பிரிந்துள்ள தம்பதி ஒன்று சேர உதவும் குறுமிளகு பரிகாரம்! கணவன் மனைவி கட்டாயம் செய்ய வேண்டியது.. செம
கணவன் மனைவி இடையே புரிதல் என்பது மிக அவசியமாகும். இந்த புரிதல் இல்லாமல்தான், சண்டை, சச்சரவு, பிளவு ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்றுவிடுகிறது. சிலசமயம், ஈகோ காரணமாகவே, வன்முறை சம்பவங்களும் நடந்துவிடுகின்றன. இதனால் குழந்தைகளின் எதிர்காலம்தான் வீணாகின்றன. சரியான புரிதல் இல்லாததால் பிரிந்து வாழும் தம்பதி, மீண்டும் ஒற்றுமையுடன் இணக்கமாக வாழக்கூடிய எளிய பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
ஒருவரது ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாவது இடமும் பலமிழந்து காணப்பட்டாலும், எட்டாம் இட அஷ்டம ஸ்தானம் கெட்டுப்போனாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது என்பார்கள்.
முரண்பாடுகள் - பிணக்குகள்
கணவன், மனைவிக்குள் நிலவும் முரண்பாடுகளை சரிசெய்ய, உப்பு + மிளகு இரண்டும் சிறந்த பரிகாரமாக உள்ளது. பிறரை வசியம் செய்யக்கூடிய தன்மையும், அன்பால் ஈர்க்கும் சக்தியும் இந்த பொருட்களுக்கு உண்டு.
கல் உப்பு மற்றும் மிளகிற்கு எதிர்மறை எண்ணங்களை மாற்றும் சக்தி இருக்கிறது.. வீட்டில் நிலவும் எதிர்மறை ஆற்றல்களை விரட்டி, தெய்வ ஆற்றலை பரப்பக்கூடிய தன்மை கொண்டதாகும். எனவேதான், தாந்திரீகம், மாந்திரீகம் போன்றவற்றில் உப்பு, மிளகு இரண்டுமே தவிர்க்க முடியாதவையாக உள்ளது..
குறுமிளகுகள்
அந்தவகையில், தம்பதிகளுக்குள் நிலவும் பூசலை அகற்ற, ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகம் தண்ணீரை கொள்ள வேண்டும். முழு மிளகாக 27 எண்ணிக்கையில் எடுத்து கொள்ள வேண்டும். அதேபோல 27 முழு கல் உப்பையும் எடுத்து கொள்ள வேண்டும்.
தங்களது இணையின் பிணக்குகள் நீங்க வேண்டும் என்று மனதார வேண்டி, ஒவ்வொரு கல் உப்பு, மிளகையும் தண்ணீரில் போட வேண்டும். இறுதியாக டம்ளர் தண்ணீரை ஓடும் நீரில் அல்லது சிங்க்கில் கொட்டிவிடலாம். இதனால், விரைவில் பலன் கிடைக்கும்.
பெரியவர்கள் ஆசீர்வாதம்
பிரிந்துள்ள தம்பதிகள், உறவுகளுடன் இணைந்து சிவபெருமானுக்குரிய சோமவார விரதத்தை மேற்கொள்ளலாம். முழுமையாக விரதமிருக்க முடியாவிட்டாலும், நீர், பழச்சாறு உட்கொண்டு, இந்த விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
முன்பு வீட்டிலுள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, தொடர்ந்து 21 திங்கட்கிழமைகளில் இந்த விரதத்தை முடிக்கும்போது, தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்படும்.. மாங்கல்ய தோஷம், களத்திரதோஷம் இருந்தாலும் நீங்கிவிடும். இந்த விரத நாட்களில் சிவ-பார்வதிக்குரிய மந்திரங்களை ஜெபிக்கலாம்.
அர்த்தநாரீஸ்வர மந்திரம்
ஓம் ஹும் ஜும் சஹ அர்த்தநாரீஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா இந்த மந்திரத்தை சொல்வதன் மூலமும் பிணக்குகள் தீர்ந்து புரிதல் உண்டாகும். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வணங்கி வந்தாலும் விரைவில், தம்பதிகள் ஒன்று சேரலாம்.
அதேபோல, தினமும் அதிகாலையில் பூஜையறையில் கிழக்கு திசையில் அமர்ந்து ''ஓம் சௌம் பார்வதி தேவி நமஹ'' என்ற மந்திரத்தை 54 அல்லது 108 முறை சொல்வதாலும் பலன் கிட்டும்.
மந்திரங்கள் - ஜெபம்
''ஓம் க்லீம் ஸ்ரீ ரதி தேவி சமேத ஸ்ரீ காமதேவாய நமஹ'' என்று 3 முறை பிரார்த்திப்பதாலும் தம்பதிக்குள் சண்டைகள் விலகி ஒற்றுமை நிலவ தொடங்கும். அதேபோல, தம்பதிக்குள் ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம்.
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள ஸ்ரீவைகுண்ட நாராயணப் பெருமாள் கோவில், திருவாஞ்சியம் கோவில்களுக்கு சென்று வழிபடலாம். ரோஜா நிறத்தில் இருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து தினமும் பூஜை செய்தால் கணவன், மனைவி ஒற்றுமை அதிகமாகும்.
No comments:
Post a Comment