jaga flash news

Monday, 2 December 2024

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா?

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா

காம உணர்ச்சி என்பது ராசிக்கு ராசி வேறுபடுமா? அல்லது ஒரு காலகட்டத்தில் இந்த உணர்ச்சி ஆட்டுவித்தல் என்பது மேலோங்கி நிற்குமா?

இதுபற்றி ஏற்கனவே நாம் போகஸ்தானம் குறித்துப் பேசியுள்ளோம். பொதுவாக இலக்கியங்களிலெல்லம் குறிப்பிடுவது மாதிரி கண்ணோடு கண் நோக்கினாள் என்று கண்ணைத்தான் முக்கிய காரணமாகச் சொல்வார்கள். சூரியன், சந்திரன் பார்வைக்குரிய கிரகங்கள். ஆனால், காம உணர்வுகளைத் தூண்டக்கூடிய கிரகம் சுக்ரன்தான். இதுதான் பாலியல் இந்த உணர்வுகளுக்கெல்லாம். அடுத்து, புணர்ச்சி, உணர்ச்சி, வேகம், செயல்பாடு இதற்கெல்லாம் உரிய கிரகம் செவ்வாய். எவ்வளவு நேரம், எப்படிப்பட்டது என்பதெல்லாம் நிர்ணயிப்பது செவ்வாய். இப்படி பல கிரகங்கள் அதில் அடங்கிக் கிடக்கிறது.

வாலிபத்தில் இருக்கும் காமம் கூட முறையாக செய்கிறது. ஆனால் வாலிபத்தை தாண்டி தனக்கு பிறந்த பெண்ணோ, பிள்ளையோ மணமுடிக்ககூடிய அளவிற்கு இருக்கும் போது கூட காம உணர்ச்சி அதிகரிப்பது ஏன்?

இதெல்லாம் பார்த்தீர்களானால் யவனம், இளமை, உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது, நரம்புகளைத் தூண்டக்கூடியது புதன். சிலருக்கு காலம் கடந்து கல்யாணம் நடக்கும், சிலருக்கு சீக்கிரம் நடக்கும். அது முக்கியம் கிடையாது. சிலருக்கு 55இல் இருந்து 75 வரை சுக்கிர திசை நடக்கும். அந்த நேரத்தில பார்த்தீர்களானால் காம உணர்ச்சி அதிகமா இருக்கும். முன்பே கூறியபடி, கண் பார்வை சூரியன், சந்திரன். அது பார்க்கும் போதே தூண்டுகிறது. ஆனால், சுக்கிரன்தான் காமத்திற்கு பிரதான கிரகம். அதனாலதான் சுக்கிரனில் இருந்து நீட்சமானாலோ, தவறான கிரகங்களில் சேர்ந்திருந்தாலோ முறையற்ற புணர்வுகளெல்லாம் நிகழும்
முன்பெல்லாம் புணர்ச்சியின் போது என்னோட மனைவியால ஈடுகொடுக்கவே முடியாது. ஆனால் இப்போது என்




மனைவிக்கு என்னால ஈடுகொடுக்க முடியவில்லை என்று சொன்னார். மூன்று வருடமா இந்தப் பிரச்சனை இருக்கிறது என்றும் சொன்னார்.

அவருக்கு பார்த்தீங்கன்னா, சனியும், புதனும் ஒன்றாக சேர்ந்து போகஸ்தானத்துல உட்கார்ந்த நிலையில் சனி திசை வந்துவிட்டது. சனியும், புதனும் 3ஆம் இடத்தில் சேர்ந்திருந்தா நக்குவது போன்றே இருக்கும். உயிர் குறி எழும்புவது, அதனோட வேகங்கள் இதெல்லாம் இருக்கும். ஏனென்றால் இந்த இரண்டுமே அலி கிரகங்கள். அலி கிரகங்கள் இரண்டும் சேர்ந்து போகஸ்தானத்தில் போய் சேரக்கூடாது.

தயவு செய்து எங்கேயும் போய் அலையாதீங்க. இதுக்கான சில உணவு வகைகளெல்லாம் இருக்கிறது. இப்ப சனிக்கு கம்பு, கேழ்வரகு, மக்காச் சோளம் அந்த மாதிரி உணவுகளை உட்கொள்ளுங்கள். பிறகு சனிக்கு திறந்தவெளியில அதிக நேரம் இருந்தால் நல்லது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மொட்டை மாடியில வாக்கிங் போங்க. திறந்தவெளியில் காற்று வாங்குங்க, அவித்த உணவுகளைவிட இயற்கை உணவுகளை எடுத்துக்குங்க அப்படீன்னு சொல்லி அனுப்பினேன்
சனி இயல்பான கிரகம். இயற்கையான கிரகம். அதனால் இயற்கை உணவுகள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்புறம் வந்தாரு. நல்ல மாற்றம் இருக்குங்க என்று சொன்னார்.

இதேபோல பெண்களுக்கும் ஏற்படும் இல்லையா?




ஆமாம், அவருக்கு சில பரிகாரங்களையும் சொல்வோம். பாதரசம், சில வேர்களுடைய சாறு, சில மூலிகைகளுடைய சாறுகளை கட்ட முடியும். அதாவது கட்டுகட்டுவது என்று சொல்வார்கள். அதை அணிந்துகொண்டு புணரும்போது, அதாவது முதுகுத் தண்டுவடம் முடியும் இடத்தில் அந்த மணியை நிறுத்திவிட்டு புணரும்போது புணர்ச்சி வேகம் அதிகரிக்கும். அதுமாதிரி சில பரிகாரங்கள் உண்டு.

கிரகங்களின் போக்கை உணர்ந்து, இப்போது என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். 

No comments:

Post a Comment