jaga flash news

Tuesday, 6 October 2020

மைக்ரேன் தலைவலி

பல பிரச்சனைகளால் தலைவலி வருவது போல தலைவலியும் பல வகையில் வருவதுண்டு. முன்பக்க வலி, பின் மண்டை வலி, இரண்டு பக் கமும் தலைவலி, ஒற்றை பக்க தலைவலி என்று விதவிதமாய் வரும் தலைவலியில் தொல்லை தருவது மைக்ரேன் தலைவலி எனப்படும் ஒற் றை தலைவலி தான். இவை ஏன் வருகிறது எதனால் வருகிறது, தவிர்க்க முடியுமா? மருத்துவர்கள் தரும் அறிவுரை என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்வோமா?
தலைவலி

உலக அளவில் 50% தலைவலி சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள் என்கிறது மருத்துவ ஆய்வு ஒன்று. ஒரே தலைவலியா இருக்கு என்று பொத்தாம்பொதுவாக ஒரு வலியை சொல்வோம். தலை முழுக்க ஒருவித அழுத்தமும் அசெளகரியமும் உண்டாகும் நிலை எல்லோருக்கும் உருவாவது உண்டு.

தலைக்கு குளித்து ஈரத்தலையுடன் நீண்ட நேரம் இருப்பது, அதிகப்படியான மன உளைச்சல், ஓயாத வேலை, காய்ச்சலினால் வருவது, தலையில் நீர் கோர்த்து கொண்டிருக்கும் போது வரக்கூடியது போன்ற காரணங்களால் உண்டாவது தான் தலைவலி.இவை எப்போதாவதுவருவதுண்டு. வந்த வேகத்தில் கொஞ்ச நேரத்தில் தீவிர வலியை உண்டாக்கி பிறகு வலியும் படிப்படியாக குறைந்து விடும். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது மைக்ரேன் வலி.


​மைக்ரேன் தலைவலி

உலகளவில் 15 சதவீத மக்கள் மைக்ரேன் தலைவலியால் அவதிப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின் றது. எப்போது வெடிக்குமோ என்று அச்சுறுத்தும் அளவுக்கு மண்டையை பிளக்கும் வலியை உண் டாக்கும் மைக்ரேன் வலி. இது நாள்பட்ட நரம்பு வியாதி என்று சொல்லலாம்.

இந்த வலி வந்தவுடன் செல்லகூடியதல்ல சிலருக்கு இரண்டு மணி நேரம்வரை இருக்கலாம். சிலரு க்கு காலை முதல் மாலை வரை இந்த வலி உணர்வு நீடிக்கும். இன்னும் சிலருக்கு 24 மணி நேரம் வரையும் நீடிக்கும். ஆனால் இந்த வலி இருக்கும் ஒவ்வொரு நொடியும் நரகமாய் உணர்வார்கள் வலியால் அவதிப்படுபவர்கள்.


​மைக்ரேன் அறிகுறிகள்

இன்ன காரணம் என்று வகைப்படுத்த முடியாமல் பலவிதமான அறிகுறிகள் உண்டாகும். ஒற்றை பக்கமாக வரும் தலைவலி குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் மீண்டும் மீண்டும் வரும். ஒவ்வொரு முறை வரும்போதும் நீண்ட நேரம் வலி உணர்வு இருக்கும். வலியானது சிறிது சிறிதாக அதிகரிக் கும்.தொடர்ந்துஇருக்கும் வலியின் போது பார்வை தெளிவாக இருக்காது. தலைச்சுற்றல், வாந்தி உணர்வு அதிகமாக இருக்கும். மயக்கம் உண்டாவது போன்ற உணர்வுடன் காலை எழும்போதே வாந்தியோடு கூடிய தலைவலி இருந்தால் அது மைக்ரேன் தலைவலி என்பதை உறுதி செய்துகொள் ளுங்கள்.


​மைக்ரேன் காரணம்

இது ஒற்றைத்தலைவலி என்பதால் ஒரு பக்கம் தான் வரும் என்பதில்லை. இரண்டு பக்கமும் கூட இருக்கலாம். பரம்பரை வழியாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருந்தால் இந்த தலைவலி உண்டாக லாம். போதுமான தூக்கமின்மை தொடர்ந்து இருக்கும் போது இந்த ஒற்றைத் தலைவலி பிரச்சனை உண்டாகும். போதுமான இடைவெளியில் உணவு எடுக்காத போதும் இந்த தலைவலி உண்டாகும்.

சில உணவுகள் சத்துமிக்க ஊட்டசத்து மிக்க உணவாக இருந்தாலும் கூட சிலருக்கு அது ஒவ்வா மையை உண்டு செய்யும். இதனாலும் இந்த ஒற்றைதலைவலி பிரச்சனை வரலாம். அதிகப்படியாக வெளியில் செல்லும் போது அதிக நேரம் நேரடி வெயிலில் இருக்கும் போதும் இந்த தலைவலி தொடரலாம்.


