ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே !
ஸ்ரீமதே நாராயணாய நமஹ !
பெற்ற தாயினும் ஆயின செய்யும் அந்த எட்டெழுத்து மந்திரம், குலம் தரும் செல்வம் தரும், அனைத்து நலன்களையும் தரும் கோவிந்தனின் பாதம் பணிந்து இந்த நாளை இனிதாக்குவோம்..!
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்த எம்அண்ணல்
வம்புலாம்சோலைமாமதிள்
தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி நம்பிகாள். உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
- பெரியதிருமொழி
ஶ்ரீமன் நாராயணனின் பன்னிரு திருநாமங்கள்..!
பார் போற்றும் பரந்தாமனின் திருநாமங்கள் அவனது கருணை போல் எண்ணிலடங்கா. அனுதினமும் " விஷ்ணு ஸஹஸ்ரநாமம் " பாராயணம் செய்வது சாலச்சிறந்தது. இந்த " பன்னிரு திருநாமங்கள்" என போற்றப்படுவது மிகவும் முக்கியதுவம் வாய்ந்தவை ஆகும்.
1. கேசவன்
" கெடும் இடராய எல்லாம் கேசவ என்ன நாளும் "- நம்மாழ்வார்.
2. நாராயணன்
"நஞ்சுதான் கண்டீர் நம்முடை வினைக்கு நாராயண என்னும் நாமம்"- திருமங்கை ஆழ்வார்.
3. மாதவன்
"மாய்ந்தரும் வினைகள் தாமே மாதவன் என்ன "- நம்மாழ்வார்.
4. கோவிந்தன்.
"குலம் உடை கோவிந்த ! கோவிந்த ! என்றழைத்தக்கால், நலம் உடை நாரணன் தம் அன்னை நரகம் புகாள்"
- பெரியாழ்வார்.
5. விஷ்ணு
"எங்கும் வியாபித்திருக்கக் கூடியவர் விஷ்ணு காந்தெங்கும் பரந்துளன் " - நம்மாழ்வார்.
6. மதுசூதனன்.
" மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக் கைத்தலம் பற்ற கனாக்கண்டேன்" - ஆண்டாள்.
7.திருவிக்ரமன்.
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியும்" - ஆண்டாள்.
8. வாமனன்.
"திருக்கண்ணபுரத்துறையும் வாமனனை , நாமருவியிவை பாட வினையாய நண்ணாவே " - பெரிய திருமொழி.
9. ஸ்ரீதரன்.
" செங்கண் நெடுமால் ! சீரிதரா ! என்றழைத்தக்கால் நங்கைகாள்! நாரணன் தம் மன்னை நரகம் புகாள் "- பெரியாழ்வார் .
10. இருடிகேசன்.
" அண்டக்குலத்துக் கதிபதியாகி, அசுரர் இராக்கதரை , இண்டைக் குலத்தை எடுத்துக்களைந்த இருடிகேசன்."
- திருப்பல்லாண்டு.
11. பத்ம நாபன்.
" பாழியந் தோளுடை பற்பநாபன் " - திருப்பாவை.
12. தாமோதரன்.
" தாயைகுடல் விளக்கம் செய்த தாமோதரன்"- திருப்பாவை.
ஓம் நமோ வெங்கடேசாய...!
No comments:
Post a Comment