jaga flash news

Saturday 2 December 2023

தொப்பையை குறை தொப்பையை டயட் உஇல்லாமல் குறைக்கலாம்..


டயட் வேண்டாம்-உடற்பயிற்சி வேண்டாம்..’இதை’ செய்தால் ஈசியாக தொப்பையை குறைக்கலாம்!
தொப்பையை குறைக்க டயட்-உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை..சில வாழ்க்கை நடைமுறைகளே அதற்கு வழிவகை செய்து விடும்.   

டயட் வேண்டாம்-உடற்பயிற்சி வேண்டாம்..’இதை’ செய்தால் ஈசியாக தொப்பையை குறை
தொப்பையை டயட் உஇல்லாமல் குறைக்கலாம்..
அதற்கென்று தினசரி நடவடிக்கைகள் இருக்கின்றன..
மேலும் பல டிப்ஸ்கள்..இதோ

நம்மை பாதுகாப்பின்மையாக உணர வைக்கும் தொப்பையில் இருந்து விடுபட நாம் பல முயற்சிகளை மேற்கொள்வாேம். அந்த முயற்சிகளில் ஒன்றாக, டயட் அல்லது உடற்பயிற்சி ஆகியவை இருக்கும். ஆனால், இவை இரண்டும் இல்லாமல் கூட நம்மால் உடல் எடையை குறைக்க முடியும். அது எப்படி தெரியுமா? 

1.சமைத்து சாப்பிட வேண்டும்..

நீங்கள் சாப்பிடும் உணவுகளை நீங்களே சமைத்து சாப்பிடுவது சால சிறந்தது. எதை, எந்த அளவிற்கு, எப்படி சாப்பிட வேண்டும் ஆகிய விஷயங்களை நீங்களே முடிவு செய்யுங்கள். அதற்கு அடிப்படையாக சமைக்க கற்றுக்கொள்வது சிறந்தது. விதவிதமாக சமைத்து சாப்பிடுபவர்களுக்கு அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எப்படி ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என்பது தெரியும். அதில் காய்கறி, பழங்கள் போன்ற பலவகையான உணவுகளும் அடங்கும். எனவே, உங்களுக்கு தேவையான உனவை நீங்களே சமைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதற்கான அளவையும் அறிந்து கொள்வீர்கள். 
2.புரத சத்துக்கள்:

புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் நீங்கள் நீண்ட நேரத்திற்கு பசி இல்லாமல் இருக்கலாம். இது, உங்கள் உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சத்துக்களையும் அதிகரிக்கும். இதற்கும், டயட்டில் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், டயட்டில் இருக்கும் போது உங்களுக்கு பசி ஏற்படும் அளவிற்கு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் ஏற்படாது. 

3.உறக்கம் முக்கியம்..

உடல் பருமனுடன் இருப்பவர்கள், பெரும்பாலும் இரவில் அதிகம் தூங்காதவர்களாக இருப்பார்கள். இரவில் தாமதமாக தூங்கி, காலையில் சீக்கிரமாக எழுபவர்களுக்கும் இது பொருந்தும். இரவில் தூக்கமின்றி தவிப்பது கண்ணுக்கு தெரியாமல் நம் உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வந்து விட்டுவிடும். எனவே, இரவில் உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை எடுத்துக்கொள்வது நல்லது. 

4.மென்று சாப்பிட வேண்டும்..

எந்த வேளையில், எந்த உனவை, எந்த அளவில் சாப்பிட்டாலும் அதை நன்கு மென்று சாப்பிட கற்றுக்கொள்ளுங்கள். இப்படி நன்கு மென்று சாப்பிடுவதால் உணவு எளிதில் செரிமானம் ஆகும். இதனால் உடல் எடை கூடாமல் பார்த்துக்கொள்ளலாம். 


5.தினசரி செயல்பாடுகள்..

டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்புவோர் தங்களுக்கான வேலைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கான உணவை சமைத்து கொள்வதில் ஆரம்பித்து, உங்களுக்கு ஏதாவது தேவை என்றால் நீங்களாக எழுந்து சென்று எடுத்துக்கொள்ளும் வரை, ஒவ்வொரு வேலையையும் நீங்களே செய்து கொள்ள வேண்டும். 

6.படியை உபயோகப்படுத்த வேண்டும்..

அலுவலகம், வீடு என நீங்கள் அடிக்கடி பழங்கும் இடங்களுக்கு செல்லும் போது, லிஃப்ட் அல்லது எலிவேட்டரை விடுத்து படியேறி பழகுவது நல்லது. படி ஏறுவது, நம் இதயத்தை பாதுகாக்கும் நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி, எங்கு சென்றாலும் மின்தூக்கிகளை விடுத்து படிகளை பயன்படுத்துதல் உடலுக்கு வேலை கொடுக்கும் நல்ல பயிற்சியாக அமையும். இதனால் உடல் எடையும் குறையும். 

­

No comments:

Post a Comment