jaga flash news

Saturday 29 May 2021

குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா...?

🌺👉 குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா...?

🕉️🙏🏻தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு இருவரும் ஒருவரல்ல...🍀👍

By 
🙏🙏Srinivasan Arunachalam Koundinya  - 
                                                      -  Vedic Astrologer Pandit..🙏🙏

" சில ஆலயங்களில் தட்சிணாமூர்த்தியை குரு பகவான் என்றே மாற்றி விட்டார்கள்....."🙏

👉அதற்கே அனைத்து பரிகார பூஜைகளையும் செய்கிறார்கள். குருவுக்கு அணிவிக்கவேண்டிய மஞ்சள் துணியை தெட்சிணா மூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். கடலை சாதம் போன்ற குருகிரக நைவேத்திய பொருள்களை தட்சிணாமூர்த்திக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

👉இந்த தெய்வங்களை எப்படி வணங்குவது, அவர்களுக்கு படைக்க வேண்டிய நைவேத்தியம், அணிவிக்க வேண்டிய வஸ்திரம் என்ன, அவர்களுக்கிடையே உள்ள தனித்துவம் என்ன....

👉நம்மில் பெரும்பாலானோர் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவகிரக குரு என்பது தெரிவதில்லை.....

இதன் காரணமாக கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்காக அல்லது பரிகாரம் செய்வதற்கு என நினைத்து தட்சிணாமூர்த்தி முன் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

👉அதே சமயம் உண்மையான குரு முன் வழிபடச் செல்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக குரு பகவானுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டு முறையை தட்சிணாமூர்த்தி முன் செய்து வருகின்றனர்.

🌸"குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:

குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸீ குருவே நம:"🌸

என்ற ஸ்லோகத்தில் குரு என்ற வார்த்தைக்கு தட்சிணாமூர்த்தி என்று அர்த்தம். ஆனால் குரு என குறிப்பிடப்படுவதால் குரு பகவானும், தட்சிணாமூர்த்தியும் ஒன்று என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

👉அதே சமயம் ஆலங்குடியில் குரு பகவானுக்குரிய கோயிலும், பட்டமங்கலத்தில் தட்சிணாமூர்த்தி ஸ்வாமியும் பிரபலமடைந்து இருப்பதால் இருவரும் ஒன்று என எண்ணத்தோன்றச் செய்துள்ளதும் ஒரு காரணமாக இருக்கலாம்....

👉நவகிரகங்கள் என்பது இறைவன் இட்ட கட்டளையை, கடமையைச் செய்யக் கூடிய ஒன்பது கோள்களாகும். அவற்றில் ஒருவர் தான் குரு பகவான் எனும் ப்ரஹஸ்பதி.

👉இரு தெய்வங்களுக்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.

🌺​தட்சிணாமூர்த்தி என்பவர் யார், எப்படி இருப்பார்🌺

👉சிவன் கோயிலில் தென்முகம் பார்த்து அருள்பாலிப்பவர் தட்சிணாமூர்த்தி. இவர் எப்போது தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தட்சிணாமூர்த்தி என்பவர் ஞான குரு. அவருக்கு விருப்பமான நிறம் வெண்மை. அதனால் அவர் வெண்ணிற ஆடையில் அருள்பாலிப்பார். (ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம் என வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. அதாவது ஸ்வேதம் என்றால் வெண்மை என்று பொருள்.

👉இவர் சிவ பெருமானின் ரூபம். ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமத்தை உபதேசிக்கும் குருவின் உருவமாக தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் அடியில் அமர்ந்திருக்கக் கூடியவர். இவரை ஞான குரு அல்லது ஆதி குரு என அழைக்கப்படுகிறார்...👍

👉ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தி முன் நாம் தியானத்தில் அமர்ந்து வழிபடலாம். அதே சமயம் ஞானத்தை வேண்டுபவர்களுக்கு வியாழக்கிழமை தான் உகந்தது என்று இல்லை. எந்த கிழமையானாலும் அவருக்கு உகந்ததே....🙏🙏🙏

🌸👉 தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம்...🌺🙏

🌸👉 இவரே சிவம்....🍀🙏

🌸👉 தட்சிணாமூர்த்தி என்பவர் முதலாளி..🌺🙏

🌸👉 தட்சிணாமூர்த்தி என்பவர் சிவகுரு...🍀🙏

🌸👉 தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்...🌺🙏

🌸👉 தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர்...🍀🙏

🌸👉 சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்....🌺🙏

🍀👉 சரி இனி 🌺​குரு என்பவர் யார், எப்படி இருப்பார்🌺

🌸👉 நவகிரகங்களில் இருக்கக் கூடிய குரு பகவானோ வடக்கு திசை நோக்கி வீற்றிருப்பார். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள். அதே போல் அவருக்கு விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை....

🌸👉 இவருக்கு மஞ்சள் வஸ்திரத்தைச் சாற்றுவதும். கொண்டைக்கடலை மாலை அணிவிப்பதும் உகந்தது.

🌸👉 ஆனால் குரு என்பவர் இந்திர லோகத்தில், தேவர்களுக்கெல்லாம் குருவாக, ஆலோசனை வழங்கக் கூடியவராக அதாவது ஆசிரியர் பணியை செய்யக் கூடியவர் ப்ருஹஸ்பதி எனும் குரு பகவான். (வியாழன் கோள்).

🌸👉 குரு பகவான் என்பவர் கிரக வடிவம்...🌺🙏

🌸👉 இவரே பிரகஸ்பதி (பிரம்ம குமாரர்)...🍀🙏

🌸👉 குரு என்பவர் அதிகாரி...🌺🙏

🌸👉 குரு என்பவர் தேவகுரு....🍀🙏

🌸👉குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து ஜீவன்களிடம் கொண்டு சேர்ப்பவர்....🌺🙏

🌸👉குரு என்பவர் ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்....🍀🙏

🌸👉குருவோ உதயம் -அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்....🌺🙏

🌺👉இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இரு தேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல…😒

எனவே இந்த குரு வாரத்திலிருந்தாவது.....

👉 தட்சிணாமூர்த்தியை தட்சிணாமூர்த்தியாக (சிவகுருவாக) வழிபடுங்கள்...🙏🙏🙏🙏

🍀🌺 👍🙏🙏🙏

No comments:

Post a Comment