அபரிமிதமான பண வரவுக்கு வாஸ்துபடி காமதேனுவை வீட்டில் வைக்க சரியான திசை...
காமதேனு படத்தை வீட்டில் எந்த இடத்தில் எந்த திசை பார்த்து வைத்தால் வீட்டில் செல்வம் பெருகும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
பசுவை நாம் லட்சுமி கடாட்சம் பொருந்திய அமைப்பாகவும், பொன், பொருள் சேர்க்கை தரக்கூடிய அதிர்ஷ்டமாக பார்க்கிறோமோ அதே போல தேவலோகத்தில் அனைத்து பசுக்களின் தாயாக காமதேனு பார்க்கப்படுகிறது. காமதேனு என்பது சகல ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம், பொன், பொருள் யோகம் மற்றும் அபரிமிதமான பண வரவை தரக்கூடிய காமதேனு விளங்குகிறது. நாம் இதை கல்வி நிறுவனங்கள், ஜவுளி மற்றும் பண வரவு அதிகம் உள்ள கடைகளில் பார்த்திருப்போம். இதற்கு காமதேனு தரக்கூடிய பலன்களே முக்கிய காரணமாகும். அந்தளவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கும். எனவே காமதேனு படத்தை வீட்டின் எந்த இடத்தில் எந்த திசை பார்த்து வைக்க வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
காமதேனு அமைப்பு
காமதேனு கன்றுடன் இருப்பது போன்ற அமைப்பை வாங்க முயற்சிக்கவும். அதிலும் குறிப்பாக கன்று காமதேனுவின் மடியில் பால் குடிப்பது போல் இருந்தால் கூடுதல் சிறப்பு. இப்படியான காமதேனு படம் இருந்தால் வீட்டிற்கு அள்ள அள்ள குறையாத செல்வமும் வளமும் கிடைக்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் நல்ல நிலையில் இருப்பார்கள். ராஜயோக வாழ்க்கை வாழ்வீர்கள். லட்சுமி கடாட்சம் பொருந்திய படமாக தேடி வாங்குங்கள்.
காமதேனு நன்மைகள்
காமதேனு படத்தை வீடு மற்றும் அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளலாம். வீட்டில் மகிழ்ச்சியையும் அலுவலகத்தில் தொழில் முன்னேற்றத்தையும் தரும். நாம் வைக்கும் இடத்தை பொருத்து காமதேனு செயல்படும். வீட்டில் வைத்தால் கணவன் - மனைவி உறவு, ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சண்டை இருக்காது. பிரச்னை இருக்கும் குடும்பத்தின் வீட்டில் இந்த படத்தை மாட்டினால் பிரச்னை குறையும். சுபகாரியங்கள் தடையின்றி நல்லபடி நடக்கும்.
அலுவலகத்தில் காமதேனு படம் வைத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும், லாபம் இரட்டிப்பாகும்.
படம் உடைந்து அல்லது கீறல் இருக்க கூடாது. வீட்டில் ஏற்கெனவே இருக்கும் படம் பழசாகி விட்டால் அதை மாற்றிவிடவும்.
காமதேனு படம் வைக்கும் திசை
காமதேனுவின் தலை வீட்டிற்குள் நோக்கியவாறு வைப்பது நல்லது. வீட்டில் வடக்கு திசையில் காமதேனு படத்தை மாட்டுங்கள். வட மத்திய பகுதியில் அமைக்கவும். வட கிழக்கு திசையிலும் மாட்டிக் கொள்ளலாம். இப்படி வைத்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.
குருவின் ஆதிக்கம் பெற்றது வடக்கு பகுதி. அங்கு நாம் காமதேனு படம் வைக்கும் போது அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.
வட கிழக்கு திசையில் காமதேனு படம் மாட்டுவதால் பண வரவு, தெளிவான சிந்தனை, எண்ண ஓட்டம் கிடைக்கும்.
தென் மேற்கு திசையில் காமதேனு படத்தை வைக்காதீர்கள். அப்படி செய்தால் வீட்டிற்கு வரவு குறைந்து செலவு அதிகமாகும்.
தென் கிழக்கில் மாட்டினால் ஆரோக்கிய சீர்கேடு, வம்பு வழக்கு, கணவன் மனைவி உறவில் பிரச்னை ஏற்படும்.
காமதேனு படத்தை யாருக்கும் பரிசளிக்காதீர்கள். அப்படி செய்தால் உங்கள் செல்வம் குறையும்.
உங்கள் அருகிலுள்ள மலிவான வீடுகள் – உங்களுக்கு பொருந்தக்கூடிய விளம்பரங்களை பாருங்கள்
ரியல் எஸ்டேட் | தேடல் விளம்பரங்கள்
|
Sponsored
கிழக்கு தாம்பரம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு உள்ளன
Flats Sale
|
Sponsored
துபாயில் வில்லா விற்பனைக்கு உள்ளது (விலைகளைப் பாருங்கள்)
Villas in Dubai | Search ads
|
Sponsored
மாடுலர் கிச்சன் விலை 2025 (விருப்பங்களைப் பார்க்கவும்)
Modular Kitchen | Search ads
|
Sponsored
வடபழனியில் 2BHK பிளாட் விற்பனைக்கு உள்ளது (விலைகளைச் சரிபார்க்கவும்)
2BHK Flats For Sale in Vadapalani | Search Ads
|
Sponsored
नोएडा में बिक्री के लिए 3बीएचके फ्लैट की कीमतें आपको आश्चर्यचकित कर सकती हैं!
Flats For Sale in Noida
|
Sponsored
Most Searched
சித்திரை திருவிழா
ராகு கேது பெயர்ச்சி
தமிழ் புத்தாண்டு ராசிபலன்
பங்குனி உத்திரம்
திருமண பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்
Kamdhenu cow
Kamdhenu Vastu tips
HerZindagi
உணவு
ஸ்டைல்
ஆரோக்கியம்
பெண்கள் ஸ்பெஷல்
HZ குழுவினர்
The Daily Jagran
About Us
T&C
சமூக ஊடகத்தில் எங்களோடு இணையவும
HerZindagi
Copyright © 2025 Her Zindagi
This Website Follows The DNPA’s Code Of Conduct
For Any Feedback Or Complaint, Email To compliant_gro@jagrannewmedia.com
Close ad
Ad
No comments:
Post a Comment