jaga flash news

Tuesday 18 May 2021

மண்பானை நீர்_7- 8 pH அளவு கொண்டது

மண் பானை நீர் அருந்தினால் சளி பிடிக்கும் எனச் சொல்லாதீர்கள்!

சளி என்கிற கழிவைத் தான் மண் பானை வெளியேற்றும்!

உங்கள் வீட்டு RO வாட்டர் வெளியேற்றாது !

மண்பானை நீர்_7- 8 pH அளவு கொண்டது"

இரத்தத்தில் pH அளவும்
எலும்பு,மூட்டு வலியும்...!
*************************
மூட்டு எலும்பு வலிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மருத்துவர்கள் சொல்வது மூட்டு தேய்ந்து விட்டது, கால்சியம் குறைந்து விட்டது, எலும்பு அடர்த்தி குறைந்து விட்டது என்பது தான் .

இயல்பாக இரத்தத்தின் pH அளவு 7.4 ஆகும். (pH என்பது "potential of Hydrogen"). 

ஒரு பொருள் 7 ற்கு கீழ் pH அளவு இருந்தால் அந்த பொருள் அமிலத் தன்மை உடையது. 
( Acid ). 

ஒரு பொருள் 7 இற்கு மேல் pH அளவு இருந்தால் அந்தப் பொருள் காரத் தன்மை உடையது. (Alkaline).

நமது இரத்தம் இயல்பாகவே காரத்தன்மை உடைய 7.4 pH அளவு உடையது...!

ஆனால் நாம் அருந்தும் பெரும்பாலான குளிர்பானங்கள் அமிலத்தன்மை உடையவை.

அதாவது pH அளவு என்பது பெரும்பாலும் 5 விட கீழாக இருக்கும்.

இந்த குளிர்பானங்களை அருந்தும் போது நமது இரத்தமானது அதன் இயல்பான காரத்தன்மையை இழந்து அமிலத்தன்மையாக மாறும்.

இது தொடர்ந்து நடக்கும் போது இரத்தம் அமிலத் தன்மையை அடையும்.

இது பல்வேறு உடல் நல கேடுகளுக்கு வழிவகுக்கும்.

எனவே இதை தடுக்கும் பொருட்டு உடலானது இரத்தத்தை காரத்தன்மையாக மாற்ற முயலும்.இரத்தத்தை காரத்தன்மை உடையதாக மாற்றக் கூடிய பொருள் கால்சியம். எனவே இந்த எலும்பு மற்றும் மூட்டுகளில் உள்ள கால்சியம் ஆனது ionized கால்சியம் ஆக மாற்றப் பட்டு நமது இரத்தத்தில் கலக்கிறது . இப்போது இரத்தம் இயல்பான காரத்தன்மை அடைகிறது. இவ்வாறு எப்போதெல்லாம் இரத்தம் அமிலத்தன்மை உடையதாக மாறுகிறதோ அப்போதெல்லாம் கால்சியம் எலும்பு மூட்டுகளில் இருந்து பிரிந்து இரத்தத்தில் கலந்து அதை காரத்தன்மை உடையதாக மாற்றுகிறது.

எனவே எலும்பு, மூட்டுகள் வலுவிழக்கிறது. கடுமையான வலி உண்டாகிறது.இப்போது எந்த அளவு pH ஆனது கீழ்கண்ட பொருட்களில் இருக்கிறது என்று கூகுளில் தேடி பார்த்தபோது கீழ்கண்ட அளவீடுகள் கிடைத்தன.

குளிர்பானங்கள் - 2.3 - 3.5 pH அளவு.R.O.WATER - 5 - 6 pH அளவு.காபி -4.5 -5.5 pH அளவு.

மண்பானை நீர் - 7- 8 pH அளவு.

R.O. WATER - என்பது நாம் வீடுகளில் பெருமையாக நினைத்து பயன்படுத்தும் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி.

தற்காலங்களில் பெரும்பாலான வீடுகளில் இந்த கருவிகள் பொருத்தப்பட்டு தண்ணீரை சுத்திகரிப்பதாய் நினைத்து மூட்டுவலியை விலை கொடுத்து வாங்குகிறோம்.

நாம் குடிக்கும் அத்தனை குளிர்பானங்களும் மூட்டுவலிக்கு ஒரு காரணமாய் அமைகிறது .இப்போது மண்பானை நீர் எவ்வளவு பாதுகாப்பானது என்று உங்களுக்கு தெரிய வரும்.

ஏன் என்றால் #மண்பானை நீர் pH அளவு 7- 8 ஆகும்.

கார்போரேட்டுகள் திட்டமிட்டு விளம்பரம் செய்து நம்மிடையே குளிர்பானங்களை விற்கிறார்கள். அதுபோல தண்ணீர் சுத்தமில்லை என்ற எண்ணத்தை மனதில் விதைத்து நீர் சுத்திகரிப்பு கருவியை விற்று நமக்கு நோயை பரப்புகிறார்கள். பின்னர் அவர்களே அந்த நோய்க்கு மருந்தை விற்பார்கள்.

இந்த சுழற்சி வலையை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே நமக்கு நோய் குணமாகும்...!


No comments:

Post a Comment