jaga flash news

Monday, 12 November 2012

நிம்மதியற்ற திருமண வாழ்க்கை


நிம்மதியற்ற திருமண வாழ்க்கை




ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடும், நவகிரகங்களில் செவ்வாய், சுக்கிரனும் பலமாக அமையப்பெற்றால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும். 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானம் என்பதினால், பெண்கள் ஜாதகத்தில் 7,8 ஆகிய பாவங்களில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் 7,8 க்கு அதிபதிகள் நீச்சம், அஸ்தங்கம் பெறாமல் செவ்வாய் சுக்கிரன் தனித்து அமையப் பெற்றால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும்.

அதுவே, 7ம் வீட்டில் 2க்கும் மேற்பட்ட கிரகங்கள் அமையப் பெற்று 7,8 க்கு அதிபதிகள் பாவிகள் பார்வையோ, சேர்க்கை பெற்றோ, செவ்வாய், சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றோ, இருந்தால் மணவாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட கிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது பிரிவு, பிரச்சினைகள், சிக்கல்கள் உண்டாகும். 7, 8 க்கு அதிபதிகள் நீசம் பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ இருந்தாலும் 7ம் அதிபதியும் செவ்வாய், சுக்கிரனும், சேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம் மூலத்தில் அமையப் பெற்றிருந்தாலும், செவ்வாய், சுக்கிரன், சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அந்தங்கம் பெற்றிருந்தாலும் மண வாழ்க்கை அமையாது. அப்படி அமைந்தாலும் நிலைக்காது. நீசம் பெற்று 7ம் அதிபதி அமைந்தாலும் நிலைக்காது. நீசம் பெற்ற 7ம் அதிபதி பலமான நீசபங்க ராஜயோகம் பெற்றிருந்தால் மணவாழ்வில் தொடக்கத்தில் சில பிரச்சினை ஏற்பட்டு, அதன் பின்னர் தான் மணவாழ்க்கை சிறப்படையும்.

No comments:

Post a Comment