வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். புராணத்தில் திருமாலின் கையில் உள்ளதும் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்! இன்னும் பல சக்கரங்கள் உள்ளன! காலச் சக்கரம் வாழ்க்கைச் சக்கரம் ராசிச் சக்கரம் நவாம்சச் சக்கரம் பொதுவாகச் சுழற்சியைக் கொடுப்பது எல்லாம் சக்கரம்தான். மனித உடம்பிலும் ஆறு சக்கரங்கள் இருந்து சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அதை மேலே உள்ள படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்), 3, 5,7,9,11 ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக் கொடுக்கும். பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான். சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்
No comments:
Post a Comment