​மைக்ரேன் வகை

கிளாசிக்கல் மைக்ரேன் என்னும் போது தலைவலி வரும் போது கண்ணுக்கு முன்னாடி பூச்சி பறப் பது போன்ற உணர்வு இருக்கும் சில நேரங்களில் கலர் கலராக வண்ணங்கள் போன்ற பிம்பங்கள் உருவாகும்.

நமது வலது பக்க மூளை இடதுபக்கம் கை கால்களை கண்ட்ரோல் செய்கிறது. இடது பக்கம் மூளை வலது பக்கம் இருக்கும் கை, கால்களை கண்ட்ரோல் செய்கிறது. தீவிர மைக்ரேன் வலியாக இருக் கும் போது ஒருபக்கம் கை, கால்களின் பலம் குறைவதை உணரலாம். நியூராலஜிக் மைக்ரேன் என்று சொல்கிறார்கள். ஆனால் இது பெரும்பாலானவருக்கு வருவதில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


​எல்லோரையும் தாக்குமா மைக்ரேன்

பொதுவாக பெரும்பாலோரையும் பாதிப்புள்ளாக்கும் இந்த ஒற்றைதலைவலி. வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வரும். இது டென்ஷனால் வரக்கூடிய வலி. அதிகப்படியான வேலை பார்க்கும் போது மட்டுமல்ல சிலருக்கு வேலை பார்க்கும் நேரம் வரை இந்த டென்ஷன் மைக்ரேன் தலைவலி வருவ துண்டு. இவை தினமும் வேலை நேரத்தில் மட்டுமே வரக்கூடும். இந்த நேரத்தில் கண்கள் சிறிய ஒளியை சந்தித்தாலும் கூட ஓய்வு கேட்கும். இருட்டு அறையில் வெளிச்சமில்லாத இடத்தில் படுத்து கொள்ள வெஏண்டும் என்ற உணர்வு இருக்கும் வேலை முடிந்து திரும்பும் போது இயல்பாக இருப்பார்கள்.


​மைக்ரேனுக்கு சிகிச்சை

மைக்ரேன் தலைவலி தொடர்ந்து இருப்பவர்கள் எம் ஆர் ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன் எடுப்பது மூளைக்குள் வேறு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய உதவும்.சிலர் தலைவலி என்றதும் கண்களில் தான் பிரச்சனை என்று கண் மருத்துவரை அணுகுவார்கள் அதன்பிறகு தான் நரம்பியல் மருத்துவ நிபுணர்களை அணுகுவார்கள்.மைக்ரேன் என்பது குணப்படுத்தமுடியாது. ஆனால் இதை தவிர்க்கமுடியும் என்பதுதான் மருத்துவர்கள் கூறும் அறிவுரை.


​தவிர்க்கும் முறை

தூக்கமின்மையால் வரும் மைக்ரேனை கட்டுபடுத்த போதுமான தூக்கம் இருந்தாலே போதும். உரிய நேரத்தில் தூங்க வேண்டும் என்பதில்லை. தினமும் 8 மணிநேர தூக்கம் இருப்பது வரவிடாமல் தடுக்கும்.மைக்ரேன் பிரச்சனை இருப்பவர்கள் நேரடியாக வெயிலில் செல்வதை தடுக்க வேண்டும். அப்படி சென்றாலும் கண்களுக்கு சூரிய ஒளிபடாமல் இருக்கும்படி சன்கிளாஸ் அணிவது இதை தவிர்க்கும்.

சில காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சாப்பிட்ட இரண்டு நாளில் மைக்ரேன் வரும் போது இரண்டு நாளுக்கு முன்பு சாப்பிட்ட காய்கறியை நினைவுபடுத்தி மீண்டும் அதை சாப்பிட்டு பார்த்து மீண்டும் தலைவலி வருவது உறுதியானால் அது கண்டிப்பாக உங்களுக்கு ஒத்துகொள்ளாது. இதை கண்டறிய சற்று சிரமம் என்றாலும் தலைவலியை தவிர்க்க இது தான் சரியான வழி..

மைக்ரேன் தலைவலி இருப்பவர்கள் அதிகப்படியான சாக்லெட், சீஸ், அதிக அளவு காஃபி, அதிக வாழைப்பழம் போன்றவை கூட இந்த தலைவலியை உண்டாக்கிவிடும். அன்றாட வாழ்வியல் முறையை கவனமாக கடந்தாலே மைக்ரேன் என்னும் ஒற்றைத்தலைவலியை குணப்படுத்த முடியாமலே தவிர்க்கலாம்.

மைக்ரேன் குறித்து பொதுவான தகவலகளை மட்டுமே பகிர்ந்திருக்கிறோம். யாருக்கு அதிக பாதிப்பு . எந்த வகையான உணவுகள் மைக்ரேன் தலைவலியை தீவிரப்படுத்துகிறது. போன்ற வற்றையும் தொடர்ந்து பார்க்கலாம்.


'

No comments:

Post a Comment