jaga flash news

Sunday 17 December 2023

சாம தான பேத தண்டம் என்றால் என்ன?

சாம தான பேத தண்டம் என்றால் என்ன?
திருக்குறள்:-
----------------------
ஒல்லும்வா யெல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல்
பொருள் - ஒரு செயலைச் செய்யும்போது சாம, தான, பேத, தண்டம் என்னும் எல்லா உபாயங்களிலும் தண்டம் என்னும் உபாயம் கொண்டு செய்வது நல்லது. அது பலன் அளிக்காத போது, பிற மூன்றினுள் ஏற்ற ஒன்று கொண்டு செய்க.
#சாம #தான, #பேத, #தண்டம் என்றால் என்ன என்பதை உங்களுக்கு பின்வருமாறு ஆழமாக இன்று விளக்குகிறேன்....
சாமம் (conciliation):
---------------------------------
  இருவருக்கும் பொதுவான நன்மைகளை எடுத்துக் கூறியோ, எதிராளியின் மனம் குளிர அவரைப் பாராட்டியோ, ஒரே இயல்புகளைக் கருத்தில் கொண்டோ சமரசம் செய்தல்.
தானம் (placating with gifts):
-----------------------------------------------
பணம், சலுகைகள் அளித்து எதிர்ப்பை அடக்கிவிடுதல்.
பேதம் (sowing dissension):
---------------------------------------------
இருவருக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, பிரச்னையை வளர்த்தல்.
தண்ட (use of force):
-----------------------------------
ஆதிக்கத்தையும், அதிகாரத்தையும், வலிமையையும் பயன்படுத்தி பிரச்னையை அடக்குதல்!


2 comments:

  1. ஆத்தாடியோ.. அய்யா.. வெ. சாமி அவர்களே ! இக்குறளுக்கு பொருள் விளக்கம் கொஞ்சம் மாறுபாடால்ல இருக்கு...! அடியேன் கற்றது.. ஒரு செயலை நிறைவேற்ற இயலும் இடங்களில், முறையாக ஈடுபடுதல் விரும்பத்தக்கது ஆகும். இயலாத இடமாயின் அதனை நிறைவேற்றும் வழிமுறையினை தெளிவாக ஆராய்ந்து, அச்செயலை மேற்கொள்ள வேண்டும்..என்பதே இதன் பொருள் விளக்கம்.

    ReplyDelete
  2. இக்குறள் : செயலாற்றும் முறைமை அதாவது வினை செயல் வகை. குறள் : 673− ல் வருகிறது.

    ReplyDelete