jaga flash news

Thursday 28 December 2023

மாசிக்காய்.. மகத்துவம் நிறைந்த காய்..


மாசிக்காய்.. மகத்துவம் நிறைந்த காய்..பச்சிளம் குழந்தை முதல் முதியோர்வரை காக்கும் மாசிக்காய் அற்புதம
குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை நோய் நொடியில்லாமல் காக்கக்கூடிய அருமருந்துதான் மாசிக்காய்.. இதன் பயன்கள் என்னென்ன தெரியுமா? எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?


இந்த மாசி மரத்தின் கிளைகளை ஒருவித பூச்சிகள் துளையிடுமாம்.. அப்போது, அந்த கிளையிலிருந்து வடியும் பால், நாளடைவில் காய்ந்து கெட்டிப்பட்டுவிடும். இந்த கெட்டித்தன்மை வாய்ந்த பொருள்தான் மாசிக்காய் என்பார்கள்.

Do you know the Excellent Health Benefits of Masikkai and Maasikkai is the Best Herbal Medicine for Born Babies
மாசிக்காய்: பெரும்பாலும், பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த மாசிக்காயை உரைமருந்தாக பயன்படுத்துவார்கள்.. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வழங்கப்படுவதுதான் இந்த மாசிக்காய்.. மாசிக்காயை பொடி செய்து, ஒரு ஸ்பூன் எடுத்து தேன் சேர்த்து தந்தால் பேதி, சீத பேதி நிற்கும். அல்லது மாசிக்காயை தாய்ப்பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வந்தால் பேதி நின்றுவிடும்.




பச்சிளம் குழந்தைகளுக்கு நாக்கில் மாவு போன்று வெள்ளை நிறத்தில் படிந்திருக்கும்.. இந்த வெண்மையை நீக்கவும் மாசிக்காய் உதவுகிறது. மாசிக்காய் பொடி என்றே நாட்டு மருந்து கடையில் தனியாக கிடைக்கிறது என்றாலும், மாசிக்காயை உரைத்து இழைத்து பயன்படுத்துவதே குழந்தைக்கு நல்லது.

மாதவிடாய்: பெண்களுக்கு இந்த மாசிக்காய் மிகவும் பயன்தருகிறது.. மாசிக்காயை பொடி செய்து, ஒருநாளைக்கு 3 முறை சாப்பிட்டு வந்தால், மாதவிடாயின்போது ஏற்படும், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்..

அதேபோல, மாசிக்காய் தூள் செய்து, 50 கிராம் எடுத்து, 800 மி.லி., தண்ணீருடன் கலந்து, 10 நிமிடம் காய்ச்சி வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். இதிலிருந்து 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் குடித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் குணமாகும். அல்லது மாசிக்காய் தூள் செய்து, பாலில் அல்லது மோரில் கலந்து குடித்துவரலாம்.

மாசிக்காய்: தொண்டை, சளி, இருமல், சுவாச கோளாறுகளுக்கு மாசிக்காய் பேருதவி செய்கிறது. இந்த மாசிக்காயை தூளாக்கி, வெந்நீரில் போட்டு மூடிவைத்துவிட வேண்டும்.. 10 நிமிடம் கழித்து, அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்கள் குணமாகும்.. ஈறுகளிலிருந்து ரத்தம் வடிவது நின்றுவிடும். கிருமிகள் இருந்தாலும் நீங்கிவிடும்.. தொண்டை வலி அகலும். அல்லது மாசிக்காய் பட்டை பயன்படுத்தி, கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.

கால் இடுக்குகளில் சேற்றுபுண்களை போக்க இந்த மாசிக்காய் உதவுகிறது.. இரவு தூங்க செல்வதற்கு முன்பு, மாசிக்காயை தண்ணீரில் குழைத்து விரல் இடுக்குகளில் உள்ள புண்களில் தடவி வந்தால், சேற்றுபுண்கள் முழுமையாக குணமாகும்.. இனி வரும் நாட்களில் சேற்றுப்புண்கள் வருவதும் தடுக்கப்பட்டுவிடும்.


சர்க்கரை நோயாளிகள்: உடலில் அடிபட்டு ரத்தம் வந்தாலோ அல்லது கட்டிகள், புண்கள், ரணங்கள் ஏற்பட்டுவிட்டாலோ, மாசிக்காயை உரைத்து தடவி வரலாம்.. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றக்கூடியதாக இந்த மாசிக்காய் விளங்குகிறது.. ஆசனவாய் வெடிப்பகள் இருந்தால், அல்லது மூலநோய் காரணமான எரிச்சல் இருந்தால், மாசிக்காயை தண்ணீரில் குழைத்து, வெடிப்பு இருக்கும் பகுதியில் தடவி வந்தால் போதும்.. புண்கள் மெல்ல ஆறிவிடும்.


2 comments:

  1. அய்யா வெ.சாமி. அவர்களுக்கு நமஸ்காரம். மாசிக்காய் என்பது, மரத்தினுடைய பூவிலிருந்து காய்க்கும் காய் அல்ல.

    ஒருவிதப் பூச்சி, இம்மரக்கிளையிலிருந்து துளைப்பதினால், அதிலிருந்து ஒருவித சத்து வடிந்து, உறைந்து திரண்டு கட்டிப்படுவதே.. மாசிக்காய் ஆகும்.

    ReplyDelete
  2. இதை உரசி கண்களுக்குத் தீட்டக் கண்களில் நீர்வடிதல் நிற்கும். தேமல் நோய், படைகளுக்குப் பூச நீங்கும். இதைக் கியாழமிட்டு வாய் கொப்புளிக்கப் பல்நோய் தீருவதுடன், ஈறு பலப்படும்.

    இதன் செயல் : சங்கோசனக்காரி, முறைவியாதிரோதி, பலகாரி.

    பலகாரி : தாதுக்களுக்குப் பலம் கொடுக்கும் மருந்து.

    முறைவியாதிரோதி : முறைக் காய்ச்சல், முறையாய் வருகிற ரோகங்கள் இவற்றைத் தடுக்கும் மருந்து.

    சங்கோசனகாரி : சதை, நரம்பு இவைகளைச் சுருங்கச் செய்யும் மருந்து.
    ------------

    ReplyDelete