேற்கு நைருதி, மேற்கு வாயவியம்
என எட்டாக பிரிக்கப்படுகிறது. இதில் ஒரு பாதி நல்லது. ஒரு பாதி நல்லது அல்ல.
வாஸ்து குறித்த அடிப்படை கேள்விகள் : எந்த மாதிரி வீடு, மனை வாங்கினால் யோகமும், லாபமும் ஏற்படும்?
உதா: கிழக்கை ஒட்டிய வடக்கு நல்லது. மேற்கை ஒட்டிய வடக்கு கெட்டது.
ஒரு வீட்டின் முக்கிய விஷயமான கதவு அல்லது வெளிப்பக்க கேட் வைக்கும் போது எந்த பகுதி நல்லது என்பதைப் பார்த்து வைக்க வேண்டும். அதாவது உச்சம், நீச்சம் பொருத்து தான் இப்படி அமையும்.
நீங்கள் வாங்கும் மனை அல்லது கட்டும் வீட்டில் சுற்றுச் சுவர் கட்ட வேண்டுமா?
சுற்றுச் சுவார் கட்டுவது காசு வாங்காத வேலைக்காரனாக செயல்படும். இந்த காம்பவுண்ட் வால் மற்றவர்களின் வீட்டு வாஸ்து அமைப்பு நம்மை பாதிக்கக் கூடும்.
சிலர் பத்திரம் என் பெயரி தானே உள்ளது எப்படி அடுத்த வீட்டின் அமைப்பு நம்மை தாக்கும் என கேட்பார்கள். இங்கு பத்திரம் பேசாது, நாம் கட்டும் கட்டிட் அமைப்பு தான் பேசும்.
நாம் கட்டக் கூடிய சுற்றுச் சுவர் பாதுகாப்புக்கு மட்டுமில்லாமல். மற்றவர்களின் வீட்டு அமைப்பு நம்மை பாதிக்காமல் இருப்பதற்காகவும் தான்.
வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் வைப்பது நல்லது?
குத்தல் பாதிப்பு ஏற்படுத்துமா?
குத்தல் என்பது பாதிப்பை மட்டும் ஏற்படுத்தும் என்பது இல்லை. அது பாதிப்பற்ற குத்தல், நன்மை தரக்கூடிய குத்தல் எனவும் உள்ளது.
நாம் சரியான வகையில் குத்தல் பார்த்தும் வீடு,, மனை வாங்குவது நல்லது. அதனால் நாம் திரும்ப விற்க நினைக்கும் போதும் அது நல்ல விலை கிடைக்கும்.
தண்ணீர் தொட்டி, போர் வீட்டில் எங்கு அமையா வேண்டும்?
சில வீடுகளில் தண்ணீர் தொட்டி தப்பான இடத்தில் அமைந்திருந்தால் அதனால் வீட்டில் உள்ளவோரின் தொழில் பாதிப்பு, பெண்களின் உடல் நிலை பாதிப்பு, விபத்து, முன்னேற்ற மில்லா நிலை என பல விஷயங்கள் பாதிக்கக் கூடிய நிலை உண்டு. இப்படி ஒரு வீட்டின் தீமையை நீக்கி நன்மையைப் பெறக்கூடிய அமைப்பை முன்கூட்டியே தீர்மானிப்பதே வீடு கட்டும் போது கட்டிட பிளான் போடப்பட வேண்டும்.
No comments:
Post a Comment