compatibilityHow Ketu Planet In 7th Place In Your Horoscope To Impact On Your Marriage Life
ஜாதகத்தில் 7- ல் கேது இருந்தால் திருமண சுகம் கிடைக்குமா?
ஏழாமிடத்தில் கேது பகவான் இருப்பேன் உங்கள் வாழ்க்கைத் துணை அன்பாக இருந்தாலும் அர்ப்பணிப்பு, தியாகங்களை செய்தாலும் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
ஜோதிடத்தில் 7-ஆம் இடம் என்பது களத்திர ஸ்தானம் என்பார்கள் அதாவது வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டணி போன்றவற்றை குறிக்கிறது. இந்த இடத்தில் ஆகிய இடங்களை குறிக்கிறது.
1. காம திரிகோண ஸ்தானங்களில் ஒன்றான இந்த இடத்தில் கேது பகவான் நின்றால் அதற்குரிய காரகத்துவம் சார்ந்த விஷயங்களை நாம் சரியாக கையாளாவிட்டால், வாழ்க்கையில் ஏமாற்றத்தைச் சந்திக்கக்கூடும்.
2. ஏழாமிடத்தில் கேது பகவான் இருப்பேன் உங்கள் வாழ்க்கைத் துணை அன்பாக இருந்தாலும் அர்ப்பணிப்பு, தியாகங்களை செய்தாலும் அதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
3. ஏழாமிடத்தில் கேது பகவான் இருப்பின் அந்த ஜாதகர் தங்களின் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் உங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற வில்லையே என்ற விரக்தியே மிஞ்சும்.
4. ஏழாமிடத்தில் கேது பகவான் அமையப்பெற்ற ஜாதகர்கள் உறவுகள் விஷயங்களிலும் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது அவசியம். இன்றைய நாள் ஏமாற்றம் மிஞ்சும்.
5. ஏழாம் அதிபதி கேது பகவானும் சேர்ந்து இருப்பின் அல்லது வேறு ஏதேனும் கிரகங்களின், தொடர்பு ஏற்பட்டிருப்பின் அவர்கள் திருமண வாழ்க்கையில் துணையுடன் நெருக்கம் சற்று குறைவாகவே இருக்கும்.
6. ஏழாம் இடத்தில் கேது இருப்பின், லக்னத்தில் ராகு இருப்பார். இதன் காரணமாக ராகு போகும் ஆசைகளைத் தூண்டும் போவதாகவும் எதிர்கால சிந்தனைகளை தருபவராக இருக்கிறார். அதனால் எப்போதும் மனதில் கலக்கத்துடன் இருக்கும்.
7. திருமண சுகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் கேதுவுடன் ஏதேனும் ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருந்தால் அங்க ஜாதகர் தாம்பத்யம் சார்ந்த விஷயங்களில் திருப்தி இல்லாமல், ஏமாற்றத்தை சந்திப்பார். வாழ்க்கையை சலிப்புடன் நகர்த்துவார்.
8. ஏழாமிடத்தில் கேது அமர்ந்து, சுபக்கிரகங்களின் தொடர்பு அல்லது பார்வை இருப்பேன், அவரின் வாழ்க்கையில் திருமண தாம்பத்தியம் சார்ந்த பிரச்சனைகள் அவருடைய வெளியில் தெரியாமல் மறைமுகமாக இருக்குமே தவிர, அந்த ஜாதகர் மனதளவில், கனடியப் துணையான கணவனோ அல்லது மனைவியோ தனக்கேற்றவர்கள் இல்லை என்பதை மனதில் உணர வைப்பார்.
அதனால் ஏழாம் இடத்தில் கேது இருப்பவர்களின் திருமண வாழ்க்கையில் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால் நலமுடன் வாழலாம்.
No comments:
Post a Comment