jaga flash news

Monday, 2 December 2024

மேஷராசி

மேஷராசியில் பிறந்தவர்களுக்கு தேவைக்கேற்ற பண வசதிகள் ஏற்பட்டாலும் சேமிக்கும் அளவிற்கு வருவாய் இருக்காது. தான தர்மம் செய்யும் குணம் கொண்டவர் என்பதால் பிறர் இவர்களை எளிதில் ஏமாற்றி காரியத்தை சாதித்துக் கொண்டு நன்றியை மறந்து தூற்றுவார்கள். கடன் வாங்கி பிறருக்கு உதவி செய்வதால் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியாமல் அவமானப் படுவார்கள். கடன் வாங்கியவர்களும் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றுவார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை இவர்களால் திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று சுகத்தோடு வாழ வேண்டுமென்று இவர்கள் நினைத்தாலும் அது முடியாமலே போகும். எதிர்பாராத இன்பங்கள் தேடி வந்தாலும் இவரது கவனக்குறைவினால் அதை நழுவ விட்டு விடுவார்கள். பூர்வீக சொத்துக்களாலும் இவர்களுக்கு அனுகூலம் இருக்காது. எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப, துன்பங்கள் சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். சாதுர்யத்துடனும் திறமையுடனும் எதையும் சமாளிப்பார்கள். பண விஷயத்திலும் சிந்தித்து செயல்பட்டால் வாழ்க்கையில் வளம் பெருகும் என்பதில் ஐயமில்லை.

புத்திரபாக்கியம்,

இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ், கௌரவம் உயரப்பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பவர்களாகவும், தாய், தந்தையை ஆதரிப்பவர்களாகவும், பெரியோர்களின் சொற்படி கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாகவும் இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அனுகூலமில்லை என்றாலும் புத்திரர்களால் அனுகூலமுண்டு என்று சொல்லலாம்.

தொழில்,

மேஷ ராசியில் பிறந்தவர்கள் சளைக்காமலும், சுயநலம், பிரதி பலன் எதிர்பாராமலும், பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள் ஊதியத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் எடுக்கும் காரியங்களில் கண்ணும் கருத்துமாகவும் துணிச்சலுடனும் செயல்பட்டு �வ்ற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும், கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயபலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள். ஜீவன ஸ்தானாதிபதி சனி பலம் பெற்றிருப்பதால், வீடு, மனை வாங்கிய விற்கும் தொழில், என்ஜினியர்கள் மொசைக்கல், நிலக்கரி, பெட்ரோல், மண்ணெண்ணெய், பலவித எண்ணெய் தொழில், விவசாயம் செய்தல், பல வேலையாட்களை வைத்து வேலைவாங்கும் யோகம் போன்றவை உண்டாகும்

 உண்ண வேண்டிய உணவுவகைகள்,

  மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீரை வகைகள், வெங்காயம், உருளை கிழங்கு, பரங்கி காய், வெள்ளரிக்காய், கோஸ், பீன்ஸ், அவரைக்காய், எலுமிச்சம், வால்நெட், ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருக்கும்.

 அதிர்ஷ்டம் அளிப்பைவை

 எண் - 1,2,3,9,10,11,12

 நிறம் - ஆழ்சிவப்பு

 கிழமை - செவ்வாய்

 கல்- பவளம்

 திசை - தெற்கு

 

No comments:

Post a Comment