60+ வயதிலும் எலும்பு செம ஸ்ட்ராங்கா இருக்கணுமா? ஜஸ்ட் இத ஃபாலோ பண்ணா போதுமாம்! என்னான்னு பாருங்க!
1/9
கட்டிளங் காளை போல் நம் இளம் வயதில் எதையும் சாதித்துவிடலாம், மலையையே அலேக்கா தூக்கிவிடலாம் என்றெல்லாம் மனம் துள்ளிவிளையாடும், உடல் அதற்கு ஏற்றவாறு செயல்படும். ஆனால் வயது கூடக் கூட மனம் எப்போதும் போல் இளமையாகத்தான் இருக்கும் உடல் தடுமாற தொடங்கிவிடும். 40+ வயதில் எலும்பின் வலு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து சிறு வேலையை கூட செய்யமுடியாமல் உடல் உத்துழைக்க சிரமப்படும். இதற்கு காரணம் எலும்புகளில் சரியான கால்சியம் சத்து இல்லாதது தான்.
2/9
தவறான உணவு முறையால் சரியான கால்சியம் சத்துக்கள் கிடைக்காமல் எலும்புகள் மிகவும் தளர்ந்து விடும், குனிந்து நிமிர்வதே பெரிய வேலையாக மாறிவிடும். அந்தவகையில் இந்த நிலை மாறவேண்டுமானால் 60+ வயதிலும் இளம் காளையை போல் செம ஆக்ட்டிவாக வேண்டுமென்றால் இதை கண்டிப்பாக ஃபாலோ செய்யுங்கள். எந்தெந்த உணவை சாப்பிட்டால் எலும்புகளுக்கு அதிக கால்சியம் வெடிக்கும்என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
3/9
சக்கரவள்ளி கிழங்கு: ஒரே ஒரு சக்கரவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட், இரும்பு சத்து, கால்சியம் உள்ளிட்ட பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை அனைத்தும் எலும்புகளை பராமரித்து சீராக செயல்பட உதவுகிறது.
4/9
ப்ரோக்கோலி: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் முதலில் எடுத்துக்கொள்ளும் உணவு ப்ரோக்கோலி. கால்சியம் சத்து அதிகம் உள்ளடக்கிய ப்ரோக்கோலி பல் மற்றும் எலும்புகளை பாதுகாக்கிறது. மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்துக்கும் தீர்வாகவும் ப்ரோக்கோலி இருக்கின்றது.
5/9
சியா விதை: வலுவான எலும்புகளை உருவாக்க சியா விதை மிகவும் உதவும், அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் இந்த சியா விதை உதவும். இதில் சுமார் 18 சதவீகிதம் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது, இது எலும்புகளை பாதுகாத்து வலுவுடன் வைத்துக்கொள்ளும்.
6/9
எள் விதை: இளச்சவனுக்கு எள்ளு என்று சொல்வது போல் உடல் எடையை அதிகரிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் இந்த எள் விதை உதவுகிறது. அதிகளவு கால்சியம் சத்துக்கள் உள்ளடக்கிய எள் விதை தினசரி உட்கொண்டால் எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலுவுக்கும் உதவும்.
No comments:
Post a Comment