தனுசு ராசியில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை இருந்தால், அது ஒருவருடைய ஜாதகத்தில் பலவிதமான பலன்களைத் தரலாம். இது பொதுவாக ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி, மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த சேர்க்கை கல்வி, கலை, மற்றும் சமூக வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவும்.
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், ஒரு நபர் புத்திசாலியாகவும், ஆற்றல் மிக்கவராகவும், சமூகத்தில் பிரபலமாகவும் இருப்பார். இவர்கள் தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பார்கள். கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்வார்கள்.
சூரியன்:
சூரியன் ஒருவரின் ஆளுமை, தலைமைப் பண்பு, மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது. தனுசு ராசியில் சூரியன் இருப்பது, ஒருவரை தைரியமானவராகவும், தன்னம்பிக்கை உள்ளவராகவும் ஆக்கும்.
புதன்:
புதன் ஒருவரின் அறிவு, தொடர்பு, மற்றும் பேச்சுத் திறனைக் குறிக்கிறது. தனுசு ராசியில் புதன் இருப்பது, ஒருவரை புத்திசாலியாகவும், நல்ல பேச்சாளராகவும் ஆக்கும்.
சுக்கிரன்:
சுக்கிரன் ஒருவரின் காதல், அழகு, மற்றும் கலைத் திறனைக் குறிக்கிறது. தனுசு ராசியில் சுக்கிரன் இருப்பது, ஒருவரை கலைகளில் ஆர்வம் உள்ளவராகவும், சமூகத்தில் பிரபலமாகவும் ஆக்கும்.
இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால், ஒரு நபர் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், வெற்றியையும் அடைவார்.
Mon. 16, June, 2025 at 7.47 am.
ReplyDelete*சோதிடம் :*
*வேதாரம்பம் :*
சோதிடத்தில் இன்று *வேதாரம்பம்* பற்றிப் பார்க்கலாம்...!
*வேதாரம்பம் என்பது, படித்த வேதத்தை முறையாக அத்யயனம் செய்வதை வேதாரம்பம் என்பர்,
உத்தமமான காலத்தில் வேத அத்யயனம் செய்வது நல்ல பலனைத் தரும்.
அதமமான காலத்தில் வேத அத்யயனம் செய்தால் வேதம் பயின்றும் பிரயோஜனமில்லை.
இதற்கு, நம்மாழ்வார் *சாமவேத சாரம் எனப்படும் திருவாய்மொழி* பாசுரம் ஒன்று அருளியிருக்கிறார் ஶ்ரீ பரம புருஷன் பற்றி.
*உயர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
அயர்வுறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுது எழுஎன் மனனே !
என்று பாடினார்.
(இதன் விளக்கம் : *ஓம்* என்று தொகை எழூத்து வடிவமானது... பிரியும் நிலையில் *அ,உ,ம* என்று மூன்று எழுத்துக்களாகப் பிரியும்).
அவை எவ்வாறெனில்...
*உ* யர்வற உயர்நலம் எனவும், *ம* யர்வற மதிநலம் எனவும், *அ* யர்வுறும் அமரர்கள் அதிபதி எனவும் மாற்றி அமைத்து அருளியுள்ளார். என இதன் விரிவாக்கம் தொடர்கிறது.
நாம் சோதிடத்தில் வேதாரம்பம் பற்றி பார்க்கலாம் "!
*வேதாரம்பம் செய்ய உகந்த நட்சத்திரங்கள் :*
திருவோணம், புணர்பூசம், பூசம், மிருகசீர்ஷம், அவிட்டம், சுவாதி, சதயம், அனுஷம், திருவாதிரை, ஹஸ்தம், சித்திரை ஆகியவை *உத்தமம்.*
அசுவினி, ரோகிணி, ரேவதி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி இவை *மத்திமம்.*
*திதிகள் :*
துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, நவமி, தசமி, ஏகாதசி ஆகியவை *உத்தமம்.*
*திரயோதசி, சப்தமி *மத்யமம்.* மற்றவை *அதமம்.*
*வாரம் :*
புதன், குரு, சுக்கிரன் *உத்தமம்.*
ஞாயிறு, திங்கள் *மத்யமம்.*
செவ்வாய், சனி *அதமம்.*
*லக்கினம் :*
.
உபய ராசிகளான் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் *உத்தமம்.*
சர ராசிகளான மேஷம், கடகம், துலாம்,"மகரம் *மத்யமம்.*
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் *அதமம்.*
4−மிடம் மற்றும் 8−மிடம் சுத்தமாக இருப்பது அவசியம்.
*வேதத்தை அத்யயனம் செய்யக்கூடாத நாட்கள் :*
1. இரவில் திரயோதசி, சப்தமி, சதுர்த்தி ஆகிய திதிகள் இருந்தால், அன்று நள்ளிரவு வரை அத்யயனம் செய்யக் கூடாது.
2. பிரதோஷ காலத்தில் சிரவாராதனம் தவிர, வேத அத்யயனம் செய்யக் கூடாது.
3. மனக் கஷ்டம், வீட்டில் இடி விழுதல், சூரிய−சந்திர கிரஹணங்கள், சொந்த ஊரில் பூகம்பம், வானிலிருந்து கொள்ளிக்கட்டை விழுதல் ஆகிய காலங்களில் அன்று மூதல் − மூன்று நாட்கள் வேத அத்யயனம் செய்யக் கூடாது.
4. த௯ஷிணாயன புண்ய காலம், உத்தராயண புண்ய காலம், சைத்ர துலா விஷீ புண்ய காலங்கள், ஆஷாட சுக்கில ஏகாதசி, கார்த்தீக சுத்த ஏகாதசி, மன்வாதி புண்ய தினங்கள், யுகாதி புண்ய தினங்கள் ஆகிய நாட்களில் வேத அத்யயனம் செய்யக்கூடாது.
காரணம்... இக்காலங்களில் வேத அத்யயனம் செய்தால், *வேதம் மறந்து போகும் அல்லது கெடுதல் நேரிடும்.*
*மீண்டும் சந்திக்கலாம் !*
Jansikannan438@gmail.com