திருமண நாள் குறிக்க கடைபிடிக்க வேண்டிய விதிகள்
1.திருமண நாள் அன்று அமாவாசை திதி இருக்க கூடாது
2.திருமண நாள் அன்று பிரதமை திதி இருக்க கூடாது
3.திருமண நாள் அன்று பெளர்ணமி திதி இருக்க கூடாது
4.திருமண நாள் அன்று அஷ்டமி திதி இருக்க கூடாது
5.திருமண நாள் அன்று நவமி திதி இருக்க கூடாது
6.திருமண நேரம் ராகு காலம் இருக்க கூடாது
7.திருமண நேரம் யமகன்டம் இருக்க கூடாது
8.திருமண நாள் அன்று ஞாயிற்றுக்கிழமை இருக்க கூடாது
9.திருமண நாள் அன்று செவ்வாய்க்கிழமை இருக்க கூடாது
10.திருமண நாள் அன்று சனிக்கிழமை இருக்க கூடாது
11.திருமண நாள் அன்று கரிநாள் இருக்க கூடாது
12.திருமண நாள் அன்று அவமா (ஒரு தினத்தில் மூன்று திதிகள்) இருக்க கூடாது
13.திருமண நாள் அன்று திரிதினஸ்புருக் (ஒரு திதி மூன்று நாட்கள்) இருக்க கூடாது
14.திருமண நாள் அன்று பரணி, கார்த்திகை, திருவாதிரை, புனர்பூசம், ஆயிலியம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி நட்சத்திரங்கள் இருக்க கூடாது
15.திருமண நாள் அன்று சுக்கிரன், குரு அஷ்தமனத்தில் இருக்க கூடாது
16.திருமண நாள் அன்று தனிய நாள் இருக்க கூடாது
17.திருமண நாள் அன்று (ஆண். பெண்) படுபட்சி இருக்க கூடாது
18.திருமண நாள் அன்று ஆண். பெண்களுக்கு சந்திராஷ்டமம் இருக்க கூடாது
19.திருமண நேரம் மேஷ லக்னம் இருக்க கூடாது
20.திருமண நேரம் சிம்ம லக்னம் இருக்க கூடாது
21.திருமண நேரம் விருச்சிக லக்னம் இருக்க கூடாது
22.திருமண நேரம் மகர லக்னம் இருக்க கூடாது
23.திருமண நேரம் மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம் இருக்க கூடாது
24.திருமண நாள் அன்று ஜென்ம நட்சத்திரம் இருக்க கூடாது
25.திருமண நாள் தாரபலம் (ஆண். பெண்) இருக்க வேண்டும்
26. வளர்பிறை பஞ்சமி முதல் கிருஷ்ண பட்சம் சப்தமி வரை திருமண நாள் யோகம் தரும் நாள்
No comments:
Post a Comment