jaga flash news

Saturday 23 December 2023

முருங்கை பூ....

முருங்கை பூ பொடியே போதும்.. நோயை நாலடி தள்ளி நிறுத்தும்.. வாவ் முருங்கையிலையை சமையலில் சேர்த்து கொள்வது போலவே, முருங்கைப்பூக்களையும் சேர்த்து கொண்டால், கூடுதல் பலன்கள் கிடைக்கும். இதில், முருங்கைப்பூ பொடி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
கண்களில் உள்ள எல்லா கோளாறுகளையும் சரிசெய்யக்கூடியது இந்த பூக்கள்.. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து, பிறகு அந்த பாலை வடிகட்டி குடித்து வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்..


நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கைப்பூக்கள் மிகவும் நல்லது.. காரணம், இந்த பூக்கள் உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. மாதவிடாய் நேரத்தில் அளவுக்கு அதிகமான உதிரப்போக்கை கட்டுப்படுத்தக்கூடியது.. குழந்தைகளின் நினைவாற்றலுக்கு, முருங்கைப்பூ உதவுகிறது. முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து, பனங்கல்கண்டு சேர்த்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

Do you know Excellent Health benefits of Drumstick Flowers and Drumstick Flowers Powder is the Best Medicine
முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். ஆனால், இந்த பூக்களை காயவைத்து பொடி செய்து சாப்பிட்டால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


வாதம், கபம்: இந்த பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, பித்தம், வாதம், கபம் போன்ற பிரச்சனைகள் தீர்கின்றன.. ரத்த சோகையும் நீங்கி, உடலில் ரத்த விருத்தி ஏற்படுகிறது.. சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும் இந்த பொடி துணை செய்கிறது..

அதிக வேலைப்பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்துவிடும். இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்கள், முருங்கை பூ பொடியில் கஷாயம் போல செய்து வாரம் 2 முறை குடித்து வரலாம். இதனால், மன அழுத்தம் நீங்குவதுடன், பயம், கோபம், அசதி, தலைவலி குணமாகி நன்றாக தூக்கம் வரும்.. மனம் அமைதி பெறும். இந்த பொடியை 5 கிராம் வீதம் தேன் கலந்து தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், கண்ணில் ஏற்படும் வெண்படலம் மாறும்..

முருங்கை பூக்கள்: முருங்கை பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால், பார்வைத்திறன் அதிகரிக்கும். இந்த பொடியை, கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் சேர்த்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி, கர்ப்பப்பை பலமடையும்..

ஆலோசனை: முருங்கைப் பூ பொடியை பச்சை பாலுடன் 60 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தாலும், குழந்தையின்மை பிரச்சனைகள் நீங்கும்.. ஆனால், உள்ளுக்குள் இப்படி மருந்தாக உட்கொள்ள நேர்ந்தால், கட்டாயம் டாக்டர்களின் சித்தா அல்லது ஆயுர்வேத மருத்துவரை அணுகி ஆலோசனையை பெற வேண்டும்.


1 comment:

  1. Sun. 31 Dec. 2023 at 1.03 pm.

    *இன்றைய ஸ்பெஷல் மருத்துவம்....முருங்கை :*

    *முருங்கைகாய் (Moringa Pterygosperma -- Pod.*

    சொல்லும் நோய்கட்கு எல்லாம் தோஷமிலை யையமறும்
    பல்லுயிர்க்குந் தாதுமிகும் பத்தியமாம் −வில்லார்
    பெருங்கைக்கா மன்றுதிக்கும் பெண்ணே நறிய
    முருங்கைக்காய் தன்னை மொழி.

    இதன் பொருள் : பல பிணிக்கும் குற்றம் இல்லாப் பத்தியக் கறி..இதனால் கபம் நீங்கும். விந்து கட்டும் என்பதே.

    இதனின் செய்கை :

    *கபஹரகாரி & காமவிர்த்தினி.*

    * கபஹரகாரி என்பது...கபத்தை வெளியாக்கி, இருமலைத் தணிக்கும் மருந்து.

    * காமவிர்த்தினி என்பது...காமத்தை அதிகப்படுத்தும் மருந்து.

    *இதன் பயன் :*
    இக்காயைப் பொரியலாக செய்து சாப்பிட குடலுக்கு பலம் ஏற்படும். வயிற்றிலுள்ள வாயுவை நீக்கும். விந்துவைக் கட்டும். கபத்தை ஒழிக்கும்

    துவரம் பருப்பு சாம்பாரிலோ அல்லது ஆட்டுக்கறியிலோ இம் முருங்கைக்காயை சமைத்து சாதத்தோடு (அன்னம், சோறு) சாப்பிட மேற்கண்ட பலன் கிடைக்கும்.

    *அடுத்து...முருங்கைப் பூ :*

    இப்பூவினால் பித்த தோஷம், அரோசகமும் நீங்கும். சுக்கில விர்த்தியும், கண் குளிர்ச்சியும் உண்டாகும்.

    இது காம விர்த்தினி.

    ஒரிரு பிடி முருங்கைப் பூவைச் சுத்தம் செய்து, பாலில் போட்டுக் காய்ச்சிப் பின் கடைந்து, இதனுடன் கற்கண்டு சேர்த்து, மாலை நேரத்தில் 6−மணிக்குள் தொடர்ந்து சிறிது நாட்கள் சாப்பிட்டு வர தாது பலப்படும். இரவு நேரத்தில் இணைவிழைச்சியில் இன்பத்தை ஊட்டும்

    இதனின் இலேகியம் தாது விருத்திக்கு மிகவும் சிறந்தது.

    துவரம்பருப்போடு சேர்த்து, கடைந்தும் சாப்பிடலாம்.

    *அடுத்ததாக... முருங்கை மரப் பட்டை :*

    இதன் செயல்பாடு அதிகம். :

    கபதோஷம், சந்நிபாத சுரம், வாத தோஷம், சில் விஷயங் களும் நீங்கும்.

    இம் மரப் பட்டையை நீர் விட்டு வேக வைத்து, எடுத்த கியாழத் தில், உப்பு, புளி, மிளகாய் சேர்த்து, ரசம்போல் வைத்து சாப்பிட, பாரிச வாயு,காக்கைவலி, குளிர் சுரம், சூதக சந்நி, இவைகள் குணமாகும்.

    இந்த பட்டையோடு, கடுகு சேர்த்து அரைத்து கீல் வாதங்களுக்குப் பற்றுப்போட குணமாகும். "அச்சமயம் எரிச்சல் உண்டானால் உடனே, நீர் விட்டு அலம்பி விட வேண்டும்."

    ReplyDelete